கே.ராஜன் மரணத்திற்கு காரணம் கடனா? குடும்ப பிரச்சனையா? பயில்வான் ரங்கநாதனை உலுக்கிய மரணம்!
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான கே ராஜன் நேற்று அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சினிமா விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில்,கே. ராஜன் ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், இயக்குநர், சமூக செயற்பாட்டாளராகவும் இருந்துள்ளார். திரைப்பட தொழிலாளர்களுக்காக போராடிய மனிதர். 1982ஆம் ஆண்டு காந்தி காமராஜ் கட்சியின் சார்பில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டவர். அவர் ஒரு டென்ஷன் பார்ட்டி. மனசுல எதையும் வைத்துக்கொள்ள மாட்டார். ஆனால், சினிமாவுக்காக பல நல்ல விஷயங்கள் செய்திருக்கிறார். திருட்டு வீடியோ சிடிக்கள், பஸ் வீடியோக்கள், கேபிள் பைரசி எல்லாத்துக்கும் எதிராக குரல் கொடுத்து போராடியவர்.

கே ராஜன்: கமல்ஹாசன் படங்கள் வெளியான சமயங்களில் கூட திருட்டு வீடியோக்களை தடுத்து நிறுத்த முயன்றவர் கே.ராஜன் தான். 'பிரம்மச்சாரி' படத்தின் மூலம் படங்களை தயாரித்த அவருக்கு, பிரபுதேவா மற்றும் பாண்டியராஜன் நடித்த 'டபுள்ஸ்' திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு தனது மகன்களை ஹீரோவாக வைத்து படங்கள் தயாரிக்க முயன்சித்தார். அது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், அவரது மகன் பிரபு தற்போது வெற்றிகரமான இயக்குனராக இருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜியை வைத்து எல்கேஜி படத்தை இயக்கிறார். மற்றொரு மகன் காமராஜ் பள்ளியை கவனித்து வருகிறார்.
பயில்வான் ரங்கநாதன் பேட்டி: கே.ராஜன் கொரோனா காலத்தில் குடும்பத்திலிருந்து விலகி ஹோட்டலில் பல ஆண்டுகள் தங்கி இருந்தார். அவருக்கும் எனக்கும் ஒரு நிகழ்ச்சியில் சண்டை நடந்த போது இதுபற்றி நான் பேசினேன். அதன்பின் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பின் இருவரும் சமாதானமாகிவிட்டோம். அப்போது, வீட்டில் சண்டை போட்டுட்டு ஹோட்டலுக்கு வந்திருக்கீங்களா என்று கேட்டேன். அதற்க்கு அவர், என் பசங்கலே ஒருத்தன் வந்து என்னோட படுத்துவான். வீட்டிலிருந்து தான் சாப்பாடு வருகிறது என்று சொன்னார்.
கடன் பிரச்சனையா?: தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன், கே. ராஜன் தற்கொலைக்கு காரணம் கடன் பிரச்சினை என்று வரும் தகவல் உண்மையில்லை, அவர் கடன் வாங்கி சிக்கியவர் இல்ல, அவர் தான் பல பேருக்கு பணம் கொடுத்திருந்தார். கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வரை பலருக்கு பணம் கொடுத்து இருக்கிறார். சில நாட்களுக்கு முன் அவருக்கு பேஸ்மேக்கர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூட சொன்னார்கள். சம்பவத்தன்று காரில் வந்து கொண்டு இருந்த கே. ராஜன், தனது டிரைவரிடம் அடையார் பகுதியில் காரை நிறுத்தச் சொல்லி "நான் கொஞ்சம் வாக்கிங் போகிறேன்" என்று கூறிவிட்டு திடீரென ஆற்றில் குதித்து இருக்கிறார்.
நல்ல மனிதன்: அதன் பின் டிரைவர் கத்தி அனைவரையும் அழைத்த பிறகு தான் தீயணைப்பு துறையினர் வந்து இரண்டு மணி நேரம் தேடி உடலை மீட்டுள்ளார்கள். அவருடைய குடும்பத்தில் அப்படியொரு பிரச்சினை வர வாய்ப்பே இல்லை. அவர் தனக்குத்தானே சம்பாதித்து, காமராஜ் பள்ளி ஆரம்பித்தவர். அதேபோல் நடிகர்கள் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளங்கள் குறித்து கே. ராஜன் பல மேடைகளில் கடுமையாக பேசி இருக்கிறார். மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் இருப்பது போல படம் ஓடிய பிறகே முழு சம்பளம் என்ற முறை தமிழிலும் வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர் கே ராஜன் தான் என பயில்வான் ரங்கநாதன் மிகவும் வேதனைப்பட்டு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications