எல்லாத்தையும் விட்டுட்டு போறேன்.. அரோரா சொன்ன அந்த வார்த்தை.. ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை: இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோ, இரட்டை அர்த்தங்களை பேசி பிரபலமானவர் தான் அரோரா சின்கிளேர். பலூன் அக்கா என்ற அடைமொழியுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அரோராவிற்கு இன்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் அவரின் நல்ல குணம் தான். தற்போது அரோரா, தனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் ஒரு விஷயத்தை பேட்டியில் கூறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சிகளில் 21 போட்டியாளர்களில் ஒருவராக வந்தவர் தான் அரோரா சின்கிளேர். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நாளில் இருந்தே சரியாக விளையாடவில்லை என்றும் துஷாருடன் நெருங்கி பழகியதால் இதற்காகத்தான் இவர் பிக் பாஸுக்குள் வந்தாரா? என இவர் மீது பல விமர்சனங்கள் எழுதன. அரோரா, பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க தகுதியே இல்லை என பலரும் இணையத்தில் அவரை திட்டி தீர்த்தனர்.

அரோரா சின்கிளேர்: ஆனால், நாட்கள் செல்ல செல்ல விளையாட்டில் கவனம் செலுத்த தொடங்கிய அரோரா, வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அவற்றுக்கு நேர்மையான முறையில் பதில் அளித்தார். கம்ருதீனுடன் சண்டை ஏற்பட்ட போதும், அவரை பற்றி தவறாக ஒரு வார்த்தை கூட பேசாமல் நட்புக்கு மரியாதை கொடுத்தார். இந்த பண்பை அவரை ஃபைனல் வரை கொண்டு சென்றது. பலரும் அரோரா டைட்டிலைட் வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் நான்காவது இடத்தை அரோரா பிடித்தார்.

Bigg Boss Arora interview
Photo Credit:

மன்னித்துவிடுங்கள்: இந்நிலையில், அரோரா அளித்திருக்கும் பேட்டியில், சினிமா, மாடலிங் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு படிக்கப் போவதாக கூறியுள்ளார். எல்லாத்தையும் விட்டு விட்டு போவது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், படிக்க வேண்டும் என்பது தான் எனது நீண்ட நாள், அந்த கனவை அடையும் நேரம் வந்துவிட்டது என கூறியுள்ளார். மேலும், கண்டேன்டுக்காக சொல்கிறேன் என நினைப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போலந்து போர்ஷா பல்கலைக்கழகத்தில் நர்சிங் சேர உள்ளேன். இன்னும் பிக் பாஸ் சம்பளம் வரவில்லை, சம்பளம் வந்ததும் என் கனவு பயணத்தை தொடர உள்ளேன். நிஜமாகவே நான் படிக்கப் போகிறேன் என அரோரா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் வந்ததற்கு காரணமே படிக்க வேண்டும் என்பது தான் என அரோரா பலமுறை கூறி இருக்கிறார். அதேபோல பைனலின் போதும் விஜய் சேதுபதியிடம் படிக்க போவதாக அரோரா கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X