விஜய் நடித்த குஷி தான் ரொம்ப பிடிக்கும்.. ஜெயம் ரவி கேரக்டர் இதுதான்.. நடிகை பூமிகா ஓபன் டாக்!

சென்னை: எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா, மும்தாஜ், விவேக் நடித்த குஷி திரைப்படம் 2000ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. 24 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அப்பவே 22 கோடி என்கின்றனர்.

அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கி அறிமுகமான எஸ்.ஜே. சூர்யாவுக்கு அடுத்த ஆண்டே விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் சூப்பரா கலக்குறானே யாருப்பா அந்த எஸ்.ஜே. சூர்யா இங்கே கொண்டு வாங்க என பவன் கல்யாண் குஷி படம் வந்த உடனே அவரை அழைத்துப் போய் தெலுங்கிலும் குஷி படத்தை ரீமேக் செய்து நடித்தார்.

bhumika chawla vijay diwali 2024

2001ம் ஆண்டு வெளியான தெலுங்கு குஷி திரைப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக பூமிகா நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பூமிகா விஜய் நடித்த குஷி படம் தனக்கு ரொம்பவே பிடிக்கும் என பேசியுள்ளார்.

46 வயதிலும் அப்படியே இருக்காங்களே: 46 வயதை கடந்துள்ள நடிகை பூமிகா இன்னமும் பத்ரி படத்தில் பார்த்ததை போலவே செம க்யூட்டாக இருக்காங்க என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பத்ரி, ரோஜாக் கூட்டம், சில்லுனு ஒரு காதல் என ஏகப்பட்ட கோலிவுட் ரசிகர்களை கவர்ந்த பூமிகா தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். அக்கா, அம்மா கதாபாத்திரங்களிலும் அழகாக தற்போது நடித்து வருகிறார்.

விஜய்யோட குஷி தான் பிடிக்கும்: இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா வாலி படத்தை முடித்து விட்டு அடுத்ததாக விஜய், ஜோதிகா, மும்தாஜை வைத்து இயக்கிய குஷி திரைப்படம் சிறந்த படமா? அல்லது அந்த படத்தை ரீமேக் செய்து பவன் கல்யாண் நடித்த குஷி படம் பெஸ்ட் படமா? என கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சண்டையே வெடித்தது. இரண்டு படங்களையும் அதே எஸ்.ஜே. சூர்யா தான் இயக்கினார். இந்நிலையில், தனக்கு விஜய் நடித்த குஷி படம் ரொம்பவே பிடிக்கும் என பேட்டி ஒன்றில் பூமிகா கூறியுள்ளார். அதிலும், தன்னுடைய நடிப்பை விட ஜோதிகா செம க்யூட்டாக நடித்திருப்பார் என்றும் கூறியுள்ளார்.

ஜெயம் ரவி படத்தில்: வரும் தீபாவளிக்கு ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், நட்டி நட்ராஜ், சரண்யா பொன்வண்ணன், சீதா, யோகி பாபு, விடிவி கணேஷ் நடித்துள்ள பிரதர் படத்தில் ஆனந்தி எனும் கதாபாத்திரத்தில் பூமிகா நடித்துள்ளார். ஊட்டியில் தான் படப்பிடிப்பு நடந்தது. ஜெயம் ரவி ரொம்பவே அன்பாகவும் பொறுமையாகவும் நடந்துக் கொள்பவர். ஒருநாள் கூட எந்த பிரச்சனையும் இல்லாமல் படப்பிடிப்பு நடைபெற்றது. தீபாவளிக்கு நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல ரொமான்டிக் காமெடி படமாக பிரதர் அமையும் என பூமிகா பேசியுள்ளார்.

தமிழில் குறைவான படங்கள் ஏன்?: பத்ரி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பூமிகா ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் படங்களை தவிர லீடு ரோலில் நடிக்கவே இல்லை. அதன் பின்னர் துணை நடிகையாக மாறிய நிலையில், சித்திரையில் நிலாச்சோறு, யூ டர்ன், கொலையுதிர் காலம், கண்ணை நம்பாதே என குறைவான படங்களில் மட்டுமே நடித்தது ஏன் என்கிற கேள்விக்கு தெலுங்கில் கொஞ்சம் பிஸியாகி விட்டேன். ஒரு படத்தில் கமிட் ஆகும் போதே மற்ற படங்களிலும் மற்ற மொழிகளிலும் நடிக்க மாட்டேன். அந்த கேரக்டரை உள்வாங்கி நடிப்பேன். அதனாலே பல பட வாய்ப்புகளை தவறவிட்டுள்ளேன் என்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X