வலியால் துடித்தேன்.. என் குடும்பமே என்ன நம்பல.. ஆம்பளையா இருந்தா ஓடி ஒளியாதே.. ஆவேசமாக பேசிய வனிதா!

சென்னை: மர்ம நபர்கள் தாக்கியது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் யூடியூபில் பேட்டி அளித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார். தனது மகளுக்கு ஆதரவாக வனிதா தொடர்ந்து சோஷியல் மீடியாவில் பேசி வருகிறார்.

Bigg Boss vanitha vijayakumar interview about her recent attack

நள்ளிரவில் தாக்குதல்: இந்நிலையில், வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் நள்ளிரவு ஒரு மணி அளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு காரை எடுக்க சென்ற போது, மர்ம நபர் ரெட் கார்டு கொடுக்குறீங்களா? என்று கேட்டு தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியதாகவும், அந்த மர்ம நபரின் சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் வனிதா கூறியிருந்தார்.

உண்மையில் தாக்கப்பட்டாரா: கண் வீங்கும் அளவிற்கு ஒருவர் தாக்கி இருக்கும் போது அதுகுறித்து வனிதா போலீசில் ஏன் புகார் கொடுக்கவில்லை என்றும், உண்மையில் மர்ம நபர் தான் தாக்கினாரா, இல்லை இதன் பின் வேறு எதாவது பிரச்சனை இருக்கிறதா என்று சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவியது.

பயத்தில் நடுங்கினேன்: இதையடுத்து, தாக்கப்பட்டது குறித்து யூடியூப் சேனலுக்கு நடிகை வனிதா பேட்டி அளித்துள்ளார். அதில், அன்று நான் என் அக்காவின் வீட்டில் பிக் பாஸ் லைவ் முடித்துவிட்டு, காரை எடுக்க வெளியில் வந்த போது, ரெட் கார்டு கெடுப்பியா, நீ சப்போர்ட்டா என கேட்டு ஓங்கி கண்ணில் குத்திவிட்டு ஓடிவிட்டார்கள். அந்த நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் நடுங்கிவிட்டேன்.

உண்மையான ஆம்பளையா இருந்தா: ஒரு நடிகைக்கு முகம் தான் முக்கியம், இருந்தாலும், நான் தாக்கப்பட்டது அனைவருக்கும் தெரியவேண்டும் என்று தான் அந்த போட்டோவை ஷேர் செய்தேன். அதே போல பலர் அது பொய் என்று சொன்னார்கள், பலர் என்ன என் குடும்பத்தினரும் கூட என்னை நம்பல. என்னை தாக்கிய மர்ம நபர் கேமராவில் வேண்டுமானால், சிக்காமல் இருக்கலாம். ஆனால், உண்மையான ஆம்பளையாக இருந்தா, ஓடிஒளியாமல், காவல் நிலையத்தில் சரண் அடைந்து தாக்கியதை ஒத்துக்கொள் நான் உன்னை மன்னித்துவிட்டு விடுகிறேன் என்று வனிதா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X