இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.. அமீரின் கில்டி பீல்.. வேதனையா இருக்கு.. பாவனி பேட்டி!

சென்னை: காதலித்து திருமணம் செய்து கொண்ட பாவனி மற்றும் அமீரின் காதலர் தின ஸ்பெஷல் போட்டோ இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்தது. காதலர் தினத்திற்கு இருவரும் ஒன்றாக யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தனர். இதில், பாவனி திருமணத்திற்கு பிறகும் இருவரும் பிரிந்து தான் வாழ்கிறோம். அது மிகவும் வேதனை தருவதாக கூறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகப் கலந்து கொண்ட பாவனியிடம், வைல்டுகார்ட் மூலம் போட்டியில் நுழைந்த அமீர், தனது காதலை வெளிப்படுத்தினார். நிகழ்ச்சியின் டிஆர்பிக்காக இவ்வாறு செய்யப்படுகிறது என பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், நிகழ்ச்சிக்கு பின்னரும் பாவனி மீது அதே அளவு அமீர் காதல் கொண்டிருந்தார். இதனால் திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் இருவரின் காதலுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைத்தது. இருவரும் இணைந்து நடிகர் அஜித் குமாரின் துணிவு படத்தில் நடித்திருந்தனர். அப்படத்தில் இருவரின் பாத்திரங்களும் வெகுவாக பாராட்டப்பட்டது.

pavani reddy amir interview
Photo Credit:

பாவனி, அமீர்: கடந்தாண்டு இவர்களுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது, இந்த திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பிக் பாஸ் பிரபலங்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் youtube சேனலுக்கு பேட்டி அளித்தனர். அதில், தங்களது வாழ்க்கை குறித்து பல விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். அப்போது பாவனி, அமீருக்கு யாருக்குமே தெரியாத ஒரு திறமை இருக்கிறது. அந்த பெருமையை நோக்கி தான் தற்போது அவரின் பயணம் சென்று கொண்டிருக்கிறது. அது என்ன என்றால் அவர் நன்றாக கதை எழுதுவார், அதற்காக நாங்கள் இருவரும் தற்போது பிரிந்து வாழ்த்து வருகிறோம். நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன், அவர் நண்பர்களுடன் இருக்கிறார். எனக்கு சென்னைக்கு வரும் வேலை இருந்தால் ஹோட்டலில் தங்குகிறேன் அங்கு வந்து என்னை சந்திப்பார்.

பிரிந்து வாழ்ந்து வருகிறோம்: இது எனக்கு வருத்தமாக இருந்தாலும் அவருடைய, ஆசைக்கும் கனவுக்கும் நான் மதிப்பளிக்கிறேன். நான் சென்னையில் இருந்தால், அமீர் என்னுடன் தான் எப்போதும் இருப்பார். இதனால் அவரது இலக்கை நோக்கி அவரால் ஓட முடியாது. இதற்காக இருவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். இதில், எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அமீர் மிகவும் 'கில்டியாக பீல்' செய்கிறார். இதனால் அவரின் விருப்பப்படி நாங்கள் இருவரும் திருமணமாகியும் தனித்தனியாக பிரிந்து தான் வாழ்ந்து வருகிறோம் என்றார் பாவனி.

அது தான் என் ஆசை: இதையடுத்து பேசிய அமீர், நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதால் என்னுடைய கவனம் முழுவதும் பாவனியை பற்றியே இருக்கிறது. பாவனி தனியாக இருப்பாள், என்ன செய்கிறாள் என்று தான் தோன்றுகிறது. இதனால். என்னுடைய இலக்கை நோக்கி ஓடமுடியவில்லை. விஜய் டிவி டான்ஸ் நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியாது என்றார்கள். ஆனால் அதில் கலந்து கொண்டு ஜெயித்தேன். அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டேன். எங்கோ ஊட்டியில் இருந்த தான் இந்த 10 ஆண்டுகளில் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன். இதனால், என்னுடைய கனவு இயக்குநராக வேண்டும், படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது தான். இதனால், இருவரும் சேர்ந்து இப்படி ஒரு முடிவை எடுத்தோம். நான் திருமணத்திற்கு முன்பு எப்படி நண்பர்களுடன் ஒரு பேச்சிலர் வாழ்க்கையை வாழ்ந்தேனோ அதேபோலத்தான் இப்பவும் ஒரு பேச்சிலராக இருக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X