Kamrudin: சிங்கம் போல Wife எனக்கு.. பார்வதி குறித்து மனம் திறந்த கமருதீன்

சென்னை: விஜய் சேதுபதி பிக்பாஸை தொகுத்து வழங்க தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் முதல் ஆண்டு அவருக்கு கொஞ்சம் நிம்மதியாக சென்றுவிட்டது. ஆனால் இரண்டாவது ஆண்டு விஜய் சேதுபதிக்கு மட்டும் இல்லாமல், மொத்த பிக்பாஸ் குழுவினருக்கே சவாலான ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டு பார்வதி மற்றும் கமருதீன் என இரண்டு போட்டியாளர்களுக்கு ரெட் கார்டு வழங்கி வெளியே அனுப்பினர். இதில் பலரும் கமருதீனை நினைத்து அனுதாபப்பட்டனர்.

கமருதீன் ரெட் கார்டு வாங்க காரணமே, பார்வதி உடனான அவரது பழக்கம் தான் என்று தெரிவித்தனர். இப்படி இருக்கையில் ரெட் கார்டு வாங்கிய பின்னரும், கமருதீன் மற்றும் பார்வதி என இருவரும் பிக்பாஸ் ஃபைனல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். இப்படி இருக்கையில் கமருதீன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பார்வதி உடனான காதல் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

Bigg Boss Kamrudin Opens About VJ Parvathy at Fans Meet

கமருதீன் - பார்வதி: அதாவது அந்த நிகழ்ச்சியில், ரசிகர்கள் அவரது மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, நான் மிகவும் ஜாலியான ஒருவன். எனக்கு எப்போதும் அன்பைப் பொழிந்து கொண்டு இருக்கும் படியான, எதற்கு எடுத்தாலும் என்னங்க என்னங்க என்றும் மாமா மாமா என்றும் அழைத்துக் கொண்டு இருக்கும்படியான அமைதியான மனைவி அமைய வேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தைரியமான சிங்கம் போன்ற பெண் மனைவியாக கிடைக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: கமருதீன் இவ்வாறு தெரிவித்துள்ளது, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், பார்வதியைத் தான் இவ்வாறு குறிப்பிடுகிறார் என்று பதிவிட்டு வருகிறார்கள். பார்வதி கமருதீன் ஏதோ பிக்பாஸ் விளையாட்டுக்காக காதலிப்பது போல நடிக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே காதலிக்கிறார்கள். அதனால் தான், இருவரும் ரெட் கார்டு வாங்கிய பின்னரும் கூட, ஃபைனல் கொண்டாட்டத்தில் ஒன்றாக அமர்ந்திருந்தனர் என்று அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிலர், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வாழ்த்துகள் என்றும், கமருதீன் மிகவும் நேர்மையானவராக இருக்கிறார் என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Bigg Boss Kamrudin Opens About VJ Parvathy at Fans Meet

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X