3 இடத்தில் அடைப்பு..ஆபரேஷன் வேண்டாம்னு மறுத்தான்.. கடைசியில் போய்ட்டியே மனோஜ்.. கதறி அழுத சித்தப்பா!

சென்னை: பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் காலமானார். அவருக்கு அண்மையில் பைபாஸ் சர்ஜரி செய்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்த மனோஜ் பாரதி ராஜா திடீரென உயிரிழந்தார். அவரின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மனோஜின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத பாரதிராஜாவின் சகோதரரான ஜெயராஜ், மனோஜ் குறித்து கதறி அழுதபடி பேட்டி கொடுத்துள்ளார்.

பாரதி ராஜாவின் மகனான மனோஜ், தனது தத்தையைப்போல சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படார். இதற்காக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக சேர்ந்து பாம்பே படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். பாரதிராஜா சினிமாவிற்கு வந்ததே நடிகராக வேண்டும் என்பதால், தனது மகனை 'தாஹ்மகால்' படத்தில் ஹீரோவாக்கினார். இந்த படத்தை தொடர்ந்து, சமுத்திரன், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், ஈர நிலம் ஆகிய படத்தில் ஹீரோவாக நடித்தார்.

Manoj Bharathiraja Jayaraj

திடீர் மறைவு: கடந்த ஆண்டு தந்தையை வைத்து மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கிய மனோஜூக்கு, ஏற்கனவே இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்ததாக கூறப்படுகிறது. அதோடு அவருக்கு மாரடைப்பும் ஏற்பட கடந்த மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், மனோஜ் திடீரென உயிரிழந்தார். அவரின் உடல் நீலாங்கரையில் உள்ள பாரதி ராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு மனோஜின் மகள்கள் இறுதி சடங்குகளை செய்தார்கள்.

3 இடத்தில் அடைப்பு: இந்நிலையில் மனோஜின் சித்தப்பாவும் பாரதிராஜாவின் சகோதரருமான ஜெயராஜ் அளித்த பேட்டியில், மனோஜூக்கு இதயத்தில் இரண்டு மூன்று அடைப்பு இருந்தது. இதற்காக தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தோம். ஆனால், மனோஜ் எனக்கு ஆப்ரேஷன் வேண்டாம் என்று சொன்னார். நாங்கள் தான் மகள்கள் இருக்கிறார்கள் என்று எடுத்து சொல்லி பைபாஸ் சர்ஜரி பண்ண வைத்தோம். ஆப்ரேஷனுக்கு பின், எல்லாம் சரியாகிவிட்டது என்று தான் மருத்துவர்கள் சொன்னார்கள்.

Manoj Bharathiraja Jayaraj

மர்மமா இருக்கு: ஆனால், அன்று மாலை பப்பாளி பழம் சாப்பிட்டார், பின் டீ வேண்டும் என்று கேட்க, மருமகள் டீ போட்டுக்கொண்டு இருந்தார். அப்போதே எனக்கு என்னமோ பண்ணுது என்று சொல்லியபடி உயிரை விட்டார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, நன்றாக அனைவரிடமும் பேசிக்கொண்டு இருந்தான். காலையில் அப்பாவிடம் பேசிக்கொண்டு இருந்தான். அவர் தேனி போக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். நாளைக்கு நீங்க போங்க, நான் இரண்டு நாள் கழித்து வருகிறேன் என்று நன்றாக பேசிக்கொண்டிருந்தவனுக்கு திடீரென என்ன ஆச்சுனு ஒன்னுமே புரியல ஒரே மர்மமாக இருக்கிறது.

கதறிய சித்தப்பா: ஒருவேளை மனோஜூக்கு வேறு ஏதாவது பிரச்சனை இருந்து, எங்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவோம் என நினைத்து மறைத்துவிட்டாரா என்கிற சந்தேகம் கூட வருகிறது. 48 வயசு சாகுற வயசா, அனைவர் இடத்திலும் எப்போதும் சந்தோஷமாக பேசிக்கிட்டே இருப்பான், யாராவது கஷ்டப்படுத்தினால் கூட அதைப்பற்றி மறந்துவிட்டு பேசக்கூடியவன், கடைசியில் இப்படி போய்ட்டானே என கதறி அழுதபடி ஜெயராஜ் அந்த பேட்டியில் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X