செருப்பால அடிப்பேன்... உனக்கு நல்ல சாவே வராது.. கொந்தளித்த பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: சுச்சி லீக்ஸ் சம்பவம் குறித்து பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து பேசி வருகிறார். அவருக்கு கார்த்திக் குமார், தனுஷ் பணம் கொடுத்து பேச வைக்கின்றனர். எனக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கும் தனிப்பட்ட முன்விரோதம் என்பது இல்லை. ஆனால் அவர் நடுரோட்டில் அவமானப்பட்டு சாகவேண்டும் என்று சுசித்ரா அந்த பேட்டியில் கடும் ஆத்திரத்தில் பேசி உள்ளார்.

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுசித்ரா, சுச்சி லீக்ஸ் விவகாரத்தின் போது இணையத்தில் பலர் பரபரப்பாக பேசினார்கள். ஆனால், அதன் பிறகு அனைவரும் அதுபற்றி பேசுவது இல்லை. ஆனால், இந்த பயில்வான் ரங்கநாதன் மட்டும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுச்சி லீக்ஸ் சுசித்ரானு பேசிக்கிட்டு இருக்காரு, அப்போ தனுஷ் மற்றும் கார்த்திக் காசு கொடுத்து என்னைபற்றி பேச சொல்லுறாங்களா? என்று கேட்டார்.

Bayilvan ranganathan bold interview about Suchi Leaks Suchitra

பிட்டு பட ஏஜெண்ட்: நான் சினிமாவில் இருபது வருஷமா பாடகியாக இருந்து இருக்கிறேன் இதுவரை நான் ஒரு முறைக்கூட பயில்வானை சந்தித்தது இல்லை. அவருக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை. அவர், பிட்டு படங்களுக்கு நடிகைகளை அரேஞ்ச் பண்ணி கொடுக்கும் ஏஜெண்டாக பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்த விஷயம் தனக்கு நன்றாகத் தெரியும். அந்த காலகட்டத்தில் கேரளாவில் மட்டுமே இருந்த பிட்டுப் பட கலாச்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தவரே பயில்வான் தான் என்றும், அவர் ஒரு பத்திரிக்கையாளரே இல்லை அவர் ஒரு பிட்டு படத்திற்கு ஆட்களை பிடித்துக்கொடுத்த மாமா பையன் என்று பயில்வானை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

பயில்வான் ரங்கநாதன்: இதற்கு பதில் அளித்துள்ள பயில்வான் ரங்கநாதன், சுசித்ரா ஒரு கிரிமினல் பைத்தியம், அது சொல்வதை எதற்குமே ஆதாரம் இல்லை, பிப்ரவரி மாதம் எனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி பேட்டி எடுக்கவேண்டும் என சொல்லி இருந்தது. நான் அதை கண்டுக்கொள்ளவில்லை. இதனால் தான் என்னை பற்றி தவறாக பேசுகிறது. சுசித்ரா என்னை பத்திரிக்கையாளர் இல்லை என்று சொல்லி இருக்கிறார். அவரை செருப்பால் அடிப்பேன், இந்த வார நெற்றிக்கண் பத்திரிக்கையை பாருங்க அதற்கான ஆதரம் இருக்கு.

நல்ல சாவே வராது: அதே போல, நான் பிட்டு படத்திற்கு நடிகை அனுப்பினேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு ஆதாரம் இருக்கா, அப்படி அவர் நிரூபித்துவிட்டால், நான் யூடியூபில் பேசுவதை நிறுத்திவிடுகிறேன், என் போனில் அது போன்று ஒருவரின் நம்பர் இருக்கிறதா என்று பாருங்கள் ஒருவர் மீது குற்றம் சாட்டலாம். ஆனால், அபாண்டமாக அவர் மீது பழிப்போடக்கூடாது, அவளுக்கு எல்லாம் நல்ல சாவே வராது.

பேட்டியில் என்னை அசிங்க அசிங்கமாக திட்டிவிட்டு, நேற்று எனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். அதாவது, கார்த்திக் குமார், வாய்ஸ் தான் அது, ஆனால், அவர், அது நான் இல்லை என்று பொய் சொல்லுகிறார் என்று சொல்லி இருக்கிறார். மானம், சூடு சொரணை இருக்கும் பெண், என்னை திட்டிவிட்டு எனக்கே மெசேஜ் அனுப்புவாளா? அப்போ சுசித்ரா என்ன ரகத்தை சேர்ந்தவள்.

நான் ரெடி: இப்போ கூட நான் சொல்லுகிறேன், என்னிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கு, அதே போல, சுசித்ராவிடம் ஆதாரம் இருந்தால் கொண்டுவரட்டும், நான் அவருடன் நேருக்கு நேர் விவாதிக்கிறேன் தயாராக இருக்கிறேன். மடியில் பயம் இருந்தால் தான்… வழியில் பயம் இருக்கும் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார். இவரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X