twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முண்டா தட்டும் பாரதி! ஆடாத ஆட்டமெல்லாம் மூலம் செகண்ட் இன்னிங்ஸைத் தொடங்கும் பாரதி, இந்தமுறை வெளுத்து வாங்கிடனும் என்கிற வெறியோடு வேட்டையில் இறங்கியுள்ளார்.வயசுப் பசங்க தான் பாரதியின் முதல் படம். இளம் உள்ளங்களை இம்சை அரசியாகமாறி இம்சித்த பாரதி, அடுத்து சக்திவேல் வெற்றிவேல் படத்தில் சிபியின் ஜோடியாகவந்து துள்ளாட்டம் போட்டுச் சென்றார். இரண்டு படங்களிலும் நல்லா நடிச்சிருந்தும்ஏனோ வாய்ப்பு வராமல் அவதிப்பட்டார் பாரதி.இப்போது மீண்டும் ஆடாத ஆட்டமெல்லாம் மூலம் அடுத்த ரவுண்டுக்குரெடியாகியுள்ளார். இனிமேலாவது நல்லா ஆடுவீங்களா.. பாரதி என்று கேட்டபோது,முன்பே என்னைத் தேடி நிறைய வாய்ப்புகள் வந்தன. நான் மட்டும் நனைத்திருந்தால்,கிட்டத்தட்ட 50 படங்களையாவது இன்னேரம் நடித்து முடித்திருப்பேன். (இத்தானேவேணாங்கிறது)ஆனால் எனக்கென்று சில கொள்கைகள உள்ளன. காலாகாலத்திற்கும் நமது முகம்மக்கள் மனதில் நிற்க வேண்டும். அப்படிப்பட்ட கேரக்டர்களைத்தான் நான் சூஸ்செய்து நடிக்கிறேன்.அதனால்தான் இடையில் கேப் விழுந்து விட்டது. இப்போது சுதாரித்துக் கொண்டுவிட்டேன். இனிமேல் எனது பாய்ச்சலைப் பாருங்கள் என்று முண்டா தட்டினார்.கொஞ்சம் ரெஸ்ட் விட்டு மறுபடியும் மளமளவென பொங்கினார் பாரதி. வெறுமனேகிளாமர் மட்டும் காட்டினால் அதுக்குப் பேரு நடிப்பு இல்லை, வேறு பெயர் உண்டு.அப்படிப்பட்ட பெயர் வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. இப்போது நான் நான்குபடங்களில் நடிக்கிறேன். நான்கிலுமே அருமையான கேரக்டர்கள்.லயா என்ற படத்தில் நானும் ஒரு ஹீரோயின். இதில் போதைப் பழக்கத்தில் விழுந்துவிட்ட ஹீரோவைத் திருத்தும் பாத்திரம் எனக்கு. அப்புறம் யுகா படத்திலும் எனக்குநல்ல கேரக்டர்தான்.பார்த்திபனுடன் ஒரு படத்தில் நடிக்க புக் ஆகியிருக்கேன். இந்த மூன்று படங்களுமேஎனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். கிளாமரும் போதிய அளவில்கொடுத்திருக்கிறேன்.அப்புறம் ஆடாத ஆட்டமெல்லாம். இதிலும் எனது கேரக்டர் பேசப்படும். நல்லநடிப்போடு கூடிய படங்களில் கிளாமர் காட்டுவதில் தப்பே இல்லை. எனவேதான்நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நான் நடிக்க ஆர்வம் காட்டுகிறேன். கூடவேகிளாமரும் சேர்க்கலாம்.அப்படிப்பட்ட படங்களில் நடித்தால்தான் நாம் அனைத்து தரப்பு ரசிகர்களையும்அசத்த முடியும் என்றார் பாரதி.பாரதிக்கு இன்னொரு பேராசையும் இருக்கிறது. அதாவது மணிரத்தினம், அமீர்ஆகியோரது இயக்கத்தில் நடிக்க கொள்ளை ஆசையாம். எனது நடிப்பு மீது எனக்குநம்பிக்கை உள்ளது. அதை இந்த இயக்குனர்கள் பார்த்து என்னை கண்டிப்பாக ஒருநாள் கூப்பிடுவார்கள் என்கிறார் நம்பிக்கையாக.நல்லது!

    By Staff
    |
    ஆடாத ஆட்டமெல்லாம் மூலம் செகண்ட் இன்னிங்ஸைத் தொடங்கும் பாரதி, இந்தமுறை வெளுத்து வாங்கிடனும் என்கிற வெறியோடு வேட்டையில் இறங்கியுள்ளார்.

    வயசுப் பசங்க தான் பாரதியின் முதல் படம். இளம் உள்ளங்களை இம்சை அரசியாகமாறி இம்சித்த பாரதி, அடுத்து சக்திவேல் வெற்றிவேல் படத்தில் சிபியின் ஜோடியாகவந்து துள்ளாட்டம் போட்டுச் சென்றார். இரண்டு படங்களிலும் நல்லா நடிச்சிருந்தும்ஏனோ வாய்ப்பு வராமல் அவதிப்பட்டார் பாரதி.

    இப்போது மீண்டும் ஆடாத ஆட்டமெல்லாம் மூலம் அடுத்த ரவுண்டுக்குரெடியாகியுள்ளார். இனிமேலாவது நல்லா ஆடுவீங்களா.. பாரதி என்று கேட்டபோது,

    முன்பே என்னைத் தேடி நிறைய வாய்ப்புகள் வந்தன. நான் மட்டும் நனைத்திருந்தால்,கிட்டத்தட்ட 50 படங்களையாவது இன்னேரம் நடித்து முடித்திருப்பேன். (இத்தானேவேணாங்கிறது)

    ஆனால் எனக்கென்று சில கொள்கைகள உள்ளன. காலாகாலத்திற்கும் நமது முகம்மக்கள் மனதில் நிற்க வேண்டும். அப்படிப்பட்ட கேரக்டர்களைத்தான் நான் சூஸ்செய்து நடிக்கிறேன்.

    அதனால்தான் இடையில் கேப் விழுந்து விட்டது. இப்போது சுதாரித்துக் கொண்டுவிட்டேன். இனிமேல் எனது பாய்ச்சலைப் பாருங்கள் என்று முண்டா தட்டினார்.

    கொஞ்சம் ரெஸ்ட் விட்டு மறுபடியும் மளமளவென பொங்கினார் பாரதி. வெறுமனேகிளாமர் மட்டும் காட்டினால் அதுக்குப் பேரு நடிப்பு இல்லை, வேறு பெயர் உண்டு.அப்படிப்பட்ட பெயர் வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. இப்போது நான் நான்குபடங்களில் நடிக்கிறேன். நான்கிலுமே அருமையான கேரக்டர்கள்.

    லயா என்ற படத்தில் நானும் ஒரு ஹீரோயின். இதில் போதைப் பழக்கத்தில் விழுந்துவிட்ட ஹீரோவைத் திருத்தும் பாத்திரம் எனக்கு. அப்புறம் யுகா படத்திலும் எனக்குநல்ல கேரக்டர்தான்.

    பார்த்திபனுடன் ஒரு படத்தில் நடிக்க புக் ஆகியிருக்கேன். இந்த மூன்று படங்களுமேஎனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். கிளாமரும் போதிய அளவில்கொடுத்திருக்கிறேன்.

    அப்புறம் ஆடாத ஆட்டமெல்லாம். இதிலும் எனது கேரக்டர் பேசப்படும். நல்லநடிப்போடு கூடிய படங்களில் கிளாமர் காட்டுவதில் தப்பே இல்லை. எனவேதான்நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நான் நடிக்க ஆர்வம் காட்டுகிறேன். கூடவேகிளாமரும் சேர்க்கலாம்.

    அப்படிப்பட்ட படங்களில் நடித்தால்தான் நாம் அனைத்து தரப்பு ரசிகர்களையும்அசத்த முடியும் என்றார் பாரதி.

    பாரதிக்கு இன்னொரு பேராசையும் இருக்கிறது. அதாவது மணிரத்தினம், அமீர்ஆகியோரது இயக்கத்தில் நடிக்க கொள்ளை ஆசையாம். எனது நடிப்பு மீது எனக்குநம்பிக்கை உள்ளது. அதை இந்த இயக்குனர்கள் பார்த்து என்னை கண்டிப்பாக ஒருநாள் கூப்பிடுவார்கள் என்கிறார் நம்பிக்கையாக.

    நல்லது!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X