சந்திப்போமா?
பூமிகா வருத்தத்தில் இருக்கிறார். பின்னே, படத்திற்குப் படம் அவரைப் பற்றிய வதந்திகள் வந்து கொண்டே இருந்தால் வருத்தப்படாமல் என்னசெய்வாராம்.
பூமிகாவிடம் உங்கள் காதல் சமாச்சாரம் என்ன ஆயிற்று என்று கேட்டால் கண்களில் கிளிசரின் போடாமலேயே கலங்கி விடுகிறார். மூக்கை ஒருகையில் சிந்தியவாறு, இத பாருங்க சார், சூர்யா டைரக்ஷன்ல ஒரு படம் செய்தவுடன் அவருடன் எனக்குக் காதல்னு சொன்னாங்க.
நான் அதை பொருட்படுத்தவேயில்லை. இப்போ ரோஜாக் கூட்டம் படத்துல ஸ்ரீகாந்துடன் நடித்தவுடன் எனக்கும், அவருக்கும் காதல்னு சொல்றாங்க.
உண்மையில் எனக்கு யாருடனும், எப்போதும் காதல் இருந்ததில்லை. நான், நானாகவே இருக்கப் பிரியப்படுகிறேன். இவையெல்லாம் என் வளர்ச்சியைப்பொறுக்க முடியாமல் சிலர் கிளப்பி விடும் வதந்திகள்.
இதனால் நான் பாதிக்கப்பட மாட்டேன். முதலில் இவை குறித்து பயந்தாலும் கூட அப்புறம் இவற்றை கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகிக்கொண்டேன் என்கிறார் பூமிகா.
நம்மிடம் ரொம்ப காரமாக பேசி விட்டதாக நினைத்தாரோ என்னவோ, தெலுங்கில் இப்போது சில படங்களில் நடிக்கிறேன். அதன் பிறகு தமிழில்மீண்டும் நிடிப்பேன். கவலைப்படாதீங்க என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
ஆமா, குஷி படத்தை சூர்யா தெலுங்கில் இயக்கும்போது அவர் கூடவே சுத்தினது ஏன்? அப்புறம் ஸ்ரீகாந்த் கிடைச்சவுடனே அவரைக் கழற்றிவிட்டதுஏன்? என்ற கேள்விகளுடன் போயிருந்த நமக்கு அந்த அழகிய கண்களில் கண்ணீர் பார்க்க பிடிக்காததால் அமைதியாக திரும்பிவிட்டோம்.


Click it and Unblock the Notifications











