twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தாடி தான் என்னுடைய அடையாளம்.. தனுஷின் ரீல் தாத்தா மு.இராமசாமி ஸ்பெஷல் பேட்டி

    |

    சென்னை: தாடிக்காரன் நான் என்பது ஒரு வித அடையாளம் , இருந்தாலும் என்னுடைய அடையாளம் என்று பருத்திவீரன், ஜோக்கர், சண்டக்கோழி2, கிடாரி போன்ற திரைப்படங்களில் மக்கள் ரசித்தனர். நடிகரும் நாடகத்துறை பேராசிரியருமான மு.இராமசாமி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் .

    உணர்வுடன் கூடிய வசனத்தை மனப்பாடம் செய்து நடிக்க வேண்டியதில்லை என்றும், நான் யாரிடமும் வாய்ப்புக்காக சென்றதில்லை என்றும் மு.இராமசாமி தெரிவித்தார்.

    நமக்கு பிடிச்சவங்க நல்லா இருக்கனும்னா, நாம அவங்கள விட்டு விலகி இருக்கிறதும் நல்லது தான் என்றும், இளம் தலைமுறை நடிகர்களில் நான் வியந்த நடிகர் தனுஷ் என்று கூறியுள்ளார்.

    சாய்பல்லவி கேட்ட கேள்வியால் அதிர்ந்து போன பெற்றோர்... எல்லாத்துக்கும் அந்தப்படம் தான் காரணம்!சாய்பல்லவி கேட்ட கேள்வியால் அதிர்ந்து போன பெற்றோர்... எல்லாத்துக்கும் அந்தப்படம் தான் காரணம்!

    குழந்தைகள் நாடகம்

    குழந்தைகள் நாடகம்

    கேள்வி: உங்களின் நாடகப்பயணத்தில் எந்த மேடையை உங்களால் மறக்க முடியாதது?

    பதில்: எந்த மேடையையும் என்னால் மறக்க முடியாது. நாம் செய்யக்கூடிய வேலை என்பது குறிப்பிட்ட நோக்கத்திற்காக செய்கிறோமே தவிர, ஏனோ, தானோ என்று செய்வதில்லை. நாடகத்தை பொறுத்தவரை குழந்தைகள் நாடகம், பெரியவர்கள் நாடகம், மேடை நாடகம், தெருவில் போடப்படும் நாடகம் என அனைத்திற்கும் ஒரே முக்கியத்துவம் அளிப்பேன்.

    400 பேர் மட்டுமே பார்க்க முடியும்

    400 பேர் மட்டுமே பார்க்க முடியும்

    கேள்வி: சினிமாத்துறை, நாடகத் துறை & இதில் எவற்றின் மூலம் நீங்கள் புகழ் பெற்றீர்கள்?

    பதில்: நாடகத்தில் நடிப்பது என்பது வேறு. சினிமாவில் நடிப்பது என்பது வேறு. சினிமாவில் ஒவ்வொருவரின் காட்சிகள் தனித்தனியாக படம் பிடிக்கப்பட்டு, பின்னர் ஒன்றிணைக்கப்படும். அவ்வாறு உருவான சினிமா ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டும். அனைத்து மக்களிடமும் எளிதாக சென்றடைந்து விடுகிறது. ஆனால் நாடகம் அவ்வாறு இல்லை. நாடகத்தில் நடிக்கும் அனைவரும் ஒரே இடத்தில் கூடி நடித்தால் தான் நாடகம் என்ற உணர்வு ஏற்படும். இவ்வாறு போடப்படும் நாடகம் குறிப்பிட்ட பகுதியில் 300 முதல் 400 பேர் வரை மட்டுமே கண்டுகளிக்க முடியும். நான் நடிப்பு கலையை கற்றுக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக நாடகம் அமைந்தது என்று கூறலாம்.

    மனப்பாடம் தேவையில்லை

    மனப்பாடம் தேவையில்லை

    கேள்வி: நீங்கள் நடித்த திரைப்படங்களில் உங்களை கவர்ந்த வசனம் எது?

