twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அது பத்தி இப்போ சொல்ல முடியாது.. தளபதி தான் ஃபேவரைட்.. சீக்கிரமே சினிமாவில்.. ஷிவானி எக்ஸ்க்ளூசிவ்!

    |

    சென்னை: பிக் பாஸ் முடிந்த கையோடு ரம்யா பாண்டியன், சம்யுக்தா எல்லாம் சினிமாவில் கமீட் ஆன நிலையில், நம்ம ஷிவு எப்போ சினிமாவில் நடிப்பாங்க என ஏங்கிய ரசிகர்களுக்கு இந்த பேட்டியின் மூலம் விடை கொடுத்துள்ளார் ஷிவானி நாராயணன்.

    சாத்தூரை சேர்ந்த ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் தினமும் போட்டோக்கள் போட்டு 2.7 மில்லியன் ரசிகர்களை சேர்த்துள்ளார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஷிவானிக்கு மேலும் ஏகப்பட்ட தமிழ் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

    ஷிவானி பேட்டி

    ஷிவானி பேட்டி

    பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. தமிழ்நாடு பாட்மிண்டன் சூப்பர் லீக் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

    பிடித்த விளையாட்டு

    பிடித்த விளையாட்டு

    ஷிவானி நாராயணன் தனக்கு பிடித்த விளையாட்டு என்றால் அது பாட்மிண்டன் தான் எனக் கூறியுள்ளார். மேலும், சின்ன வயசில் கபடி எல்லாம் ஆடி உள்ளதாகவும், இன் டோர் கேம் ஆன செஸ், கேரம் போன்ற விளையாட்டுகளில் அதிக நாட்டமில்லை என்றும் களத்தில் இறங்கி விளையாடுவது தான் தன் ஸ்டைல் என்று கெத்து காட்டி உள்ளார்.

    தளபதி தான் ஃபேவரைட்

    தளபதி தான் ஃபேவரைட்

    தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்கிற கேள்விக்கு டக்கென தளபதி தான் என சிரித்துக் கொண்டே பதில் அளித்த ஷிவானி நாராயணனுக்கு விஜய் ரசிகர்களின் ஆதரவு இனி எப்பவுமே கிடைக்கும் என்பது உறுதி ஆகிவிட்டது. பேருக்கு மட்டும் சொல்லாமல், பேசும் போதும், தத்துவம் சொல்லும் போது தளபதியின் வசனங்களையே கூறி அசத்துகிறார்.

    அது கொஞ்சம் சீக்ரெட்

    அது கொஞ்சம் சீக்ரெட்

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கிய ரைசா வில்சன், யாஷிகா ஆனந்த், லாஸ்லியா, ரம்யா பாண்டியன் என எல்லாருமே சினிமாவில் கலக்கி வருகின்றனர். ஷிவானி நாராயணன் சினிமாவுக்கு எப்போ வர போறீங்க என்கிற கேள்விக்கு ஒரு படம் நடிக்கப் போகிறேன். அது கொஞ்சம் சீக்ரெட் இப்போதைக்கு அதைப் பத்தி டீட்டெய்லா சொல்ல முடியாது என தனது புதிய படத்தின் ரகசியத்தை பத்திரமாக காத்து வருகிறார். விரைவிலே தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கிறார்.

    ஸ்போர்ட்ஸ் படம்

    ஷிவானி நாராயணனுக்கு பிடித்த ஸ்போர்ட்ஸ் படம் என்றால் வெண்ணிலா கபடி குழு, இறுதிசுற்று மற்றும் தளபதி விஜய்யின் பிகில் தான் என சட்டென சொல்லி விட்டார். மேலும், சோஷியல் மீடியாவை அதிகமாக பார்ப்பது இல்லை என்றும், பார்த்தவரை ரசிகர்களின் அன்பு தான் தெரிகிறது. அதற்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை. அனைவருக்கும் ரொம்ப நன்றி எனக் கூறியுள்ள பேட்டியை ஷிவானி ரசிகர்கள் மிஸ் பண்ணாம பாருங்க!

    English summary
    Bigg Boss Tamil 4 contestant Shivani Narayanan exclusive Interview out in One India Tamil Filmibeat youtube channel. She reveals about her cinema entry in this short interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X