விஜய் டிஜிபி ஆபீஸ் போன உண்மையான காரணம்? எல்லாமே நாடகம்.. பயில்வான் பேட்டி
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தவெக தலைவர் விஜய், டிஜிபி அலுவலகத்தில் நேரில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன், Puthiya Sinthanai யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் விஜய் பொன்ராஜ் மீது புகார் அளிப்பதற்காக டிஜிபி அலுவலகம் வரவில்லை. நான் பிரச்சாரத்திற்கு செல்கிறேன். எனக்கு உரிய பாதுகாப்பு கொடுங்க என்பதற்காக தான் சென்றார். இதற்கு முன்பு பலர் எவ்வளவோ பேசி இருக்கிறார்கள். அதற்கு எல்லாம் மானம் போகவில்லையா? இப்பொழுது தான், மானம் போய்விட்டதா? முதலில் விஜய் என்ன செய்திருக்க வேண்டும் என்றால், தன் கட்சியில் இருக்கும் சகோதரர், சகோதரிகளிடம் இதுபோல தரக்குறைவாக பேசாதீர்கள், நான் கட்சியின் தலைவன் என்று அவர்களை அல்லவா விஜய் கண்டித்திருக்க வேண்டும்.

விஜய்யின் நாடகம்: அதை கண்டிக்காமல் பொன்ராஜ் மீது புகார் அளித்திருப்பது சரியில்லை. அதுவும் அவர் மன்னிப்பு கேட்ட பிறகு புகார் அளித்திருக்கக்கூடாது. அவர் போனதே பாதுகாப்பு கேட்டுத்தான். அதை சொல்லாமல் இதை சொல்லி, விஜய் நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார். த்ரிஷாவும் விஜய்யும் ஜோடி போட்டு திருமணத்திற்கு சென்ற போது மிகவும் கடுமையான விமர்சனம் எழுந்தது. அதையெல்லாம் கட்டுக்காமல் காதில் வாங்கிக்கொள்ளாத விஜய், வொர்த் இல்லை என்றார். இப்போது இந்த விஷயத்திற்கு புகார் அளித்து வெறும் வாயைமென்று கொண்டு இருந்தவர்களுக்கு விஜய் தானாக சென்று அவல் பொரி கொடுத்து, விஜய் ஒரு மெச்சூரிட்டி இல்லாத ஆள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்.
தற்குறிகள் தான்: விஜய்யின் கட்சியினரை தற்குறிகள் என்று சொன்ன போது தானே என்னடா என்று யோசித்தேன். ஆனால், அந்த கட்சியில் இருக்கும் பெண்கள் அவருக்கு மனைவி இல்லை என்றால் என்ன? நான் மனைவியாக இருக்கிறேன் என்று சொல்வது எல்லாம் கேட்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இதைத்தான் விஜய் ஒரு கட்சி நிர்வாகி என்கிற முறையில் கண்டித்து இருக்க வேண்டும் என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











