மனைவி கூட இல்லை.. பாரதிராஜா அனாதையாக இருக்காரு? ராதிகாவுக்கு எதுக்கு இந்த சீப்பப்ளிசிட்டி.. பிரபலம்

சென்னை: சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய்க்கிழவி திரைப்படம் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் சிங்கம் புலி. பால சரவணன், முனீஷ்காந்த், இளவரசு என பல நடித்த இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முதிர் தோற்றத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் நல்ல விமர்சனத்தை பெற்று கணிசமான வசூலையும் அள்ளியது.

ராதிகா சரத்குமார்: இந்நிலையில் உடல்நல குறைவால் மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வரும் இயக்குனர் பாரதிராஜா, தாய்க்கிழவி படத்தை பார்த்துவிட்டு நடிகை ராதிகாவிடம் தாய்க்கிழவி படம் சூப்பராக இருக்க, உனக்கு தேசிய விருது கிடைக்கும் என பாராட்டி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், பலர் கம்பீரமாக இருந்த பாரதிராஜாவை பார்ப்பதற்கே பாவமாக இருக்கு, எதற்கு ராதிகா இப்படி ஒரு வீடியோவை வெளியிட வேண்டும் என்ற விமர்சனத்தை முன் வைத்தனர். இது குறித்து, பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார்.

Bharathi raja Radhika bayilvan Ranganathan
Photo Credit:

ராதிகாவின் குசும்பு: அதில், ராதிகா, பாரதிராஜாவின் பரிதாப நிலையை பார்த்துவிட்டு வருத்தப்படவில்லை மாறாக சிரிக்கிறார். ராதிகாவின் உள்நோக்கம் என்ன என்று தெரியவில்லை. பாரதிராஜா எப்பொழுதுமே கம்பீரமாக இருக்கக்கூடியவர், மிகவும் அழகாக ஆடைகளை தேர்வு செய்து அணியக்கூடியவர், தன்னை மிகவும் அழகாக காட்டிக்கொள்ள நினைக்கக் கூடியவர். அப்படிப்பட்டவர் இந்த நிலைமையில் இருக்கும் போது எதற்காக ராதிகா அந்த வீடியோவை வெளியிட்டார் என தெரியவில்லை. அந்த வீடியோவை பார்ப்பதற்கு மனது மிகவும் கஷ்டமாக இருந்தது. ராதிகா சென்று பார்த்து இருக்கலாம், ஆறுதல் சொல்லி இருக்கலாம், படம் குறித்து கூட பேசி இருக்கலாம். அதை ஏன் வீடியோவாக எடுத்து வெளியிட வேண்டும். எதற்கு ராதிகாவிற்கு இந்த குசும்பு, இந்த சீப் பப்ளிசிட்டி ராதிகாவிற்கு தேவையா? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

அனாதையாக இருக்காரு: பாரதிராஜாவின் மகன் மனோஜ் இறந்தபோதே அவர் மிகவும் உடைந்துவிட்டார். அதன் பிறகு அவரால் அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை. பாரதிராஜாவிற்கு 77 வயதாகிறது வயது மூப்பு காரணமாகவும் சில பிரச்சனைகளை அவர் சந்தித்து வருகிறார். ஆனால், அவருடைய மனைவி உயிரோடு இருந்தும் பாரதிராஜா இப்பொழுதும் அனாதை போல தனியாக தான் இருக்கிறார். பல ஆண்டு காலமாகவே பாரதிராஜா தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். பாரதிராஜாவின் மகன் இருவரையும் சேர்த்துவைக்க முயற்சி செய்த போதும் கூட பாரதிராஜா வேண்டாம் என தடுத்து விட்டார். பாரதிராஜா தன் படங்களில் அழகாக காதலை சொல்லி இருப்பார். ஆனால், அந்த காதலை வாழ்க்கையில் சொல்ல முடியாமல் போய்விட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்டபோது மலேசியாவில் இருக்கும் மகள் வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு தற்போது மீண்டும் வாழ்ந்த வீட்டுக்கு வந்து இருக்கிறார். அவரை மனோஜின் மனைவி மற்றும் மகள் தான் கவனித்துக் கொள்கிறார்கள் என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X