2 இல்ல மூன்றாவது திருமணம்?.. சரியான விஷ ஊசி.. பிரியங்கா குறித்து பயில்வான் ரங்கநாதன் சர்ச்சை பேச்சு!

சென்னை: கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் திறமைசாலியான பிரியங்கா தேஷ்பாண்டே நேற்று திடீரென்று 2-ஆவது திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டானது. அந்த வீடியோவைப் பார்த்த பலர் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில், சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், இது இரண்டாவது திருமணமில்லை மூன்றாவது திருமணம் என்று வீடியோவில் பேசி உள்ளார்.

விஜய் டிவியில் ஆஸ்தான தொகுப்பாளினியான டிடிக்கு அடுத்து, அந்த சேனலின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார் பிரியங்கா தேஷ்பாண்டே. சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், தாயின் அரவணைப்பில் வளர்ந்து, படிப்படியாக கஷ்டப்பட்டு இன்று இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இவர், விஜய் டிவியில் பணியாற்றி வந்த பிரவீன் குமார் என்பவரை 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 6 ஆண்டு காலம் வாழ்ந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

அதன் பின் அம்மா மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வந்த பிரியாங்காவிற்கு இன்று திடீரென வசி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் பிரியங்காவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமண வீடியோ இணையத்தில் வெளியான பிறகுதான், இவர்களின் திருமண விஷயமே பலருக்கு தெரிந்துள்ளது. பிரியங்காவை திருமணம் செய்து கொண்ட வசி ஒரு டிஜே என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Priyanka deshpande marriage Bayilvan Ranganathan

3வது திருமணமா?: இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், 2nd Floor Tamil என்ற யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், பிரியங்கா விஜய் டிவியின் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்கா தேஷ்பாண்டே என்ற பெயரை கேட்டதுமே வட இந்திய பெண் என்பது நமக்கு நன்றாகவே தெரிந்துவிடும். பிரியங்காவை பொறுத்தவரை அவர் அம்மாவிற்கு செல்ல பிள்ளை, அவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்பார்கள். பிரியங்கா விஜய் டிவியில் வேலை செய்து கொண்டு இருந்த போது, அதே நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த தயாரிப்பாளர் சாதிக் என்ற இஸ்லாமியரை காதலித்து. அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் பிரிந்தனர்.

Priyanka deshpande marriage Bayilvan Ranganathan

சாணக்கியத்தனம்: சிரித்துக்கொண்ட விஷ ஊசி போடுவதில் சாணக்கியம் தனம் படைத்தவர் பிரியங்கா, அதே போல சிண்டுமுடிவதிலும் திறமையானவர். நான் பிரியங்காவை பற்றி எதுவும் தெரியாமல் பேசவில்லை இரண்டு மூன்று முறை நான் பிரியங்காவை நேரடியாக சந்தித்து இருக்கிறேன். அவர் கொஞ்சம் குசும்பான பார்ட்டி தான், அப்படி குசும்பான பார்ட்டியை எப்படி நாம் டீல் செய்ய வேண்டும் என்று, நானும் குசும்புத்தனமாகவே அவரை அணுகினேன். அவர் ஒரு அடி தாண்டினால், நான் பத்தடி தாண்டி விடுவேன். ஒருமுறை என்னை பற்றி ஏதாவது கிசுகிசுக்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டார். அப்போது நான் உங்களுடைய திருமண வாழ்க்கை என்று பேச தொடங்கினேன் உடனே போதும் போதும், நான் கேட்டது தப்பு தான், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டார் என பயில்வான் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

Priyanka deshpande marriage Bayilvan Ranganathan

இதெல்லாம் ஒரு பொழப்பா: இவரின் பேச்சைக்கேட்ட பலர், யாரை பற்றியும் கூற யாருக்கும் அருகதை இல்லை, இப்ப தான் பிரியங்காவிற்கு திருமண நடந்திருக்கு, சந்தோசமா வாழட்டும். அதைவிட்டு ஏன் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறீர்கள் என்று பலர் பயில்வானை விளாசி வருகிறார்கள். மேலும், பிரியங்கா இஸ்லாமியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என சொல்லிவிட்டு, அந்த வீடியோவில் பயில்வான் எதைப்பற்றியுமே பேசவில்லை. வழக்கம் போல காசுக்காக, தனக்கு தெரியாததை அரைகுறையாக பேசி இருக்கிறார், இதெல்லாம் ஒரு பொழப்பா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X