தேவயானி இக்கட்டில் இருந்தார்.. ஏன் கல்யாணமாச்சு அந்த கதையை சொல்லவா? ராஜகுமாரனை எச்சரித்த பயில்வான்!

சென்னை: நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரன் பல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகிறார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில், ஜெயிலர் படம் பார்த்தேன், அதில், ரத்தம், வன்முறை என படம் கொடூரமாக இருந்தது, இன்டர்வலிலேயே வெளியே வந்துடலாம்னு இருந்தது. இதுல படம் 600 கோடி வசூல் பண்ணி இருக்குனு சொல்றீங்க, ப்ளூ பிலிம் எடுத்தா கூட நல்லா வசூல் பண்ணும், இதுல பார்ட் 2 வேற எடுக்குறாங்க என பேசி இருந்தார். இது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் பயில்வான் ரங்கநாதன் Gem Cinemas யூடியூப் சேனலுக்கு அளித்து இருக்கும் பேட்டியில்,

அருமை தம்பி ராஜகுமாரன் நீ எத்தனை வெற்றி திரைப்படங்களை கொடுத்து இருக்கீங்க, எத்தனை படங்களை இயக்கி இருக்கீங்க, எத்தனை தயாரிப்பாளர்களை வாழ வைத்தீங்க, இப்படி எதுவும் செய்யாதபோது எதற்காக இந்த வேலையை செய்றீங்க. அன்பு சகோதரி தேவயானியின் சம்பாத்தியத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு, ஒரு 10 பைசாவை கூட சம்பாதிக்கவில்லை. தேவயானி சம்பாதித்து தான் உங்க ஊரில் ஒரு பண்ணை வீடு கட்டி இருக்கிறார். தேவயானி தான் இரண்டு மகள்களையும் படிக்க வைக்கிறார். இப்படி எந்தவித சம்பாத்தியமும் இல்லாமல் பொண்டாட்டியின் சம்பாத்தியத்தில் காலத்தை ஓட்டும் நீ, மற்றவர்களை குறை சொல்வதற்கு தகுதியே இல்ல.

Devayani rajakumaran Bayilvan Ranganathan
Photo Credit:

கல்யாண கதையை சொல்லவா: உன் முகத்தை கண்ணாடியில் பார்த்து இருக்கீங்களா? நீ தேவயானியின் கால் தூசிக்கு வருவியா? அன்னைக்கு தேவயானி ஒரு பெரிய இக்கட்டில் இருந்தார். அந்த கதையே சொல்லட்டுமா? இயக்குனர் களஞ்சியம் கதையை சொல்லட்டுமா? இயக்குனர் களஞ்சியத்தை தேவயானியின் அம்மா மருமகனே என்று கூப்பிட்டதை என் காதால் கேட்டு இருக்கிறேன், பார்த்து இருக்கிறேன். எதையும் நான் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. உண்மையிலேயே தேவயானி வடநாட்டிலிருந்து வந்தாலும் தமிழ் பெண் போல அதற்கு தகுந்தபடி மாறிவிட்டார்.

என்ன தகுதி இருக்கு: தேவயானிக்கு பட வாய்ப்பு வரவில்லை என்றதும், ஒரு ஸ்கூலில் வேலைக்கு சென்றார். நீ எங்காவது வாட்ச்மேன் வேலைக்கு போக வேண்டியது தானே? சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டியது தானே? ஜெயிலர் படத்தைப் பற்றி பேசுவதற்கு உனக்கு என்ன அருகதை இருக்கிறது. பெரிய ஆட்களை திட்டினால், பெரிய ஆளாகிவிடலாம் என நினைக்கிறாயா? முதல் முறை நீ பேட்டியளித்த போதே, இது வேண்டாம் அடக்கி வாசி, இதற்கு மேல் சினிமாவில் யாரும் உங்களை அழைக்க மாட்டார்கள் என்றேன். இப்படி சர்ச்சையாக பேசினால் பெரிய ஆளாகி முடியாது. நான் சர்ச்சையாக பேசுவேன். ஆனால், அதற்கு எல்லாம் ஆதாரம் இல்லாமல் பேச மாட்டேன்.

நாக்கை அறுத்துவிடுவேன்: மற்றவர்களை விரலை நீட்டி குற்றவாளி என்று சொல்லும் போது, மற்ற நான்கு விரல்களும் நீ தான் குற்றவாளி என்றும், லூசு பையா என்று சொல்வதை மறந்து விட்டீங்களா? ராஜகுமாரன் நான் உங்களுக்கு கடைசியாக எச்சரிக்கிறேன். எதற்கு மேல் நீங்க யாரைப் பற்றி யாவது தவறாக பேசினீர்கள் என்றால், நாக்கை இழுத்து வைத்து அறுத்து விடுவேன், சினிமாவில் சம்பாதித்துவிட்டு, சினிமாக்காரனாக இருந்து கொண்டு இப்படி பேசுவது சரியில்லை என பயில்வான் ரங்கநாதன் ராஜகுமாரனை கடுமையான வார்த்தையால் தாக்கி பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X