ஜாய் 'ஓட்டல் சாப்பாடு' பிடிக்கலனா போயிடுவாங்க.. மோசமாக பேசிய பயில்வான்.. விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டா என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளிப்படுவதாக மிரட்டியதால் நான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு ஜாய் இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்து வரும் நிலையில், Tamil Movie World Media யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த 2023 ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், தான் கருவுற்ற நிலையில், தன்னிடமிருந்து விலகியதாக ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்திலும் புகாராக அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டது. அதில், விசாரணை முடிந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

மாதம்பட்டி ரங்கராஜ்: இதையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிறிஸ்டில்லாவை திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டதாகவும், குழந்தை தன்னுடையது தான் என ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதை திட்டவட்டமாக மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ், நான் ஜாயை தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. ஜாய் என்னை மிரட்டியதால் திருமணம் செய்து கொண்டேன் என அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
ஜாய் பேட்டி: இதுகுறித்து, ஜாய் கிரிஸில்டா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், மிரட்டி திருமணம் செய்து கொள்வதற்கு அவர் சின்ன குழந்தையா? அவர் எப்போதுமே, ஐ லவ் யூ பொண்டாட்டினு தான் மெசேஜ் அனுப்புவார். அந்த குழந்தையின் பிறப்பை கொச்சைப்படுத்தி பேசி இருக்கிறார். அந்த குழந்தையின் சாபம் உன்னையும், உன் குடும்பத்தையும் சும்மாவிடுமா, என ஜாய் கிரிஸில்டா கண்ணீருடன் பேசி உள்ளார்.
ஜாய் சொல்வது எல்லாமே பொய்: தற்போது பயில்வான் ரங்கநாதன் அளித்திருக்கும் பேட்டியில், விஷயத்தில் ரங்கராஜ் DNK டெஸ்ட் எடுத்து அந்த குழந்தை என்னுடைய குழந்தை என்றால், அந்த குழந்தைக்கு முழுப்பொருப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என கூறியிருக்கிறார். ஆனால், ஜாய் மகளிர் ஆணையத்தில் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க வேண்டாம் என்று சொன்னார். அது என்னுடைய குழந்தை தான் என ஒத்துக்கொண்டார் என ஜாய் கூறியிருக்கிறார். அதற்கு என்ன ஆதாரம் ஜட்ஜ்மெண்ட் காப்பி வந்துவிட்டதா? இப்படி ஜாயின் பேசும் அனைத்தும் பொய்யான தகவல்களாகவே இருக்கிறது.
ஓட்டல் சாப்பாடு: இதில், முதல் குற்றம் ஜாய் மீது தான் இருக்கிறது, ரங்கராஜுக்கு ஏழு பெண்களுடன் தொடர்பு இருக்கு என்று அவர் தான் கூறினார். ஏழு பெண்களுடன் தொடர்பு வைத்து இருக்கும் ஒருவருடன் எப்படி அவர் குடும்பம் நடத்தி இரண்டு முறை கருவுற்றார் என்பது தெரியவில்லை. ஜாய் செய்து கொண்டது திருமணமா? அந்த திருமணமே செல்லாது மாலை மாற்றிக் கொண்டால் அது எப்படி திருமணமாகும். சிலர் ஓட்டல் சாப்பாட்டை விரும்பி சாப்பிடுவார்கள். அதற்காக ஓட்டலிலேயே நிரந்தரமாக இருக்க மாட்டாங்க, இன்னைக்கு ஒரு ஓட்டல், நாளைக்கு ஒரு ஓட்டல் என்று மாறிக்கொண்டே இருப்பார்கள். அவரின் மனைவியும் கணவர் வாய்க்கு ருசியாக சாப்பிடட்டும் என்று விட்டு இருப்பாங்க, இப்போ, பிடிக்கால போய்விட்டார் என்று மிகவும் மோசமாக பேசி இருந்தார். உண்மையில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டா விஷயத்தில் இரண்டு பேர் மீதும் தவறு இருக்கிறது. அதற்காக மிகவும் கொச்சையாக ஓட்டல் சாப்பாடு என்று பேசுவது எல்லாம் சரியில்லை என பலர் இணையத்தில் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











