பலருடன் தொடர்பு.. நீயெல்லாம் பெண்ணா.. நடிகை ரிஹானாவை விளாசிய பிரபலம்!
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ரிஹானா பேகம் ஏற்கனவே திருமணமானதை மறைத்துவிட்டு, ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக தொழிலதிபர் ராஜ் கண்ணன் பூந்தமல்லி காவல் நிலையத்தில் திருமண மோசடி புகார் அளித்துள்ளார். இது சின்னத்திரை சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் KING 24x7 யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், தொழிலதிபர் ரிஹானா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். ஆனால், ரிஹானா காவல் நிலையத்திற்கு செல்லாமல் ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த ஆடியோவில், தொழிலதிபர் தான் எனக்கு 18 லட்சம் ரூபாய் பணத்தை தர வேண்டும் என்றும், நான் கொடுத்த பணத்தை கேட்ட போது அவர் என்னை மிரட்டினார். மேலும், தன்னை மிரட்டி கழுத்தில் கத்தியை வைத்து தன்னுடைய கழுத்தில் ஒரு செயினை போட்டதாகவும். அதன் பிறகு தான் அது, இந்துக்கள் அணியும் தாலி என்பது தனக்கு தெரிந்ததாக சொல்லியிருக்கிறார்.

பயில்வான் விளாசல்: ரிஹானாவிற்கு தாலி என்றால் என்னவென்றே தெரியாதா? அவர் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. முதல் கணவர் இருக்கும்போது, அவரை விவகாரத்து செய்யாமல், இரண்டாவது ஒருவருடன் வாழ்ந்ததே மிகப்பெரிய தப்பு. ரிஹானா பேசிய அந்த ஆடியோவில், என் இஷ்டத்துக்கு நான் இருப்பேன் என்று கூறி இருக்கிறார். இதில் இருந்தே ரிஹானா எப்படிப்பட்ட பெண் என்று தெரிகிறது. அதுமட்டுமில்லாமல், தொழிலதிப ராஜ் கண்ணன், என்னைப் போன்று பலரையும் ரிஹானா ஏமாற்றிய இருப்பதாக கூறி இருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் அவர் காவல் நிலையத்தில் கொடுத்துவிட்டால் ரிஹானாவின் நிலைமை படு மோசமாகிவிடும்.
நீ எல்லாம் ஒரு பெண்ணா : ரிஹானா அந்த ஆடியோவில் நானும் ராஜ் கண்ணணும் சேர்ந்து தொழில் செய்தோம், அதற்காகத்தான் அவரிடம் பணம் கொடுத்தேன் என்கிறார். அப்படி என்ன தொழிலை இருவரும் சேர்த்து செய்தார்கள். இப்படிப்பட்ட பெண்களால் தான் பல நடிகைகளுக்கே கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது. நீ எல்லாம் ஒரு பெண்ணா என்று தான் எனக்கு கேட்கத் தோன்றுகிறது. இப்படி ஒரு செயலை செய்துவிட்டு, திவ்யா, அர்னவ் விவகாரத்தில் மற்றவர்களுக்காக நீதி கேட்டு நியாம் பேசுகிறார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











