பிக் பாஸ் அன்ஷிதா நடிக்கும் புதிய சீரியல்.. ஹீரோ யாருனு தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலருக்கும் பிடித்தமான நடிகையாக மாறிய நடிகை அன்ஷிதா விஜய் டிவியில் புதியதாக ஒளிபரப்பாக உள்ள சீரியல் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். அந்த சீரியலில் அனைவருக்கும் பிடித்த நடிகர் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செல்லம்மா' சீரியல் முடிந்த கையோடு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் நடிகை அன்ஷித்தா. பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக விளையாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளரான விஜே விஷாலை காதலிப்பதாக செய்திகள் பரவியது. அது உண்மை தான் என்பது போல, அன்ஷிதாவின் குடும்பத்தோடு விஷால் இருக்கும் போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Anshita Bigg boss
Photo Credit:

புது சீரியல்: இந்த நிலையில், அன்ஷிதா புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநிதி சீரிலை இயக்கி வரும், இயக்குனர் பிரவீன் பென்னட் இந்த இயக்க உள்ளார். அதில், ஹீரோவாக நடிகர் பிரேம் கமிட்டாகி உள்ளார். ' நீ தான் காதல்' சீரியலில் ராகவ் என்ற ரோலில் நடித்திருந்தார். அந்த சீரியல் முடித்த பிறகும் பிரேமை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இரண்டு கதாநாயகிகள் கொண்ட இந்த சீரியலில், மற்றொரு கதாநாயகியாக, தர்ஷனா ஒப்பந்தமாகி உள்ளார். இவர், தமிழும் சரஸ்வதியும் தொடரிலும், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சி தொடரிலும் நடித்து வருகிறார். பிரேம், அன்ஷிதா, தர்ஷனா ஆகியோர் கதையின் மையப்புள்ளி நடிக்கும் இந்த சீரியலுக்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் இந்த சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

விஜே விஷால்: நடிகை அன்ஷிதா, செல்லம்மா சீரியலில் அர்னவுடன் சேர்ந்து நடித்த போது, இருவரும் நெருங்கி பழகி வருவதாகவும், அன்ஷிதாவின் பேச்சை கேட்டு தன்னை தாக்கியதாகவும், அர்னாவின் மனைவி திவ்யா ஸ்ரீதர் குற்றம் சாட்டியிருந்தார். அதன்பின் அர்னவிற்கும் திவ்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது சண்டையாக மாறி கடைசியில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம் அன்ஷிதா தான் என சொல்லப்பட்ட நிலையில், அன்ஷிதா அர்னாவை பிரேக் அப் செய்துவிட்டு, விஜே விஷாலை காதலித்து வருவதாக செய்திகள் பரவின. அது உண்மை என்பது போல இருவரும் பல இடத்தில் ஜோடியாக சுற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X