பிக் பாஸ் வீட்டில் சிரித்த முகத்தோடு இருக்கும் சாண்ட்ரா.. பட்ட வேதனை தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் சீசன் 9ல் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிரஜன் மற்றும் சாண்ட்ரா இருவரும் கடந்த வாரம் வந்தனர். தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இந்த முறை முதன்முதலாக கணவன் மனைவி ஜோடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். கடந்த வாரம் பிக் பாஸ் கொடுத்த சீக்ரெட் டாஸ்கில் சாண்ட்ரா சிறப்பாக விளையாடி இருந்தார். இருந்தாலும் அவர் தான் இந்த வாரத்தின் மோசமான போட்டியாளர் என அனைவரும் சொல்ல தற்போது பிக் பாஸ் வீட்டில் சிறையில் இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் சிரித்த முகத்தோடு அனைவரிடமும் பழகி வரும், சாண்ட்ரா வாழ்க்கையில் பல வலிகள் வேதனைகளை கடத்து வந்துள்ளார். அதுபற்றி அவரே அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் சாண்ட்ரா கதறி அழுது பேசி இருக்கிறார். என் பெற்றோர் கருத்து வேறுபாடுகாரணமாக பிரிந்துவிட்டனர். அம்மா வீட்டை விட்டு சென்ற போது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அந்த நேரத்தில் நானும், என் சகோதரனும், என் தந்தையுடன் இருந்தோம். என் தந்தையும் சில ஆண்டுகளிலேயே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

Bigg Boss Vijay tv interview 9
Photo Credit:

சாண்ட்ரா கண்ணீர்: அப்பா இரண்டாவது திருமணம் செய்தும் நாங்கள் இருவரும் வாழ்வில் படாத கஷ்டங்கமளை பட்டோம். சித்தியால் எங்களுக்கு நிறைய பிரச்னைகள் வந்தன. அந்த நேரத்தில் என்னுடன் இருந்தது என் அண்ணன் தான், அப்போது அவர் என்னிடம் இவங்க கண் முன்னாடி நாம வாழ்த்து காட்ட வேண்டும் என்று சொன்னார். அவர் இருக்கும் தைரியத்தில் தான் நான் இருந்தேன். ஆனால், அண்ணன், 2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தில் இறந்தார்.

மறையாத சோகம்: அண்ணன் இறந்த பிறகு தன் அண்ணனின் காதலி தற்கொலை செய்து கொண்டார். எனக்கு அவர்கள் காதலிப்பதே தெரியாது. அண்ணன் இறந்த மறுநாள் காலை அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்மா, அப்பா, நான் அனைவருமே இருக்கிறோம், யாரும் அண்ணன் இறந்ததும் சாவதற்கு துணியவில்லை. ஆனால், அண்ணன் இறந்ததும் தெரிந்ததும் அவனும் அவன் கூடவே போய்ட்டாங்க, இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவங்க பெயரைத்தான் என் பாப்பாவிற்கு வைத்து இருக்கிறேன். அவங்க பெயர் ஆஷா பாத்திமா, அண்ணா அவங்களை 'பாத்து'னு கூப்பிடுவார், நான் என் மகளை 'பாத்து' என்றுத்தான் கூப்பிடுவேன். என்னுடன் என் அண்ணன் இல்லாதது இன்னும் கடினமாக உள்ளது என்று சாண்ட்ரா அந்த பேட்டியில் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பேசி இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X