தக் லைஃப் படத்திற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு.. வாய் திறக்காமல் இருக்கும் ரஜினி.. பிஸ்மி ஆதங்கம்
சென்னை: தக் லைஃப் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கமல், கன்னட மொழி குறித்து பேசிய இருந்தார். இது சர்ச்சையான நிலையில், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரும் போராட்டமே நடைபெற்றது. ஆனால், கமல்ஹாசன், நான் தவறு செய்திருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன், இல்லையென்றால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறிவிட்டார். இதனால், கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரச்சனை பெரிதாகிக்கொண்டு இருக்கும் நிலையில், ரஜினி வாய் திறக்கவில்லை என பிஸ்மி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இயக்குநர் மணிரத்னம், கமலஹாசன் இருவரும் 37 ஆண்டுகளுக்கு பின், அதாவது நாயகன் படத்திற்கு பிறகு தக் லைஃப் திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஜூன் 5ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் ப்ரேரமோஷன் விறுவிறுப்பாக நடந்த வருகிறது. மே 25ந் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் மொழி வந்தது என்று பேசி இருந்தார். இது கர்நாடகாவில் பெரும் சர்சையான நிலையில், கர்நாடகாவில், தக் லைஃப் படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, தக் லைஃப் படத்தை திரையிடக்கூடாது என்றனர். மேலும், கமல்ஹாசன் பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் தடை செய்யப்படும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கெடு விதித்தது.

தக் லைஃப்: இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இது ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டத்தை நீதியை நம்புகிறவன். நான் தவறு இருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன் இல்லையெனில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால், கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. மேலும், கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசனின் உருவ பொம்மைகளையும், சுவரொட்டிகளையும் கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பினர் எரிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
ரஜினி ஏன் பேசவில்லை: இந்நிலையில், இதுகுறித்து பிஸ்மி ஆகாயம் தமிழ் யூடியூப் சேனவில் பேசி உள்ளார். அதில், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் கமல் பின்னால் நின்று இருந்தால், கர்நாடகா இப்படி ஒரு விஷயம் நடந்து இருக்குமா... அவர்கள் அடங்கி போய் இருப்பார்கள். கமலும்,ரஜினியும் 50 வருட நட்பு என சொல்லும் ரஜினி, கர்நாடகாவை சேர்ந்தவர் தானே,அவர் இந்த விஷயத்தில் தலையிட்டு, கமல் பேசியதில் தவறு இல்லை, அவர் வரலாற்று தகவல்களை சொல்லுகிறார். அதை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், மறுப்பாக இருந்தால் மறுப்பு தெரிவித்துக்கொள்ளுங்கள். அதற்காக படத்திற்கு தடை விதிப்பது சரியில்லை. நான் கர்நாடகாவில் இருந்து இங்கு வந்து இருக்கிறேன், என்னை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்னாகும் என ரஜினி பேசி இருக்க வேண்டும். ஆனால், அவர் என் வாய் திறக்கவில்லை என பிஸ்மி கேள்வி எழுப்பினார்.
ஆனால், கமல்ஹாசனுக்கு ஆதரவாக பேசிய சிவராஜ் குமார், "நான் கமல் சாரின் தீவிர ரசிகன். எனக்கு எனது தந்தையார் இருக்கும்போது, நான் ஏன் வேறு யாரையாவது போற்ற வேண்டும் என்று மக்கள் கேட்கலாம். என் தந்தை குடும்பத்தில் ஒருவர். அதே நேரத்தில் கமல் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. நான் அவரால் ஈர்க்கப்பட்டவன். தாம் பேசியது குறித்து கமல் சார் அறிவார். அவர் பொருத்தமான பதிலைக் கொடுப்பார்" என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











