»   »  தமிழை பாராட்டும் பாவனா தமிழும் சரி, மலையாளமும் சரி, அங்குள்ள ஹீரோக்கள் ஒவ்வொருவருக்கும் ஒருடேஸ்ட் உண்டு. நடிகர்களுடன் நான் நன்றாகப் பழகுவதால் அத்தனை பேருக்கும்நான் செல்லப் பிள்ளையாக்கும் என்கிறார் பாவனா. திருச்சூரில் லோக்கல்கேபிள் டிவி நிறுவனத்தில் காம்பியராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் தான் பாவனா (கூட வேலை பார்த்தவர் கோபிகா!). அதிர்ஷ்டக்காத்துஅவர் பக்கம் வீசப்போக நடிகையாகி விட்டார்.மலையாளத்தில் நடித்துக்கொண்டிருந்தவரை கூப்பிட்டு சித்திரம் பேசுதடியில் நடிக்கவைத்து பெரிய ஆளாக்கி விட்டனர் கோலிவுட் கோமான்கள். இப்போது பாவனாதமிழில் ரொம்ப பிசி. ஏகப்பட்ட படங்களுடன் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்.எப்படி உங்களால் மட்டும் இத்தனை படங்களை பிடிக்க முடிந்தது என்றுபாவனாவிடம் கேட்டபோது, அப்படியெல்லாம் கிடையாது. எனது நடிப்புக்கு நல்லஅங்கீகாரம் கிடைத்துள்ளது. அதனால்தான் நிறையப் படங்கள் கிடைத்துள்ளன.நான் யாருக்கும் எதிரி கிடையாது. எனக்கென்று உள்ள கேரக்டர்கள், படங்கள் எனக்குவந்துதான் ஆகும். அப்படித்தான் படங்கள் வந்து கொண்டுள்ளன. நானாக போய்யாருடைய வாய்ப்பையும் தட்டிப் பறிப்பதில்லை. (யாரையோ மறைமுகமாகதாக்குகிறாரே)உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும்ஹீரோக்களின் விருப்ப நாயகியாக நான் உள்ளேன். அத்தனை பேருக்கும் நான்செல்லப் பிள்ளையாக்கும்.மலையாளத்தை விட தமிழில்தான் நல்ல டெக்னீஷியன்கள் நிறைய இருக்கிறார்கள்.நல்ல நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள்,கேமராமேன்கள் எனஇங்குள்ளஅத்தனை பேருமே வித்தியாசமானவர்கள், திறமையாளர்கள். அவர்களுடன்சேர்ந்து பணியாற்றுவது சந்தோஷமான அனுபவமாக உள்ளது.இப்போது மாதவனுடன் ஆர்யா, ஜெயம் ரவியுடன் தீபாவளி, பரத்துடன் வெயில்,கூடல் நகர், ஸ்ரீகாந்த்துடன் கிழக்கு கடற்கரைச் சாலை என நிறையப் படங்கள்.அத்தனையிலும் எனக்கு அருமையான கேரக்டர்கள் என்றார்.எல்லாம் சரி பாவனா, விழாக்களுக்கு எல்லாம் லேட்டாகவே போகிறீர்களாமே என்றுநெகட்டிவ் பாயிண்ட்டை எடுத்துத் தட்டி விட்டோம். தெத்துப் பல் தெரிய வளைந்து,நெளிந்து சிரித்தவர், ஐய்யோ அப்படியெல்லாம் கிடையாது. அவர்கள் எந்த நேரத்தில்வரச் சொல்கிறார்களோ, அப்போதுதான் போகிறேன். வேண்டும் என்றே லேட்டாகப்போவதில்லை.சரி, கிளாமர்? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. நல்லா நடிக்கணும், கிளாமர்காட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நடிப்பை வெளிப்படுத்தும்கேரக்டர்களைத்தான் தேர்வு செய்து நடிக்கிறேன். வெறும் உடம்பைக் காட்டிநான்நடிக்கவே மாட்டேன்.பனானா மாதிரி இனிக்க இனிக்கப் பேசும் பாவனாவின் பேச்சி பாவலாதெரியவில்லை, ஸோ நம்புவோம்.

