கூட்டுக்குடும்பமாக வாழ ஆசைபட்ட சிவக்குமார்.. ஜோதிகா பற்றி ஓவராக பேசிய பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: பீட்சா, இறைவி, ஜிகர்தண்டா, பேட்ட , ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற வெற்றிப்படத்தை கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் ரெட்ரோ. இப்படம் மே 1ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், ஜோதிகா கலந்து கொள்ளாதது பேசுபொருளாகி உள்ளது. இது குறித்து பயில்வான் ரங்கநாதன்
Metro Mail யூடியூப் சேனலில் இதுகுறித்து பேசி உள்ளார்.

அனைவரும் கேள்வி கேட்கும் வகையில் தான் இவர்களின் குடும்ப விவகாரம் சென்று கொண்டு இருக்கிறது. ஜோதிகாவிற்கு சென்னை வருவதற்கு சுத்தமாக விருப்பமே இல்லை. மாமனார், மாமியாரை சந்திப்பதில் ஜோதிகாவிற்கு விருப்பமில்லை. ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தது சிவகுமாருக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்தது. கடைசியில் அது பூதாகரமாக வெடித்து விட்டது. ஆரம்பத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக கூறி மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார் ஜோதிகா. அதன் பிறகு, ஒரு படத்தில் நடித்தார். தற்போது பாலிவுட்டுக்கு சென்று தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார். இதனால், சிவகுமாருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு குடும்ப மானமே போய்விட்டது என, சிவகுமார் வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.

Retro Suriya Jyothika

சிவக்குமாரின் ஆசை: நடிகர் சிவக்குமார் சென்னையில் தி நகரில் தனது வீட்டிலேயே கார்த்திக் மற்றும் சூர்யா குடும்பத்துடன் தான் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அதற்கான சூழ்நிலையை ஜோதிகா ஏற்படுத்திக் கொடுக்காமல், தனது கணவன் மற்றும் மகன்,மகளுடன் மும்பைக்கு சென்று விட்டார். இப்போது ஜோதிகா மற்றும் சூர்யா இருவருமே மும்பையில் ஆடம்பரமான வீடு ஒன்றை வாங்கி குடியேறிவிட்டனர். அது மட்டுமல்லாமல் சொகுசு கார் ஒன்றையும் ஜோதிகா சூர்யாவிற்கு வாங்கி கொடுத்திருக்கிறார். விரைவில், சூர்யா பாலிவுட்டில் அறிமுகமாகவும் இருக்கிறார். இந்த செய்திகள் எல்லாம் சிவகுமாருக்கு பிடிக்கவே இல்லை.

Retro Suriya Jyothika

விரும்பாத ஜோதிகா: அண்மையில் நடந்த தேர்தலில் வாக்களிக்கவும் ஜோதிகா வரவில்லை, மகன் தேவ் கராத்தேவில் மெடல் வாங்கிய போதும் வரவில்லை. கங்குவா இசைவெளியீட்டு விழா, இப்போது ரெட்ரோ இசைவெளியீட்டு விழாவிற்கும் வராமல் புறக்கணித்து இருக்கிறார். ஐஸ்வர்யா, தனுஷ் இருவரும், விவாகரத்து பெற்று பிரிந்திருந்தாலும் தங்களுடைய குழந்தைகளின் பள்ளி நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொள்கிறார்கள். இருவருமே தங்களுடைய குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறார்கள் . ஆனால் அதைக்கூட செய்ய மறுத்திருக்கிறார் ஜோதிகா.

எந்த மோதலும் இல்லை: குடும்பத்திற்குள் தான் பிரச்சனையே தவிர ஜோதிகாவும், சூர்யாவும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். ஜோதிகாக்குள் சூர்யா இருக்கிறார், சூர்யாவுக்குள் ஜோதிகா இருக்கிறார். அவர்கள் இருவரிடமும் எந்த கருத்து வேறுபாடும், மோதலும் இல்லவே இல்லை ஜோதிகாவிற்கு சென்னை வருவதில் விருப்பமில்லை, வரவில்லை. மேலும், சூர்யாவிற்கு ஜோதிகா நடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், சிவக்குமாருக்குத்தான் அது பிடிக்கவில்லை. மாமனாருக்கு பிடிக்கவில்லை என்பதற்கான ஜோதிகா எப்படி தனது ஆசையை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

மே1ந் தேதி வெளியாக உள்ள ரெட்ரோ படத்தில், பூஜா ஹெக்டே, நாசர், கருணாகரன், ஸ்வாசிகா, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1990 கால கட்டத்தில் நடக்கும் கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களை இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X