நான் காதலிச்ச ஆள் தப்பானவர்.. நிறைய செருப்படி வாங்கியாச்சு.. பிக் பாஸ் அன்ஷிதா கண்ணீர் பேட்டி!

சென்னை: கேரளாவைச் சேர்ந்த நடிகை அன்ஷிதா அக்பர்ஷா,விஜய் டிவியில் ஒளிபரப்பான 'செல்லம்மா' சீரியலில் மூலமாக அறிமுகமானார். இந்த சீரியலுக்குப் பின்'குக்கு வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து, 'பிக் பாஸ்' சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவரின் மலையாளம் கலந்த தமிழ் ரசிகர்களுக்கு பிடித்து இருந்ததால், பிக் பாஸ் வீட்டில், 84 நாட்கள் இருந்தார். தற்போது இவர், Galatta Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், சொந்த வீடு வாங்கியது, காதல், பிரேக் அப் என பல விஷயம் குறித்து பேசி உள்ளார். என்னுடைய அம்மா பிறந்ததிலிருந்து சொந்த வீட்டிலேயே இருந்ததில்லை, அவர்களுக்காக ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதே போல, இது நாள் வரை அம்மாவிற்கும் சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என்ற ஆசை, அந்த ஆசைக்காகத்தான் நான் கஷ்டப்பட்டு வீட்டை வாங்கி, அதற்கு 'Gulu Heaven' என பெயர் வைத்திருக்கிறேன். அம்மா உடம்பு முடியாமல் இருந்தபோது கூட, அன்ஷிமா, நான் இப்போது சாகக்கூடாது, நீ வீடு வாங்கிய பிறகு அந்த வீட்டில் ஒரு நாளாவது வாழ்ந்த பிறகு தான் சாகவேண்டும் என்றார். அவருடைய கனவாகவே இருந்தது வீடு, அதைத்தான் நான் இப்போது நிறைவேற்றி இருக்கிறேன். அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

Anshithaa Arnav VJ Vishal
Photo Credit:

நிறைய செருப்படி: தொடர்ந்து காதல் குறித்து பேசிய நடிகை அன்ஷிதா, காதலித்து பல ஏமாற்றத்தையும், பல அவமானங்களையும் நான் சந்தித்து விட்டு. இனிமேல் காதல் என்றால், 'தாவுடா தாவுடா' என வடிவேலு சார் பாணியில் நான் சென்று விடுகிறேன். இப்போது, ஆண்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது. ஏன் என்றால் அவ்வளவு செருப்படி வாங்கி இருக்கிறேன். அதற்காக காதலிப்பது தவறு என்று நான் சொல்லவில்லை, நான் காதலித்த ஆள் தான் தப்பானவர். எனக்கு உண்மையாக இருந்தால், அவர்களுக்காக உயிரையும் கொடுப்பேன். ஆனால், அதுபோல யாரும் செய்வதில்லை. இனிமேல், எந்த பிரச்சனையிலும் நான் சென்று மாட்டிக்க மாட்டேன். இப்போது நான் நினைப்பது ஒன்றே ஒன்றுதான், அம்மா என்னுடைய அண்ணன் அவர்கள் இருவரும் தான் என்னுடைய குழந்தைகள். அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால், அதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது. இப்பொழுது, என்னுடைய எண்ணம் முழுக்க இவர்கள் இரண்டு பேர் மீது தான் இருக்கிறது என நடிகை அன்ஷிதா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

அர்னவ்: நடிகை அன்ஷிதா 'செல்லம்மா' சீரியலின் ஹீரோவான அர்னவுடன் சேர்ந்து நடித்த போது இருவரும் காதலித்ததாக சொல்லப்பட்டது. இதனால், அர்னவ் தனது மனைவி திவ்யாவைப் பிரிவதற்கு அன்ஷிதா தான் காரணம் என்று செய்திகள் பரவின. ஆனால், அர்னவ்-திவ்யா பிரிவுக்கும் நான் காரணம் இல்லை என்றார். அதே போல, அர்னவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அன்ஷிதா கலந்து கொண்டது சர்ச்சையாக பேசப்பட்டது. பிக் பாஸில் இருந்து அர்னவ் வெளியேறிய பின், மற்றொரு போட்டியாளரான வி.ஜே விஷாலுடன் நெருங்கி பழகினார். இருவரும் காதலிப்பதாக செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X