தமிழை பாராட்டும் பாவனா தமிழும் சரி, மலையாளமும் சரி, அங்குள்ள ஹீரோக்கள் ஒவ்வொருவருக்கும் ஒருடேஸ்ட் உண்டு. நடிகர்களுடன் நான் நன்றாகப் பழகுவதால் அத்தனை பேருக்கும்நான் செல்லப் பிள்ளையாக்கும் என்கிறார் பாவனா. திருச்சூரில் லோக்கல்கேபிள் டிவி நிறுவனத்தில் காம்பியராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் தான் பாவனா (கூட வேலை பார்த்தவர் கோபிகா!). அதிர்ஷ்டக்காத்துஅவர் பக்கம் வீசப்போக நடிகையாகி விட்டார்.மலையாளத்தில் நடித்துக்கொண்டிருந்தவரை கூப்பிட்டு சித்திரம் பேசுதடியில் நடிக்கவைத்து பெரிய ஆளாக்கி விட்டனர் கோலிவுட் கோமான்கள். இப்போது பாவனாதமிழில் ரொம்ப பிசி. ஏகப்பட்ட படங்களுடன் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்.எப்படி உங்களால் மட்டும் இத்தனை படங்களை பிடிக்க முடிந்தது என்றுபாவனாவிடம் கேட்டபோது, அப்படியெல்லாம் கிடையாது. எனது நடிப்புக்கு நல்லஅங்கீகாரம் கிடைத்துள்ளது. அதனால்தான் நிறையப் படங்கள் கிடைத்துள்ளன.நான் யாருக்கும் எதிரி கிடையாது. எனக்கென்று உள்ள கேரக்டர்கள், படங்கள் எனக்குவந்துதான் ஆகும். அப்படித்தான் படங்கள் வந்து கொண்டுள்ளன. நானாக போய்யாருடைய வாய்ப்பையும் தட்டிப் பறிப்பதில்லை. (யாரையோ மறைமுகமாகதாக்குகிறாரே)உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும்ஹீரோக்களின் விருப்ப நாயகியாக நான் உள்ளேன். அத்தனை பேருக்கும் நான்செல்லப் பிள்ளையாக்கும்.மலையாளத்தை விட தமிழில்தான் நல்ல டெக்னீஷியன்கள் நிறைய இருக்கிறார்கள்.நல்ல நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள்,கேமராமேன்கள் எனஇங்குள்ளஅத்தனை பேருமே வித்தியாசமானவர்கள், திறமையாளர்கள். அவர்களுடன்சேர்ந்து பணியாற்றுவது சந்தோஷமான அனுபவமாக உள்ளது.இப்போது மாதவனுடன் ஆர்யா, ஜெயம் ரவியுடன் தீபாவளி, பரத்துடன் வெயில்,கூடல் நகர், ஸ்ரீகாந்த்துடன் கிழக்கு கடற்கரைச் சாலை என நிறையப் படங்கள்.அத்தனையிலும் எனக்கு அருமையான கேரக்டர்கள் என்றார்.எல்லாம் சரி பாவனா, விழாக்களுக்கு எல்லாம் லேட்டாகவே போகிறீர்களாமே என்றுநெகட்டிவ் பாயிண்ட்டை எடுத்துத் தட்டி விட்டோம். தெத்துப் பல் தெரிய வளைந்து,நெளிந்து சிரித்தவர், ஐய்யோ அப்படியெல்லாம் கிடையாது. அவர்கள் எந்த நேரத்தில்வரச் சொல்கிறார்களோ, அப்போதுதான் போகிறேன். வேண்டும் என்றே லேட்டாகப்போவதில்லை.சரி, கிளாமர்? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. நல்லா நடிக்கணும், கிளாமர்காட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நடிப்பை வெளிப்படுத்தும்கேரக்டர்களைத்தான் தேர்வு செய்து நடிக்கிறேன். வெறும் உடம்பைக் காட்டிநான்நடிக்கவே மாட்டேன்.பனானா மாதிரி இனிக்க இனிக்கப் பேசும் பாவனாவின் பேச்சி பாவலாதெரியவில்லை, ஸோ நம்புவோம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழும் சரி, மலையாளமும் சரி, அங்குள்ள ஹீரோக்கள் ஒவ்வொருவருக்கும் ஒருடேஸ்ட் உண்டு. நடிகர்களுடன் நான் நன்றாகப் பழகுவதால் அத்தனை பேருக்கும்நான் செல்லப் பிள்ளையாக்கும் என்கிறார் பாவனா.

