அரசியல் பிரமுகரை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ரேகா நாயர்.. ஆதாரத்துடன் பயில்வான் சொன்ன தகவல்!

சென்னை: நடிகை ரேகா நாயர், பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நடித்தன் மூலம் பிரபலமானார். சோஷியல் மீடியாவிலும், யூடியூப்பிலும் தைரியமாக பல கருத்துக்களை முன்வைத்து பேசி வருகிறார். இவர்,எம்.எல்.ஏ பிரபாகர் ராஜாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக பயில்வான் ரங்கநாதன், KING 24x7 சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், ஏ. எம். வி. பிரபாகர் ராஜா, தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஆவர். இவர், 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் ஏ. எம். விக்கிரமராஜாவின் மகன் ஆவார். கிறிஸ்தவரான பிரபாகர் ராஜாவிற்கு இந்துக்கடவுளான முருகன் கடவுள் மேல் பக்தி வர, தொடர்ந்து வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று வந்துள்ளார். அதை தொடர்ந்து கடவுளின் படத்தை வீட்டில் வைத்த போது, இவருடைய மனைவிக்கும் இவருக்கும் இடையே சில சண்டைகள் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட விரிசலை பயன்படுத்தி உள்ளே நுழைந்தவர் தான் நடிகை ரேகா நாயர்.

ஜிம்மில் ஏற்பட்ட நட்பு: பிரபாகர் ராஜா சொத்தமாக உடற்பயிற்சி கூடம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இதில் நடிகை ரேகா நாயர் பயிற்சி செய்த போது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின் அது காதலாக மாறி வெளிநாடு பயணம் செல்லும் வரை சென்றுவிட்டது. அதன் பின் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, ரேகா நாயரை அழைத்துக்கொண்டு அனைத்து நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டார். ரேகா தனது வாழ்க்கையில் வந்த பிறகு தான் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வந்ததாக அவர் கூறி வருகிறார். மேலும், தன்னுடைய இணையதள பக்கத்தில் ரேகா நாயர் தனது மனைவி என்று வெளியிட்டார். இது கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது.

Rekha Nair prabhakarar raja bayilvan ranganathan
Photo Credit:

யாருக்கும் பிடிக்கவில்லை: இந்நிலையில், நேற்று பிரபாகர் ராஜா, புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து இருக்கிறார். அந்த அழைப்பிதழில் பிராபகர் ராஜா எம்.எல்.ஏ மற்றும் ரேகா என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் அவர்களோ, அல்லது துணை முதல்வரோ கலந்து கொள்ளவில்லை. ஏன் என்றால், விக்ரம ராஜாவிற்கு பிரபாகர் ராஜா, ரேகாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லை. வெளியில் இவர்கள் கருத்துவேறுபாடுகளை காட்டிக்கொள்ளாமல் பேசிக் கொண்டாலும், குடும்பத்திற்குள் யாரும் பிரபாகர் ராஜாவுடன் பேசுவது இல்லை. இதனால், அடுத்து நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக பிரபாகர் ராஜாவிற்கு சீட் தரவாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

அடாவடி பெண்: பிரபாகர் ராஜாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன், நடிகை ரேகா நாயர், பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக ஒரு பக்கம் மார்பை காட்டி நடித்திருந்தார். இது குறித்து நான் youtube சேனல் ஒன்றில் பேசி இருந்தேன். அதைப்பார்த்த ரேகா நாயர், நான் பீச்சில் வாக்கிங் சென்றபோது தகாத வார்த்தைகளால் என்னிடம் பேசினார். இதுகுறித்து நான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. ஆனால், அந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் வைரலாகி விட்டது. ரேகா தொடர்பாக நான் பார்த்திபனிடம் கேட்டபோது பார்த்திபன் அவர்கள் ரேகா நாயர் ஒரு அடாவடி பெண் என்றார். அதைத்தொடர்ந்து அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது.

தனிப்பட்ட விஷயம்: தற்போது ரேகா நாயர், பிரபாகர் ராஜாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். ஆனால் பிரபாகர் ராஜாவின் முதல் மனைவியின் விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று கூறப்படுகிறது என்று பேசிய பயில்வான் ரங்கநாதன், இரண்டாவது திருமணம் செய்து கொள்வது அவர் அவர்களின் தனிப்பட்ட விஷயம். நான் ரேகா நாயர் பற்றியோ... பிரபாகர் ராஜா பற்றியோ எந்த விதமான தவறான கருத்துக்களையும் கூறவில்லை, எனக்கு தெரிந்த தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசியிருந்தார். ஆனால், நடிகை ரேகா நாயர், எம்.எல்.ஏ. என்னுடைய நெருங்கிய நண்பர். சில சமயங்களில் நாங்கள் காலை நடைப்பயிற்சிக்குச் செல்வோம், ஒன்றாக ஓடுவோம். நாங்கள் ஒரே பகுதியில் வசிப்பதால் நல்ல நட்பு என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X