தோழியின் முன்னாள் கணவருக்கு 2வது மனைவியாகும் நடிகை.. கிரிக்கெட் வீரருடன் காதல்.. பயில்வான் பேட்டி!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகையான சம்யுக்தா, தன் நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரை, இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளார். இந்த தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வரும் நிலையில் பயில்வான் ரங்கநாதன் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.
மாடல் அழகியான சம்யுக்தா, பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின், வாரிசு, காஃபி வித் காதல், துக்ளக் தர்பார், மை டியர் பூதம் போன்ற படங்களில் நடித்து வந்தார் சம்யுக்தா. இவருக்கு ஏற்கனவே கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்து, ஒரு மகன் இருக்கிறார். சம்யுக்தாவை திருமணம் செய்து கொண்ட கார்த்திக், திருமணமான கையோடு துபாய் சென்றுவிட்டார். துபாய் சென்ற கார்த்திக் அங்கு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து இருக்கிறார். இதை கேள்விப்பட்ட சம்யுக்தா மிகவும் உடைந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார்.

நடிகை சம்யுக்தா: கொரானா ஊரடங்கு நேரத்தில் இது நடந்ததால், சம்யுக்தாவால் தனது கணவர் கார்த்திக்கை தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது. அதன் பின் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த சம்யுக்தா, தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவர் காதலித்து வரும் அந்த நபர் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர், முன்னாள் சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த் தான். கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்ரீகாந்தின் மகன் அனிருதா, இவர் ஐபிஎல் போட்டியில், சென்னை அணிக்காக சில போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இருவருக்கும் 2வது திருமணம்: இதுகுறித்து Metro Mail யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள பயில்வான் ரங்கநாதன், சம்யுக்தாவின் கணவர் கார்த்திக் திருமணமானதும் துபாய் சென்றார். பின் அங்கேயே இருந்துவிட்டார். இதனால், சம்யுக்தா மிகவும் கஷ்டப்பட்டார். தற்போது, சம்யுக்தா கணவரிடம் இருந்து முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டார். அதே போல கிரிக்கெட் வீரம் அனிருத்தா ஸ்ரீகாந்திற்கும் ஏற்கனவே ஆர்த்தி வெங்கடேஷ் என்பவரை 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரித்துவிட்டனர். இவர்கள் எண்ண காரணத்திற்காக பிரிந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆர்த்தியின் தோழி தான் சம்யுக்தா. ஆனால்,சம்யுக்தாவிற்கும் அனிருத்தா ஸ்ரீகாந்திற்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. ரெண்டு பேருமே விவாகரத்து பெற்றவர்கள் என்பதால், தானிக்கு தீனி சரியாக இருக்கும் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