திருச்சூரில் லோக்கல்கேபிள் டிவி நிறுவனத்தில் காம்பியராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் தான் பாவனா (கூட வேலை பார்த்தவர் கோபிகா!). அதிர்ஷ்டக்காத்துஅவர் பக்கம் வீசப்போக நடிகையாகி விட்டார்.

மலையாளத்தில் நடித்துக்கொண்டிருந்தவரை கூப்பிட்டு சித்திரம் பேசுதடியில் நடிக்கவைத்து பெரிய ஆளாக்கி விட்டனர் கோலிவுட் கோமான்கள். இப்போது பாவனாதமிழில் ரொம்ப பிசி. ஏகப்பட்ட படங்களுடன் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்.

எப்படி உங்களால் மட்டும் இத்தனை படங்களை பிடிக்க முடிந்தது என்றுபாவனாவிடம் கேட்டபோது, அப்படியெல்லாம் கிடையாது. எனது நடிப்புக்கு நல்லஅங்கீகாரம் கிடைத்துள்ளது. அதனால்தான் நிறையப் படங்கள் கிடைத்துள்ளன.

நான் யாருக்கும் எதிரி கிடையாது. எனக்கென்று உள்ள கேரக்டர்கள், படங்கள் எனக்குவந்துதான் ஆகும். அப்படித்தான் படங்கள் வந்து கொண்டுள்ளன. நானாக போய்யாருடைய வாய்ப்பையும் தட்டிப் பறிப்பதில்லை. (யாரையோ மறைமுகமாகதாக்குகிறாரே)

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும்ஹீரோக்களின் விருப்ப நாயகியாக நான் உள்ளேன். அத்தனை பேருக்கும் நான்செல்லப் பிள்ளையாக்கும்.

மலையாளத்தை விட தமிழில்தான் நல்ல டெக்னீஷியன்கள் நிறைய இருக்கிறார்கள்.நல்ல நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள்,கேமராமேன்கள் எனஇங்குள்ளஅத்தனை பேருமே வித்தியாசமானவர்கள், திறமையாளர்கள். அவர்களுடன்சேர்ந்து பணியாற்றுவது சந்தோஷமான அனுபவமாக உள்ளது.

இப்போது மாதவனுடன் ஆர்யா, ஜெயம் ரவியுடன் தீபாவளி, பரத்துடன் வெயில்,கூடல் நகர், ஸ்ரீகாந்த்துடன் கிழக்கு கடற்கரைச் சாலை என நிறையப் படங்கள்.

அத்தனையிலும் எனக்கு அருமையான கேரக்டர்கள் என்றார்.

எல்லாம் சரி பாவனா, விழாக்களுக்கு எல்லாம் லேட்டாகவே போகிறீர்களாமே என்றுநெகட்டிவ் பாயிண்ட்டை எடுத்துத் தட்டி விட்டோம். தெத்துப் பல் தெரிய வளைந்து,நெளிந்து சிரித்தவர், ஐய்யோ அப்படியெல்லாம் கிடையாது. அவர்கள் எந்த நேரத்தில்வரச் சொல்கிறார்களோ, அப்போதுதான் போகிறேன். வேண்டும் என்றே லேட்டாகப்போவதில்லை.

சரி, கிளாமர்? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. நல்லா நடிக்கணும், கிளாமர்காட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நடிப்பை வெளிப்படுத்தும்கேரக்டர்களைத்தான் தேர்வு செய்து நடிக்கிறேன். வெறும் உடம்பைக் காட்டிநான்நடிக்கவே மாட்டேன்.

பனானா மாதிரி இனிக்க இனிக்கப் பேசும் பாவனாவின் பேச்சி பாவலாதெரியவில்லை, ஸோ நம்புவோம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil