சாதி மிதப்புல இருந்த திவாகரை பிக்பாஸ் வீட்டுக்குள் அடிக்க முடியல.. ஓபனாக பேசிய பிரவீன்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ரசிகர்கள் தொடங்கி, விஜய் சேதுபதி, பிக்பாஸ் குழுவினர் என அனைவருக்கும் பெரும் அதிருப்தியை தான் கொடுத்து வருகிறது. இப்படி இருக்கும்போது, பிக்பாஸ் வீட்டில் இருந்து 5வது வார இறுதியில் எலிமினேட் செய்யப்பட்டவர் என்றால், அது பிரவீன் ராஜ். அவரது எலிமினேஷன் பிக் பாஸ் போட்டியாளர்கள் தொடங்கி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இப்படி இருக்கும்போது பிரவீன் ராஜ் தனது மனைவியுடன் அளித்த பேட்டியில் திவாகரை வீட்டிற்குள் அடிக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டு பேசுகிறார்.

அதாவது அவர் பேசுகையில், " திவாகர் மற்றும் பார்வதி என இவர்கள் இருவரும் என்டர்டைமென்ட் பின்னணியில் இருந்து வந்தவர்கள் கிடையாது. திவாகரின் நம்பிக்கைக்கு 100 மார்க் தரலாம். ஆனால் என்டர்டைமென்ட்க்கு பூஜ்ஜியம் மார்க் தான். அதேபோல், பார்வதியின் தொகுப்பாளினி திறமைக்கு 100 மார்க் கொடுத்து நான் தலைவணங்குகிறேன். ஆனால் இவர்கள் இருவரிடத்திலும் அதைக் கடந்து எந்த திறமையும் இல்லை.

Bigg Boss Tamil 9 Praveen Says He Miss To Attack Diwakar Inside The BB House
Photo Credit:

சாதி திமிர்: பல இடங்களில் திவாகர் பேசிய பேச்சுக்களுக்கு நான் அவரை அடித்திருப்பேன். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி என்பதால் அமைதியாக இருந்தேன். அவர் பேசும்போது சாதி மிதப்பில் பேசுவார். அவையெல்லாம் வார்த்தைகளாக வெளிப்படுத்துவார். அதாவது, நீ எல்லாம் ஒரு ஆளே கிடையாது. நீ எல்லாம் எனது காலுக்கு கீழ். நீயெல்லாம் என் செருப்புக்கு சமம் என்று அவர் கூறும் போது எல்லாம் எனக்கு கோபம் உச்சத்திற்கு வரும். இதுவே அவர் வெளியில் இருக்கும் போது இதுபோல பேசி இருந்தால், நான் கட்டாயம் அவரை அடித்திருக்க கூடும். திவாகர் வீட்டுக்குள் அந்த அளவுக்கு நடந்து கொண்டார்.

செம காம்போ: அதேபோல் திவாகர் - கானா வினோத் அண்ணன் காம்போ மிகவும் நன்றாக இருந்தது. அதைப் பார்ப்பதற்கு எங்களுக்கே மிகவும் பிடித்திருந்தது. அதை மிகவும் அழகாக எடுத்துச் சென்றவர் கானா வினோத். ஆனால் அதை சரியாக கையாளத் தெரியாமல் வார்த்தைகளை விட்டவர் திவாகர். கானா வினோத் அதுபோல பேசும்போது அது பிடிக்கவில்லை என்றால் அதை அவரிடத்தில் முறையாக சொல்லி இருக்கலாம். ஆனால் திவாகர் அப்படிச் செய்யாமல், கானா வினோத் அண்ணாவை மிகவும் மோசமாக எல்லாம் பேசினார்.

IndiaGlitz Tamil YT

கானா வினோத்: அதாவது, எச்சி சோத்துக்கே கானா என்று எல்லாம் பேசினார். அப்போது எல்லாம் எனக்கு உச்சகட்ட கோபம் வரும். கானா வினோத் அண்ணா, பாக்ஸர். அப்படி இருக்கும்போது, திவாகர் பேசிய சில பேச்சுகளால் அவருக்குமே கோபம் வந்தது. ஆனாலும் தனது கோபத்தை அடக்கி வைத்துக் கொண்டு இருந்ததை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X