என் குழந்தையை இழந்துவிட்டேன்.. டிவிகேவை எதிர்த்ததற்கா இந்த தண்டனை கண்கலங்கி பேசிய ஜூலி!
சென்னை: காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜூலி,
என்னை கிட்னி திருடி என்று கூறி அவதூறு பரப்புகிறார்கள். கிட்னி தருவதாக கூறி ரூ.15 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக இணையத்தில் சிலர் அவதூறு பதிவுகளை வெளியிடுகிறார்கள். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் என் குழந்தையை இழந்தேன் என கண்ணீர் மல்க பேசி உள்ளார்.
அந்த பேட்டியில், கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி கமிஷனர் அலுவலகத்தில் எட்டு பேர் மீது நான் புகார் அளித்திருந்தேன். எனக்கு மூன்று கணவர்கள் என்றும், நான் கிட்னி திருடி என்றும் அவதூறாக பேசியவர்கள் மீது புகார் கொடுத்து இருந்தார். அந்த புகார் மனுவுற்கு இந்த மாதம் 18ஆம் தேதி காவல் நிலையத்திலிருந்து பதில் அனுப்பியிருந்தார்கள். இது கிரிமினல் வழக்காக பதிவு செய்யப்படாது, சிவில் வழக்காக மட்டுமே பதிவு செய்யப்படும் என்று என் புகாரை அவர்கள் வாங்கவில்லை என்றார்.
ஜூலி பேட்டி: என் கணவரையும் எந்த அளவுக்கு தரக்குறைவாக பேச முடியுமோ அந்த அளவுக்கு விமர்சனம் செய்திருக்கிறார்கள். என்னை எவ்வளவு மோசமாக பேசமுடியுமே அவ்வளவு மோசமாக பேசினார்கள். இதனால், கடந்த மார்ச் மாதம் இதே கமிஷனர் அலுவலகத்திற்கு நான் புகார் கொடுக்க வந்தபோதுதான் என் குழந்தையை இழந்தேன். எனக்கு திருமணமே இப்போதுதான் நடந்தது. என் முதல் குழந்தையை நான் இழந்துவிட்டேன். இது மற்றவர்களுக்கு வேண்டுமானால் கேலி பொருளாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி கிடையாது. இதை வைத்து சிம்பதி தேடலாம். ஆனால், நான் எந்த இடத்திலும் இதைப் பற்றி பேசியதே இல்லை.

குழந்தையை இழந்தேன்: ஒரு பெண் டிவிகே-க்கு எதிராக பேசினேன் என்ற ஒரே காரணத்திற்காக, அந்த பெண்ணின் கேரக்டரை தவறாக சித்தரித்து, பெயரை கெடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? நான் எந்த தவறும் செய்யவில்லை. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. யாராவது என்னை நம்பி ஏமாந்திருந்தால் தயவு செய்து என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள். என் மீது நீங்கள் வழக்குபோட்டால், நிச்சயமாக விசாரிப்பார்கள். நானும் என் கணவரும் குற்றமற்றவர்கள் என்பதை சட்டப்படி நிரூபிப்போம். இன்ஸ்டாகிராமில் டிவிகே மீதும், விஜய் மீதும், தாக்குதல் நடத்துபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, இந்த நாட்டு மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் உடனடியாக ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும் என ஜூலி அந்த பேட்டியில் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications