இயக்குநர் விசு முதுகை தடவி பூணூல் இருக்கானு பாப்பாரு.. சினிமாவில் சாதி இருக்கு.. பயில்வான் பளீச்!

சென்னை: பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து, ஆகஸ்ட் 11ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமான நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, நடிகை மீரா மிதுனை டெல்லி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலில் பேசிய உள்ளார்.

மாடல் அழகியான மீரா மீதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானதை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய செய்திகளை பகிர்ந்து வந்தார். தமிழ் சினிமாவில் உள்ள பட்டியலின இயக்குநர்கள் மற்றும் நடிகர் நடிகைகளை வெளியேற்ற வேண்டும் என்றும் சாதி வெறியுடன் பேசி இருந்தார் மீரா மிதுன். அவரது இந்த வீடியோ பரபரப்பை கிளப்பிய நிலையில் அவர் மீது தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் பதிவானது. மேலும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க என புகார் அளித்தார்.

Meera mithun Bayilvan Ranganathan
Photo Credit:

நடிகை மீரா மிதுன்: அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் கைது செய்தார்கள். புழல் சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுன் அதன் பின்னர், ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின் நேரில் ஆஜராகாமல், போலீசாருக்கே சவால் விடும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டு தலைமறைவானார்.

டெல்லியில் கைது: 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் அவரை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஆகஸ்ட் 11 ஆம் தேதி மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, டெல்லியில் இருந்த மீரா மிதுனை டெல்லி போலீசார் கைது செய்து காப்பகத்தில் வைத்துள்ளனர். இதுபற்றி பேசிய பயில்வான் ரங்கநாதன், மீரா மிதுன் ஒரு மாடல் அழகிதான், ஒரு சில படத்தில் நடித்து வந்த அவர் திடீரென, மற்ற நடிகைகள் பற்றி வாய்க்கு வந்ததை பேசினார். கேரள நடிகைகள் பற்றியும் வாய்ப்பு வந்ததை பேசியதால், கேரளாவிலும் அவர் மீது வழக்கு இருக்கு.

சினிமாவில் சாதி: மீரா மிதுன் சொல்வது போல, சினிமாவில் சாதி பார்க்கப்படுகிறது. பட்டியலினத்தை சேர்ந்த இயக்குநர்கள், அந்த சாதியில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். மதுரையைச் சேர்ந்த இயக்குநர்கள் அவர்கள் சாதியை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். அதே போல ஐய்யர், ஐயங்கார் இயக்குநர்கள் அவர்களுன் சாதியினருக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். எனக்கு தெரிந்து இயக்குநர் விசு முதுகில் கை போட்டு, பூணூல் இருக்கா என்று பார்த்துத்தான் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார். இதனால், சினிமாவில் சாதி பாகுபாடு இருக்கிறது என்று உண்மை தான் என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X