கவர்ச்சியா எடிட் செய்த போட்டோ.. எப்படித்தான் டிரஸ் போடுவது.. பிக் பாஸ் திவ்யா கணேஷ்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில், திவ்யா கணேஷ் டைட்டிலை தட்டிதூக்கி, 50 லட்சம் ரூபாயைம் ,சொகுசு காரையும் வென்றார். இரண்டாம் இடத்தை சபரியும், விக்ரம் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். டைட்டிலை வென்ற திவ்யா கணேஷ் GalattaTamil யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், வினோத் பணப்பெட்டியை எடுக்கவில்லை என்றால், அவர் தான் டைட்டிலை வென்று இருப்பார் என்ற கேள்விக்கு பதில் அளித்த திவ்யா, அது உண்மை தான் என்பது உள்ளே இருக்கும் போது தெரியவில்லை. ஆனால், வெளியில் வந்த பிறகு தான் தெரிந்தது. உண்மையில் அவர் அவசரப்பட்டு விட்டார். அவருக்கு அப்படி ஒரு தேவை இருந்ததால் தான் பணத்தை எடுத்தார். இருந்தாலும் அவசரப்பட்டு விட்டோம் என்று வினோத்தே நினைத்து இருப்பார் என்றார்.

திவ்யா கணேஷ்: தொடர்ந்து பார்வதி, கம்ருதீனுக்கு ரெட் கார்ட் கொடுத்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திவ்யா, பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் காருக்குள் சண்டை தொடங்க ஆரம்பித்தபோதே நான் தலையிட்டு இருக்க வேண்டும். ஆனால், பிரச்சனை பெரிதாகி வாக்குவாதம் முற்றி, சாண்ட்ராவை வெளியில் தள்ளிவிட்ட போது தான் நான் ஆக்ரோஷமாக கத்தினேன். அதன் பிறகும், பார்வதி தன்னுடைய தவறை உணர்ந்தது போல தெரியவில்லை. விஜய்சேதுபதி, அவர்கள் வரும் வரை இருவருமே டான்ஸ் ஆடிக்கொண்டு இயல்பாகத்தான் இருந்தார்கள். விஜய் சேதுபதி, அந்த விஷயத்தைப் பற்றி பேசி இருவரையும் கண்டித்த போது தான் சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் இப்படி செய்து இருக்கக்கூடாது என சொல்லி மன்னிப்பு கேட்டதை, என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களுடைய மன்னிப்பை உணர்ந்து கேட்டது போல எனக்கு தெரியவில்லை.
எப்படித்தான் டிரஸ் போடுவது: பல கேள்விகளுக்கு பதில் அளித்த திவ்யா, பொங்கலுக்கு தாவணி போட்டு இருந்தேன் அதை பலவிதமாக எடிட் செய்து போட்டு இருந்தார். எந்த டிரஸ் போட்டாலும் இப்படித்தான் செய்கிறார்கள். எப்படித்தான் டிரஸ் போடுவது என்று தெரியவில்லை எதற்கு இப்படி செய்கிறார்கள் ரொம்ப கவர்ச்சியாக இருந்தது, இருந்தாலும் என்ன செய்வது என திவ்யா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











