நடியா சாங்-கிற்கு நச் டிப்ஸ்களை கொடுத்தது இவர்தான் – கண்கள் மட்டுமே பேசும் ஏஜே ப்ரொபசர்

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்தாலும் வெளியே வந்தாலும் அவர்களுக்கான மாஸ் குறைவதே இல்லை. எல்லா சீசன்களிலும் யாராவது சிலர் மறக்கமுடியாத முத்திரைகளை பதித்துவிட்டு செல்கின்றனர்.

Recommended Video

AJ Professor என் தம்பிதான் Full support | Nadia Chang | Bigg boss 5 | Filmibeat Tamil

அந்த வரிசையில் நடியா சாங் பற்றிய பல தேடல்களும், பல சுவாரஸ்யங்களும் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருக்கின்றனர். மலேசியாவுக்கு சென்றாலும் இன்றும் பரபரப்பான சிலபல தகவகல்களால் வீடியோக்களால் நடியா சாங் நின்று விளையாடுகிறார்.

அவரின் அம்மாதான் தன்னுடைய ரோல் மாடல் என்று சொல்லியிருந்தாலும், பக்கபலமாக இருக்கும் அவருக்கு நெருக்கமான ஒருவர், முகம் காட்டாமல் கண்களை மட்டும் காட்டியபடி மனம் திறந்தார். (வீடியோவாக பிலிமிபீட் தமிழ் யூட்யூப் தளத்திலும் அதை காணலாம்.) ஏஜே ப்ரொபசர் என்ற நபர் நடியா சாங்-கிற்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக நின்றவர். அவரும், நடியா சாங்-கும் நமக்கு கொடுத்த சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ.

இது யார் தெரியுமா?

இது யார் தெரியுமா?

கேள்வி : யார் இந்த கண்கள் மட்டும் காட்டும் ஏஜே ப்ரொபசார்?

பதில் : பிக்பாஸ் வீட்டுக்கு உள்ள போற வரைக்கும் பக்க பலமா ஹெல்ப் பண்ணினவர். என் உடன் பிறவா சகோதரர் ஏஜே ப்ரொபசர். எங்களுக்குள்ள ரத்த பந்தம் இல்லன்னாலும், ஒரு அண்ணனா எனக்கு எல்லா சப்போர்ட்டும் பண்ணியவர். இது வரைக்கும் நானுமே அவர் முகத்த பார்த்ததில்ல. கண்கள மட்டும் தான் பார்த்திருக்கேன்.

கேள்வி : பிக்பாஸ்-ல நீங்க அழுதது உண்டா ?

பதில் : நிறையபேரோட கதைகள கேட்கும் போது எனக்கே நிறைய கண்கலங்கிட்டு. எனக்கே சில நேரங்கள் ல அழுக வந்துருக்கு. ஆனா நல்ல வேள அதெல்லாம் காட்டுல.

ரொம்ப ஆட்டிட்யூட்

ரொம்ப ஆட்டிட்யூட்

கேள்வி : பிக்பாஸ் கண்டன்ஸ்டன் ல ஆட்டிட்யூட் மாத்திக்கிட்டா நல்லா இருக்கும்-ன்னு நினைக்கிறது யார்?

பதில் ( நடியா) : மாத்திக்கனும் மாத்திக்க கூடாதுன்னு யாரையும் சொல்லிட முடியாது. ஏன்னா அந்த மாதிரி ஆட்டிட்யூட் காட்றது கூட கேம் ஆ இருக்கலாம். அதனால அப்படி யாரையும் யூகிச்சு சொல்லிட முடியாது.

அவங்க அவங்களா இருந்தா போதும்

சில நெகடிவ் இருந்தாலும்

சில நெகடிவ் இருந்தாலும்

கேள்வி : நடியாவுக்கு நீங்க குடுத்த டிப்ஸ்-ல முக்கியமானது எது?

