சொகுசு கப்பலில் கொக்கைன் பார்ட்டி.. இன்னும் பல நடிகர்கள் சிக்குவார்கள்.. பயில்வான் பகீர் தகவல்!
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்று சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார். அதில், நான் போதை பொருளை பயன்படுத்தி தவறு செய்துவிட்டேன், போதைப் பொருளை யாருக்கும் விற்பனை செய்யவில்லை எனவும், தான் மட்டுமே பயன்படுத்தியதாகவும் நீதிபதியிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த், இதைத்தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7ந் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன், போதை பொருள் பயன்படுத்துவது என்பது சினிமாவிலும், அரசியலிலும் சகஜமாகிவிட்டது. சினிமாவிலும் அரசியலிலும், அதிகப்படியாக யோசிக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு, சில போதை வஸ்துக்கு தேவைப்படுகிறது. தினமும் மதுவை குடித்து குடித்து பழக்கமாகிவிட்டதால், அவர்களுக்கு எவ்வளவு மது குடித்தாலும், போதை ஏறவே ஏறாது என்பதால். இதுபோன்றவர்கள் போதைக்காக அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்கள். அதுதான் கொக்கேன். இதைப் பயன்படுத்துபவர்கள், எப்போதும் போதையிலேயே இருப்பார்கள், ஆனால், அது மதுபோல எந்தவிதமான வாசனையும் வராததால், வெளியில் தெரியாது.

பாலிவுட்டில் அதிகம்: இந்த பழக்கம் அதிகமாக பாலிவுட்டில் தான் இருந்தது தற்போது கோலிவுட் சினிமாவிற்கும் பரவி உள்ளது. சினிமாவில் எப்போதும் பிசியாகவே இருப்பதால், அவர்களுக்கு தனியாக சொகுசு கப்பலை வாடகைக்கு எடுத்து அதில் பார்ட்டி வைத்து இது போன்ற போதை பொருளை எடுத்துக்கொள்வார்கள் அப்படித்தான் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் இந்த போதை பொருள் வழக்கில் சிக்கினார். அதேபோல, தெலுங்கில் சினிமாவிலும் ஒரு நடிகை சிக்கினார் கடைசி நேரத்தில் அந்த நடிகை தப்பிவிட்டார். மலையாள நடிகர் சாக்கோவும் போதை பொருள் பயன்படுத்தியதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார். போதைபொருள் என்பது மிகவும் ஆபத்தான ஒன்று, இந்த பழக்கத்திற்கு நாம் அடிமையாகிவிட்டால், அதில் இருந்த மீண்டு வருவது என்பது மிகவும் சிரமமான ஒன்று.
மது குடிக்கும் நடிகைகள்: மலையாள சினிமாவில் போதை பொருள் பயன்படுத்துவது அதிகரித்ததைத் தொடர்ந்து, மலையாள தயாரிப்பாளர்கள் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆவதற்கு முன், படப்பிடிப்பு தளத்தில், எந்தவிதமான போதை வஸ்துக்களையும் பயன்படுத்த மாட்டோம் என நடிகர்களிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்து இருக்கிறது. இது விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. அதே போல தமிழ் சினிமாவிலும் விரைவில் வந்துவிடும். ஏன் என்றால், தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகளுக்கு மது குடிக்கம் பழக்கம் இருக்கிறது.
பலர் சிக்குவார்கள்: நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மதுபான பாரில் நடந்த சண்டையில் தான் பிரசாத் என்பவரை போலீசார் விசாரித்த போது, அவர் போதை பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவருக்கு போதை பொருள் சப்ளை செய்த, பிரதீப் என்பவரை கைது செய்த போது தான், அவர் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவின் பெயரை கூறி இருக்கிறார். பிரதீப் கொடுத்த புகாரின் பேரில் தான் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். தற்போது, ஸ்ரீ கிருஷ்ணாவிற்கும் சம்மன் அனுப்பட்டுள்ளது. விரைவில் அவரிடமும் போலீசார் விசாரணை நடத்துவார்கள். ஒரு நடிகர் சிக்கிவிட்டாலே அடுத்தடுத்த நடிகர் சிக்குவார்கள் என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











