ஜூலியின் கரு கலைந்ததா? எந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தீங்க.. சர்ச்சையை எழுப்பிய பயில்வான்!

சென்னை: இரண்டு தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பிக் பாஸ் ஜூலி தவெகவை நான் எதிர்த்த காரணத்திற்காக, பெண் என்றும் பாராமல், என்னை பற்றியும், என் கணவர் பற்றியும் மிகவும் தரக்குறைவான கடுமையான அவதூறுகளை பரப்புகிறார்கள். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் நான் என் முதல் குழந்தையை இழந்துவிட்டேன், இது உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் எனக்கு அப்படி இல்லை என கண்ணீர் மல்க பேசி இருந்தார். ஜூலியின் பேச்சு சோசியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பியது.

பயில்வான் ரங்கநாதன்: இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருக்கும் பயில்வான் ரங்கநாதன், ஜூலி பேசியதை கேட்கும்போது பல விஷயங்கள் முன்னுக்கு பின் முரணா இருக்கின்றன. 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு நடிகர், அரசியலிலும் சினிமாவிலும் டாப்பில் இருக்கும் ஒருவரை வாடா போடா என ஒருமையில் பேசினால் அவருடைய ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? வேலியில் போனா ஓணானை எடுத்து இடுப்பில் விட்டுக்கொண்டு குத்துதே குடையுதே என்று சொன்னால் என்ன அர்த்தம்.

Julie Payilvan Ranganathan

எந்த மருத்துவமனை: இவர் என் மூன்றாவது கணவர் என சொல்கிறார்கள், இதற்கு முன் எனக்கு கல்யாணம் ஆகவில்லை, இவர் தான் என் முதல் கணவர் என்று சொல்லவேண்டியது தானே, அதை ஏன் ஜூலி சொல்லவில்லை. தன்னுடைய கணவர் பக்கத்தில் இருக்கும் போதும், அவரை பேச விடாமல் ஜூலியே பேசிக்கொண்டு இருக்கிறார். அதேபோல தன்னுடைய கரு கலைந்ததற்கு டிவிகேவினர் கொடுத்த மன உளைச்சல் தான் காரணம் என்ன சொல்லி இருக்கிறார். ஜூலிக்கு எதனால் கரு கலைந்தது? கீழே விழுந்தாரா? இல்லை யாராவது அவரை தாக்கினார்களா? இல்லை கரு கலைந்த போது எந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார் என எந்த விஷயத்தையும் ஜூலி சொல்லவே இல்லை.

Julie Payilvan Ranganathan

அவ்வளவு நேரம் பேசியும், ஜூலி இது குறித்தும் விரிவான விளக்கத்தை கொடுக்காமல் கண்ணீர் விட்டு பேசினால் என்ன அர்த்தம், இதெல்லாம் ஜூலிக்கு தேவைதானா? என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசுகிறார். பயில்வானில் இந்த பேட்டியை பார்த்த சிலர் எந்த பெண்ணும் குழந்தை விஷயத்தில் பொய் சொல்ல மாட்டாள் என்றும், இதெல்லாம் வரம்பு மீறிய பேச்சு என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X