Aurora: வெளிநாட்டிற்கு படிக்கப் போறேன்.. சினிமா, மாடலிங் எதுவும் வேண்டாம்.. அரோரா பளிச்
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர், டிக்கெட் டூ பினாலே வென்றவர், டாப் 4 போட்டியாளர்களில் ஒருவர். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போதே தனக்கு வரும் இந்த பணத்தை வைத்து தான் படிக்கப் போவதாக தெரிவித்தார். இப்படி இருக்கையில் அண்மையில் அளித்த பேட்டியில், தான் போலந்து நாட்டிற்கு படிக்க போவதாகவும், அதற்காக தான் விண்ணப்பித்துள்ளதாகவும், பிக்பாஸ் சம்பளம் வந்ததும் தான் போலந்துக்கு பறந்து விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர் அரோரா. அதன் பின்னர் மாடலிங், ஆல்பம் பாடல்கள் உள்ளிட்டவற்றிலும் நடித்துக் கொண்டிருந்தார். இவரது சமூக வலைதளப் பதிவுகளுக்கு இணையவாசிகள் ரியாக்ஷன் செய்ததற்கு இவர் தொடர்ந்து ரியாக்ட் செய்து வந்தார். இதனால் அவருக்கு பட்டப்பெயர்கள் எல்லாம் சூட்டினர்.

அரோரா: இப்படி இருக்கையில் இவருக்கு பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் போட்டியாளராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் போட்டியாளராக களமிறங்கியதும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. அதற்கு ஏற்றது போல சுமார் 40 முதல் 50 நாட்களில் அரோரா பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன செய்தார் என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால் அதன் பின்னர், பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர்களில் ஒருவராக மாறினார். அவரது இந்த ஆட்டமானது, மிகவும் தெளிவாகவும் பிரமிப்பூட்டும் வகையிலும் இருந்தது.
வெளிநாட்டில் படிப்பு: இப்படி இருக்கையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் போலந்து நாட்டிற்கு படிக்க போவதாகவும், அங்கு உள்ள போர்ஷா பல்கலைக்கழகத்தில் நர்சிங் படிக்க தான் விண்ணப்பித்துள்ளதாகவும், பிக்பாஸ் சம்பளம் வந்ததும் தான் போலந்துக்கு பறந்து விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் சொன்னது பலரும் நான் கண்டெண்ட்டுக்காக சொல்கிறேன் என்று நினைத்தார்கள். ஆனால் நான் உண்மையில் படிக்கப் போகிறேன். மாடலிங், ஆல்பம் பாடல்கள், சினிமா என அனைத்தையும் நான் விட்டுவிட்டுத்தான் போகிறேன் என்று தெரிவித்துள்ளார். அரோரா இவ்வாறு கூறியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. மேலும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