பதில் ( ஏஜே ): நல்ல புரிதல்தான் எங்களுக்குள்ள ஒரு பாண்டிங். டிப்ஸ்-ல்லாம் நான் ஏதும் குடுக்கல. வருத்தமா இருந்த நேரத்துல உற்சாகமான வார்த்தைகளை மட்டும் கொடுத்தேன். அவங்க அவங்களா இருந்தாலே சில விஷயங்கள் நடக்கும். அத எப்படி கடந்து போகனும், இததான் நான் சொல்லி குடுத்தேன்

கேள்வி : சோசியல் மீடியால நடியா பத்தி என்ன பேசிக்கிறாங்க?

பதில் ( ஏஜே ) : ட்ரோல்ஸ், மீம்ஸ் பன்றதுல சில நெகடிவ் இருந்தாலும், அத தாண்டி எவ்வளவு அன்பு, அக்கறையோட நிறைய மக்கள் இருக்காங்க. அதான் வேற லெவல் வெற்றி, சந்தோஷம். நெகடிவ் விஷயங்கள் வந்தாலும், அத தாண்டி வெடிச்சி வெளில வர்ற அளவு நடியா பத்தி பாசிட்டிவ் விஷயங்கள் வெளில வருது, அதுக்கு நன்றி சொல்றோம்

மலேசிய பெண்களுக்கு செம ட்ரீட்

மலேசிய பெண்களுக்கு செம ட்ரீட்

கேள்வி : சொந்த ஊர் மக்களுக்கு செய்யப்போவது என்ன?

பதில் (ஏஜே) : நடியா சாங் மூன்று குழந்தைக்கு அம்மா. இருந்தாலும் எல்லா சூழலையும் கடந்து இந்த பெரிய இடத்துல கால் வச்சி, அவங்க சாதிச்சிட்டாங்க . மலேசியா வந்ததும், இங்க இருக்க, சாதிக்க முடியாத பெண்கள், வீட்ட விட்டு வெளில வர முடியாத திறமையுள்ள பெண்கள், இவங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் மூலமா, வழி நடத்த போறதா சொன்னாங்க.நான் மட்டும் முன்னேறுனது மட்டுமில்லாம பலரையும் கை குடுத்து தூக்கிவிட போறேன்-ன்னு சொல்லிருந்தாங்க. இத இப்பதான் முதல் முறையா வெளில, அதுவும் இங்க சொல்றோம். நிச்சயமா அது செயல்பட போகுது. அதுவே எல்லாருக்கும் மிகப்பெரிய சந்தோஷம் வெற்றி.

நதி போல ஓடி

நதி போல ஓடி

கேள்வி : நடியாவுக்கு நிறைய விஷயங்கள் சொல்லிகுடுத்த நீங்க, எல்லாருக்கும் சொல்லப்போற முக்கியமான விஷயம் என்ன?

பதில் : நமக்கு தெரிஞ்சவங்களோ தெரியாதவங்களோ யாரா இருந்தாலும் அவங்கள பத்தி தவறா பேசாதீங்க. விஜய் சொல்ற மாதிரி நதி போல ஓடிக்கொண்டிரு. அவ்ளோதான். முடிஞ்ச வரைக்கும் ஊக்குவிங்க. உற்சாகப்படுத்துங்க. அது போதும்.என்று கலகலப்பாக சொல்லி முடித்தார் ஏஜே.

இருவருமே விஜய் ஃபேன்ஸ்

இதில் இன்னொரு ஒற்றுமை நடியா சாங்- ஏஜே ப்ரொபசர் இருவருமே விஜய் ஃபேன்ஸ் என்பதாகும். சென்னை வந்ததும் ஏஜே விற்கு செல்போன் மூலம் அழைத்து விஜய் வீடு எங்கே இருக்கிறது என்றுதான் முதலில் கேட்டாராம் நடியா. இன்னும் பல சுவாராஸ்ய தகவல்களை, நடியாசாங் பற்றிய செய்திகளை பிலிமிபீட் தமிழ் யூட்யூப் தளத்திலும் காணலாம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X