    பதில்: உணர்வோடு கலந்து வரும் எந்த வசனமும் சிறந்த வசனம் தான். அப்படிப்பட்ட வசனத்தை நாம் மனப்பாடம் செய்து நடிக்க வேண்டியதில்லை. குறிப்பாக சொல்லப்போனால், நான் நடித்த "கே.டி". படத்தில் என்னுடைய இளம்வயது தோழியை பார்க்கும் காட்சியில் வருகின்ற வசனம் தான் எனக்கு பிடித்தது. அந்த வசனம் என்னவென்றால், "நமக்கு பிடிச்சவங்க நல்லா இருக்கனும்னா, நாம அவங்கள விட்டு விலகி இருக்கிறதும் நல்லது தான்".

    கற்றுக் கொண்டு இருக்கிறேன்

    கற்றுக் கொண்டு இருக்கிறேன்

    கேள்வி: எந்த இயக்குனரிடம் நீங்கள் பணிபுரிய ஆசை?

    பதில்: அப்படி பாகுபாடு எதுவும் கிடையாது. இதுவரை நான் யாரிடமும் வாய்ப்பை தேடி சென்றதில்லை. இந்த கதாபாத்திரத்திற்கு இவர் சரியாக இருப்பார் என்று எண்ணி என்னை இயக்குனர்கள் அணுகுகிறார்கள். அவர்களின் எண்ணத்தை நான் முடிந்தளவு பூர்த்தி செய்கிறேன். தற்போது இளைய தலைமுறையினரிடம் நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன். நாம் நல்ல இயக்குனர்களிடம் இணைந்து பணியாற்றும்பொழுது நல்ல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். தவறான இயக்குனர்களிடம் பணியாற்றும்பொழுது, இது போன்ற சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதையும் கற்றுக் கொள்கிறேன்.

    கருத்து கூறுவது சரியில்லை

    கருத்து கூறுவது சரியில்லை

    கேள்வி: நடிகர் தனுஷிடம் நடித்த அனுபவம் எப்படியிருந்தது? அவரின் படைப்பு பற்றி உங்கள் கருத்து?

    பதில்: நானும், நடிகர் தனுஷூம் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்தோம். இதில் தனுஷ்க்கு தாத்தாவாக நடித்துள்ளேன். நான் வியந்து பெருமைப்பட்ட நடிகர்களில் தனுஷூம் ஒருவர். திரைப்படம் வெளிவருவதற்கு முன்னால் கருத்து கூறுவது என்பது சரியாக இருக்காது என்றார்.

    என்னுடைய அடையாளம்

    கேள்வி: சினிமாத்துறையில் உங்களுடைய அடையாளம் என்ன?

    பதில்: தாடி தான் என்னுடைய அடையாளம். சினிமாத்துறையில் என்னை தாடிக்காரன் என்றே அழைக்கிறார்கள். படங்களுக்கேற்ப என்னுடைய தாடியை பெரிதாகவும், சிறிதாகவும் வைத்துக் கொண்டு வருகிறேன். இனி வரும் படங்களில் தாடியை எடுத்து விட்டு நடிக்க வாருங்கள் என்று கூறினால் அதற்கும் நான் தயாராக இருக்கிறேன். எனக்கு தெரிந்த விஷயங்களை தொடர்ந்து செய்வேன். அது மற்றவர்களால் கவனிக்கப்பட்டால் மிகவும் சந்தோஷம். கொரோனா காலக்கட்டத்தில் மிகுந்த சிரமங்கள் அடைந்த நாடகக்கலைஞர்கள், தற்போது அரசு அறிவித்துள்ள தளர்வுகளால் மீண்டும் நல்ல நிலைமைக்கு வருவார்கள் என நம்புகிறேன். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/uIgeBKiYvnU இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் நடிகர் மு.இராமசாமி பல விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    Beard is my identity says Dhanush’s Reel Grand Father Ramasamy Exclusive Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X