For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

“இனி பிக் பாஸ் பக்கமே தலை வைத்துகூட படுக்க மாட்டேன்”.. எவிக்சனுக்கு பிறகு மதுமிதாவின் முதல் பேட்டி

|
Bigg Boss 3:Madhu தற்கொலைக்கு காரணம் Sherin

சென்னை: பிக் பாஸ் பக்கம் இனி தலைவைத்துக்கூட படுக்கமாட்டேன் என நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 3வது சீசனின் முக்கிய போட்டியாளரான மதுமிதா தான் இப்போது சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக். தற்கொலைக்கு முயற்சித்த அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிவிட்டனர்.

மதுமிதா தற்கொலைக்கு முயற்சிக்க காரணம் என்ன?, பிக் பாஸ் வீட்டில் அன்றைய தினம் நடந்தது என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள மதுமிதா பிரபல இணையதள தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பிக் பாஸ் வீட்டிற்குள் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

குத்துறதையும் குத்திட்டு.. இப்போ நீலிக்கண்ணீர் வடிக்கும் லாஸ்லியா.. உனக்கு வந்தா மட்டும் ரத்தமா?

பிக் பாஸ் வாய்ப்பு:

பிக் பாஸ் வாய்ப்பு:

பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, " பிக் பாஸ் 2வது சீசனிலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது தான் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்ததால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. பிறகு மூன்றாவது சீசனில் கூப்பிடவும் இம்முறை வாய்ப்பை இழக்க வேண்டாம் என நினைத்து சம்மதித்துவிட்டேன்.

தமிழ் கலாச்சாரம்:

தமிழ் கலாச்சாரம்:

பிக் பாஸ் வீட்டில் எனக்கு முதன் முதலில் பிரச்சினை ஏற்பட்டது ஷெரீனுடன் தான். நம்ம தமிழ் ஆடியன்சுக்கு தான் நிகழ்ச்சி செய்கிறோம். ஆனால் ஷெரீன், அபிராமி என யாருமே தமிழ் பேசவில்லை. உடைகளும் நம்ம கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி அணியவில்லை. இதை தான் நான் கேட்டேன். ஆனால் அதை எனக்கே திருப்பிவிட்டனர்.

பட்டபெயர்:

பட்டபெயர்:

கவின் யாரையும் மதிக்கமாட்டான். பொண்ணுங்க கூட மட்டும் தான் சுத்துவான். ஒரு அக்கா மாதிரி இருந்து அவனுக்கு புத்திமதி சொன்னேன். ஆனால் அவன் அதை கேட்கவே இல்லை. எனக்கு குள்ளச்சி என பெயர் வைத்தது கவின் தான். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. சாண்டி விவகாரத்திலும் எனக்கு அது தான் நடந்தது.

நியாயமான மனிதர்:

நியாயமான மனிதர்:

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒரே நியாயமான மனிதர் சேரன் மட்டும் தான். லாஸ்லியாவை அவர் மகளாக தான் நினைக்கிறார். ஆனால் லாஸ்லியா சேரனை அப்படி பார்க்கவில்லை. முதலில் அவள் நன்றாக தான் இருந்தாள். ஆனால் கவினுடன் சேர்ந்த பிறகு அவளது மனம் மாறிவிட்டது.

ஆண் பெண் பேதம்:

ஆண் பெண் பேதம்:

பிக் பாஸ் வீட்டில் ஆண், பெண் பேதம் இருக்கு. அங்குள்ள ஆண்கள், பெண்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். கடந்த 55 நாட்களாக இதுதான் தொடர்கிறது. அபிராமி சிறைக்கு சென்ற விவகாரத்திலும் இது தான் நடந்தது. அதை நான் தட்டி கேட்டதற்காக தான் என்னிடம் சண்டைக்கு வந்தனர்.

கர்நாடகாக்காரர்:

கர்நாடகாக்காரர்:

கடந்த வியாழக்கிழமை ஹலோ ஆப் டாஸ்கில் நான் என்னுடைய கருத்தை சொன்னேன். வருண பகவான் கூட கர்நாடகாக்காரர் தான் போலிருக்கு. நமக்கு மழையே கொடுக்க மாட்டேங்கிறார். தயது செய்து வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என்று கூறினேன்.

சண்டை போட்ட ஷெரீன்:

சண்டை போட்ட ஷெரீன்:

இதற்கு ஷெரீன் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவை சேர்ந்த நான் இங்கு இருக்கும் போது எப்படி நீ இப்படி ஒரு கருத்தை கூறலாம். இது ஒன்றும் உன்னுடைய சமூக வலைதளம் கிடையாது என ஷெரீன் கத்தினார்.

தமிழ்ப்பொண்ணு பிரச்சினை:

தமிழ்ப்பொண்ணு பிரச்சினை:

இதற்கு நானும் பதில் அளித்தேன். ஹலோ ஆப் ஒரு சமூக வலைதளம் தானே. அதில் என்னுடைய கருத்தை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என கேட்டேன். ஆனால் அவர்கள் ஒற்றுக்கொள்ளவில்லை. நீ என்ன எப்ப பார்த்தாலும் தமிழ் பெண் என சொல்ற. தமிழக மக்களுக்காக உயிரை கொடுக்க முடியுமா எனக் கேட்டனர்.

சேரனும் கஸ்தூரியும்:

சேரனும் கஸ்தூரியும்:

அதனால் தான் நான் எனது கையை அறுத்துக்கொண்டு எனது வாதத்தை நிரூபித்தேன். நான் கையை அறுத்துக்கொண்ட போது எனக்கு ஆதரவாக இருந்தது சேரனும், கஸ்தூரியும் தான். வேறு யாரும் என்னிடம் வரவில்லை. இனி பிக் பாஸ் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க மாட்டேன்" என மதுமிதா தெரிவித்தார்.

English summary
In an interview to a youtube channel, actress Madhumitha revealed what was the reason for her eviction from the bigg boss house.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more