பல நடிகையுடன் காதல்..ஷூட்டிங்கில் இயக்குநருடன் சண்டை.. திருந்தாத விஷால்.. பயில்வானின் வன்மப்பேச்சு!
சென்னை: ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்த 'மகுடம்' படத்தின் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதால், இப்படத்தினை விஷாலே இயக்கி வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தீபாவளி அன்று விஷால் அறிவித்து இருந்தார். கதை மட்டுமே ரவி அரசு எனவும், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் விஷால் எனவும் படத்தின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ரவி அரசு இடமிருந்து படத்தினை விஷால் இயக்க ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே படப்பிடிப்பினை தொடங்க முடியும் என்பதால், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
இதுகுறித்து, Metro Mail யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார். அதில், ரவி அரசுக்கும் விஷாலுக்கும் படப்பிடிப்பில் காட்சி அமைப்பதிலும், வசனத்தை அப்படி மாற்றுங்கள் இப்படி மாற்றுங்கள் என அடுத்தடுத்து கதையில் மூக்கை நுழைத்ததால், கடுப்பான ரவி அரசு நான் இயக்குனரா நீ இயக்குனரா என கேட்டிருக்கிறார். இப்படி இருவருக்கும் சண்டை வர திடீரென தீபாவளி அன்று மகுடம் படத்தை தானே இயங்குவதாக அறிவித்துவிட்டு படத்தின் வேலைகளை தொடங்கி இருக்கிறார் விஷால். இது குறித்து ரவி அரசு இயக்குனர் சங்கத்திடம் புகார் அளித்ததால், மகுடம் படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷால்: ஒரு நடிகர் என்பவர் தனக்கென்று ஒரு எல்லை கோட்டை வைத்துக்கொள்ள வேண்டும் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை செய்ய வேண்டும். கதை கேட்டு கதை பிடித்ததால் தானே அந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். பின் அதை மாற்று இதை மாற்று என்று சொல்வது தவறானது. இப்படித்தான் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை நானே இயக்குவதாக அறிவித்தார். ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவே இல்லை. இப்படித்தான் எல்லா விஷயத்திலும் முதிர்ச்சி இல்லாதவராக இருக்கிறார் விஷால். நடிகர் சங்க கட்டிடத்தை விரைவாக கட்டி முடிப்பேன் என சொன்னார். ராதாரவியும் சரத்குமாரும் நடிகர் சங்கம் கட்டிடத்தை கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கி கட்டலாம் என்றார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஷால், நடிகர்கள் இருக்கும் போது எதற்காக வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்றார்கள்.
காதலித்து பல பெண்களை ஏமாற்றினார்: ஆனால், விஷாலும் இப்போது வங்கியில் கடன் வாங்கித்தான் நடிகர் சங்கத்தை கட்டுகிறார்கள். அதே போல 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த போது, சங்க நிதியை சுருட்டி மொத்த கஜானாவையும் காலி செய்துவிட்டார். அதனால் தான் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்று தனியாக ஒரு சங்கம் தொடங்கப்பட்டது. அதேபோல காதலித்தும் பல நடிகைகளை அவர் ஏமாற்றி இருக்கிறார். அவர் காதலித்து ஏமாற்றிய ஒரு நடிகரின் மகள் திருமணம் செய்து கொண்டு நல்லபடியாக செட்டில் ஆகிவிட்டார். ஒரு நடிகை கேரளாவில் இருக்கிறார். இப்பொழுது ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி இருக்கிறார். நடிகர் சங்க கட்டிடம் ஜனவரியில் திறக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால்,ஜனவரியில் விஷாலுக்கு திருமணம் நடக்கும் என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











