காதலிக்கும் போது ‘கிஸ்‘ பண்ணியிருக்கேன்… மனம் திறந்த லாஸ்லியா !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா, காதலிக்கும் போது கிஸ் பண்ணியிருப்பதாக ஓப்பனாக கூறியுள்ளார்.
பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ப்ரண்ட்ஷிப் படத்தை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கேஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை அவரது உதவி இயக்குனர் சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கியுள்ளனர். இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

sugar baby
அஸ்வின் மற்றும் லாஸ்லியா இருவரும் சேர்ந்து sugar baby என்ற பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார்கள். காதலர் தினத்தை முன்னிட்டு இந்த பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இந்த ஆல்பம் பாடல் இன்று வெளியாகி உள்ளது. இது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள லாஸ்லியா மனம் திறந்து பல சுவாரசியான தகவலை கூறியுள்ளார்.

sugar baby பாடல்
sugar baby என்ற ஆல்பம் பாடலுக்காக சாண்டி மாஸ்டர் தான் என்னிடம் கேட்டார். அஸ்வினுடன் நான் ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்து இருக்கிறேன் இதனால் இந்த ஆல்பத்திற்கு ஒகே சொல்விட்டேன், அந்த பாடல் எனக்கு பிடித்திருக்கிறது. நீங்களும் கேட்டுவிட்டு பாடல் பார்த்து எஞ்சாய் பண்ணுங்க என்று கூறினார்.

தர்ஷன் சர்ப்ரைஸ் விஷ்
லாஸ்லியாவிடம் பிறந்த நாளுக்கு தர்ஷன் சர்ப்ரைஸ் விஷ் பண்ணது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லாஸ்லியா, கூகுள் குட்டப்பா படத்திற்கு பிறகு நானும் தர்ஷனும் க்ளோஸ் பிரண்டாகி விட்டோம், என் அப்பா இறந்ததற்கு பிறகு நான் என் பிறந்த நாளை கொண்டாடியது இல்லை. ஆனால், என் பிறந்த நாள் அன்று தர்ஷன் சர்ப்ரைசாக வந்து பிறந்த நாள் வாழ்த்து சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

முதல் முத்தம்
பள்ளிப்பருவ காதல் குறித்து பேசிய லாஸ்லியா, என்னுடைய முதல் காதல் ஸ்கூல் படிக்கும் போது வந்தது, அதுவும் ஒன் சைட் காதல். அந்த பையனுக்கு இப்போது திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். அதன் பிறகு, நான் ஒரு பையனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் அப்போது நான் முதல் முத்த அனுபவம் கிடைத்தது என்று மனம் திறந்து பல சுவாரசியமான விஷயங்களை லாஸ்லியா பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications











