சத்யராஜ் மகளுக்கு திருமணமாகிவிட்டது.. 5 நிமிடத்தில் தாலியை கழற்றி வீசிய திவ்யா.. பயில்வான் பேட்டி!

சென்னை: திவ்யா சத்யராஜ், சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணை பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளமாலயே அவருடன் இணைந்து வாழலாம். குழந்தை கூட பெற்றுக் கொள்ளலாம், திருமணம் என்பது அவசியமான ஒன்று இல்லை என பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பயில்வான் ரங்கநாதன், சத்யராஜ் பொண்ணு திவ்யா ஊட்டச்சத்து நிபுணர்னு சொல்றாங்க.. ஆனா அவங்க பேசுறத பாத்தா மன நோயாளி மாதிரி தெரியுது என பேசி இருந்தார். அதை கண்டிக்கும் வகையில் பேசிய இருந்த திவ்யா சத்யராஜ், என் அப்பா பயில்வானுக்கு எவ்வளவு பணம் கொடுத்து இருப்பார். அப்படி அவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு இப்படி பேசலாமா என கூறியிருந்தார்.

பயில்வான் ரங்கநாதன்: இதற்கு, யூடியூப் சேனலில் பதில் அளித்து இருக்கும் பயில்வான் ரங்கநாதன், திவ்யா சத்யராஜை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் என்றும் அவர் ஊட்டச்சத்து நிபுணர் என்பதும் எனக்கு தெரிந்தது. இதுவரையில் நான் சத்யராஜின் வீட்டிற்கு சென்றதே இல்லை. இன்டர்வியூ சம்பந்தமாக தான் நான் சில முறை சந்தித்து பேசி இருக்கிறேன். ஒரு நாளும் நான் சத்யராஜிடம் பணம் வாங்கியதில்லை இது என் தாய் மீது சத்தியம். உண்மையில் சத்யராஜ் எனக்கு பணம் கொடுத்தாரா என்பதை நீங்க உங்க அப்பாவிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஏன் என்றால் சத்யராஜ் பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட தரமாட்டார்.

Bayilvan Ranganathan Talks about Divya Sathyaraj Marriage
Photo Credit:

18 வருடத்திற்கு முன்பே திருமணம்: திவ்யா சத்யராஜ் எனக்கு திருமணமாகவில்லை நான் சிங்கிள் என சொல்லிக்கொண்டு இருக்கிறார். உண்மையில் திவ்யா சத்யராஜுக்கு 18 வருடத்திற்கு முன்பே திருமணமாகி, விவகாரத்து ஆன விஷயம் யாருக்காவது தெரியுமா? ஆனால், திவ்யா சத்யராஜ் எனக்கு திருமணமாகவில்லை என பெருமையாக சொல்லிக்கொண்டு இருக்கிறார். சத்யராஜுக்கு கோயம்புத்தூரில் ரேஸ்கோஸில் ஒரு பிளாட் இருக்கிறது. அங்கு தான் குறிப்பிட்ட 50 பேரை மட்டுமே அழைத்து திவ்யா சத்யராஜுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார் சத்யராஜ். திவ்யா சத்யராஜின் கணவர் வேறு யாரும் இல்லை சத்யராஜின் உடன் பிறந்த சகோதரி கல்பனாவின் மகன் மகேந்திரன் மன்றாடியாரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.

Bayilvan Ranganathan Talks about Divya Sathyaraj Marriage
Photo Credit:

தாலியை கழற்றி வீசினார்: ஆனால் திருமணமான அடுத்த ஐந்து நிமிடத்திலேயே திவ்யா தனது கழுத்தில் இருந்த தாலியை கழற்றி வீசிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு சத்யராஜ் தனது மருமகனுடன் கெஞ்சி கேட்டுக்கொண்டதால், மருமகன் அனுசரித்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால், தினமும் திவ்யாவின் டார்ச்சர் தாங்க முடியவில்லை என மகேந்திரன் புலம்பி இருக்கிறார். ஒரு கட்டத்தில் திவ்யாவின் டார்ச்சர் அதிகமானதால் இதற்கு மேல் இவருடன் சேர்ந்து வாழ முடியாது என சத்யராஜிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதுதான் திவ்யா சத்யராஜின் திருமண வாழ்க்கை. இதை நான் இப்போது சொல்வதற்கு காரணம் என்னவென்றால், நீ என்னை பற்றி ஒரு பொய்யை சொன்னதால் இப்பொழுது உன்னுடைய வண்டவாளம் தண்டவாளத்திற்கு வந்துவிட்டது என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார். இந்த விஷயம் அனைத்தையும் நண்பர் ஒருவர் தனக்கு சொன்னதாக பயில்வான் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X