மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம்.. நிர்பந்தத்தால் நடந்ததா? திருமணம் செல்லுமா? பயில்வான் கேள்வி!

சென்னை: பிரபல நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அதோடு, கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். சில மாதங்களுக்கு முன்பு, தானும் மாதம்பட்டி ரங்கராஜ்ஜும் காதலித்து வருவதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா பதிவிட்டு இருந்தார். மாதம்பட்டி ரங்கராஜ்ஜிற்கு ஸ்ருதி ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும், நிலையில், வேறு ஒரு பெண்ணுடன் மாதம்பட்டி ரங்கராஜ், காதல் உறவில் இருந்தது, பெரும் சர்ச்சையான நிலையில், ஜாய், அந்த பதிவுகளை நீக்கினார். தற்போது மீண்டும் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து Gem Cinemas யூடியூப் சேனலில் பேசிய பயில்வான் ரங்கநாதன்,அதில், மாதம்பட்டி ரங்கராஜ், எப்பொழுதுமே பழங்களை ருசிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவர் இதற்கு முன்பாகவே இரண்டு, மூன்று பெண்களுடன் தொடர்பில் இருந்தார். இவருக்கு விவகாரத்து செய்த பெண்கள் என்றால் மிகவும் பிடிக்கும். பெரும்பாலும் இவர் விவாகரத்து பெற்ற பெண்களுடன் தான் லிவ்விங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். இவர், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடன் உறவில் இருந்தார். தற்போது, அவர் ஆறு மாத கர்ப்பினியாக இருப்பதால், திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இவர்களின் திருமணம் ஒரு சிறிய கோவிலில் நடைபெற்றுள்ளது.

Madhampatty Rangaraj JoyCrizildaa Marriage
Photo Credit:

திருமணம் செல்லுமா: ஜாய் கிரிஸில்டா ஒரு கிறிஸ்துவர், அப்படி இருக்கும் போது எப்படி கோவில் திருமணம் நடந்தது, ஜாய் இந்துவாக மதம் மாறி திருமணம் செய்து கொண்டாரா, இல்லை, ஆறு மாத குழந்தை வயிற்றில் இருப்பதால் நிர்பந்தம் காரணமாக திருமணம் செய்து கொண்டாரா? என பல கேள்வி இருக்கிறது. இதில் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி, எம்.ஏ. படித்தவர். அதே போல, மாதம்பட்டி ரங்கராஜும் இன்ஜினியரிங் படித்தவர். பெங்களுருக்கு சென்று ஒரு ஓட்டலை தொடங்கினார். ஓட்டல் பிஸ்னஸ் என்பது இவர்களின் பரம்பறை தொழில் என்பதால், ரங்கராஜுன் ஓட்டல் தொழிலை கையில் எடுத்தார். அப்போது தான், கார்த்தி திருமணத்தில் இவரது உணர்வை ருசித்த அனைவரும், உணவு மிகவும் ருசியாக இருக்கிறது என்று பாராட்டினார்கள்.

மதம் மாறினாரா: அதை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ், மெகந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். என்றைக்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானாரோ ஆன்றிலிருந்து, விவகாரத்து பெற்ற நடிகைகளுடன் இவரது பெயர் கிசு கிசுக்கப்பட்டது. இவருடைய முதல் மனைவி ஸ்ருதி திமுகவின் மகளிர் அணியைச் சேர்ந்தவர். கூட்டங்களில் மிகவும் சிறப்பாக பேசக்கூடிய ஸ்ருதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஸ்ருதிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகளால் சண்டை வந்தாலும், தற்போது வரை இருவரும் விவாகரத்து பெறவில்லை. முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவதாக மாதம்பட்டி ரங்கராஜ் எப்படி திருமணம் செய்தார். முதல் மனைவியிடம் விவகாரத்துக்கு பெறாத மாதம்பட்டி ரங்கராஜ் செய்த திருமணம் செல்லுமா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X