அது ஒரு கேம் ஷோங்க.. ரியாலிட்டி எல்லாம் கிடையாது.. பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நமிதா பேட்டி!
சென்னை: பாஜகவில் இணைந்துள்ள நடிகை நமிதாவின் பிரத்யேக பேட்டி 3 தனி பார்ட்களாக வெளியாகி உள்ளன.
எங்கள் அண்ண படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நமிதா, ஏய் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து கலக்கினார். தளபதி விஜய்யின் அழகிய தமிழ்மகன் மற்றும் தல அஜித் உடன் பில்லா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை நமிதா, இப்போ அரசியலிலும் அசத்த களமிறங்கி உள்ளார். அவரது Close Call பேட்டிகள் வெளியாகி உள்ளன.

அரசியலில் குதிக்க என்ன காரணம் என்பது குறித்து தனது பேட்டியில் விரிவாக பேசி உள்ளார் நமிதா. பாஜாகவில் இணைவது குறித்து பேசியுள்ள அவர், தமிழ் நாட்டில் இந்தி திணிப்பை தான் ஒரு போதும் ஏற்க மாட்டேன் என்றும் ஆனால், இந்தி கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்புக்கு உதவும் என்றும் பேசி உள்ளார்.
பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சுத்தமாக இருப்பது பற்றி கூறி வைரலான நமிதா, அது வெறும் கேம் ஷோ தான் என்றும், அதில் ரியாலிட்டி ஏதும் இல்லை என தற்போது போட்டு உடைத்துள்ளார்.
மேலும், கோயில்களில் யானைகளை வைத்து வித்தைக் காட்டுவது தன்னை பொறுத்தவரையில் தவறான செயல் என்றும், அவற்றை சுதந்திரமாக காடுகளில் விட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், பெண்களுக்கான பாதுகாப்பு எப்போதும் முக்கியம், அவர்களது ஹேண்ட் பேகில் கத்தி ஒன்று எப்போதும் இருக்க வேண்டும் என்கிற படு துணிச்சலான கருத்துக்களை பேசி உள்ளார்.
அரசியலில் தான் இறங்க காரணமே விவசாயிகளுக்கு தரகர் இல்லாமல் நியாயமான விலை கிடைக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வேலை வாய்ப்பை இளைஞர்கள் மத்தியில் பெருக்க வேண்டும் என்றும் கூறியுள்ள பேட்டிகளை மேலே உள்ள லிங்குகளை கிளிக் பண்ணி பார்த்து ரசிக்கவும்.


Click it and Unblock the Notifications











