கௌரி கிஷனை கண்டித்த பயில்வான் ரங்கநாதன்.. அந்த யூடியூபருக்குத்தான் இவரோட சப்போர்ட்டாம்!

சென்னை: நடிகை கௌரி கிஷன், புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் நடிப்பில் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் 'அதர்ஸ்' (others) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், செய்தியாளர் கௌரி கிஷனிடம் எடை குறித்து கேட்ட கேள்வியால் கடுப்பான நடிகை, அந்த செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த விஷயத்தை தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டித்து இருக்கும் நிலையில், இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ளார்.

Gem Cinemas யூடியூப் சேனலுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், உங்கள் எடை என்ன என்று கேட்பது எப்படி உருவகேலியாகும். அந்த நடிகைக்கு ஏற்கனவே ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது. அதனால் தான் ஈரை பெருமாளாக்கி, சின்ன விஷயத்தை ஊதி பெரிய விஷயமாக ஆக்கியிருக்கிறார்கள். இந்த விஷயத்திற்கு தமிழக நடிகர் சங்கம், மலையாள நடிகர் சங்கம், நடிகைகள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிறியதாக பார்க்க வேண்டிய விஷயத்தை பூதாகரமாக்கி யாரோ ஒருவரை டார்கெட் செய்து இருக்கிறார்கள்.

Gouri Kishan Bayilvan Ranganathan interview
Photo Credit:

பயில்வான் ரங்கநாதன் கேள்வி: ஒரு பத்திரிக்கையாளர் நடிகர், நடிகையை தூக்குவதை பார்த்துவிட்டு அவர்கள் வெயிட்டாக இருந்தார்களா? என கேட்டு இருக்கிறார். இது எப்படி தவறான கேள்வி என்று எனக்கு தெரியவில்லை. இந்த கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றால் 'நோ' கமெண்ட்ஸ் என்று சொல்லிவிட்டு போயிருக்கலாம். அந்த செய்தியாளர் ஏன் குண்டாக இருக்கீங்க என கேட்கவில்லை, உருவகேலி செய்யும் வகையில் கேள்வி கேட்கவில்லை. இயல்பாக தான் கேட்டு இருக்கிறார். ஆனால், இந்த நடிகைக்கு பட வாய்ப்பு இல்லாததால், தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக சின்ன விஷயத்தை பெரிய விஷயமாக்கிவிட்டார். இது, அவருக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டியாக தான் போய் இருக்கு.

மன்னிப்பு கேட்டார்: இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த பத்திரிக்கையாளர் வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என கூறியிருந்தார். ஆனால், நிர்பந்தம் காரணமாக தற்போது மன்னிப்பு கேட்டு இருக்கிறார். அவரை கார்னர் செய்து விட்டார்கள். அதேபோல தொலைக்காட்சி காரர்களுக்கு, யுடியூபர்கள் மீது கடுமையான ஆத்திரம் இருக்கிறது. ஏனென்றால் youtube காரணமாக டிவியின் பிசினஸ் குறைகிறது. டிவியில் ஒரு செய்தியை போடு விடுவதற்கு முன்பாக யூடியூபில் அதை பதிவிட்டு விடுகிறார்கள். இதன் காரணமாகத்தான் அந்த செய்தியாளரை, youtuber, youtuber என்று சொல்கிறார்கள். அவர் youtuber மட்டுமல்ல, அவர் ஒரு பத்திரிக்கையாளர் பத்திரிக்கையாளர் சங்க செயலாளர்.

தொழில் போட்டி: அப்படி இருக்கும்போது youtuber என்று அவரை கார்னர் செய்வதற்கான காரணம் என்ன? யூடியூப் என்றால் இழப்பமா? டிவியில் செய்தியாக வருவதற்கு முன்பே youtube இல் வந்து விடுவதால், youtube க்கும் தொலைக்காட்சிக்கும் ஒரு தொழில் போட்டி நடக்கிறது. அது இயல்பான ஒன்றுதான் என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X