தம்பின்னு கேட்டா ரூ.180 கோடிய தூக்கி தருவதா? ஐசரி கணேஷின் இந்த குணம் சினிமாவுக்கே பேராபத்து? பிஸ்மி!

சென்னை: தயாரிப்பாளர் ஐசரி கணேசை பொருத்தவரைக்கும் மிகவும் மென்மையான மனிதர், வள்ளல் குணம் கொண்டவர். பலருக்கு தன்னுடைய கல்லூரியில் இலவசமாக இடம் கொடுத்து இருக்கிறார் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அதே நேரம் சினிமா என்பது ஒரு தொழில், அடிப்படையில் அது ஒரு வணிகம். இந்த இடத்தில் எந்த விதமான சென்டிமென்டும் இருக்கக் கூடாது. ஆனால், ஐசரி கணேஷ் தனுஷுக்குக் கேட்ட உடனே அள்ளிக் கொடுத்ததும், அவராலேயே சினிமா துறைக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகிறது.

பத்திரிகையாளர் பிஸ்மி: இதுகுறித்து யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் பேசியுள்ள சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி, ஐசரி கணேஷ் உதவும் குணம் கொண்டவராக இருப்பது தான், சினிமா துறைக்கு மிகப்பெரிய மைனஸ். ஒரு ப்ராஜெக்ட் வருகிறது என்றால் நமக்கு லாபம் வருமா? சரியா தப்பா? என்று கணக்கிட்டுத்தான் அதை கையில் எடுக்க வேண்டும். ஆனால், ஐசரி கணேசை பொருத்தவரையில் இந்த படத்தினுடைய ஹீரோ நல்ல தம்பியாக இருக்கிறாரே, மென்மையாக பேசுகிறாரே, நமக்கு மரியாதை தருகிறரே என்று யோசிப்பது எமோஷனல் பாண்டிங். அப்படியெல்லாம் சினிமாவில் இருக்கக்கூடாது.

Ishari Ganesh Dhanush Bismi
Photo Credit:

ரூ.180 கோடி ஒப்பந்தம்: உதாரணத்திற்கு இந்த விஷயத்தை சொல்கிறேன். தனுஷ் மார்க்கெட்டில் ரூ.35 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக இருந்த காலகட்டத்தில் தான் ஐசரி கணேஷ் அவரை கமிட் செய்கிறார். ஒரு படத்திற்கு இல்லை தொடர்ந்து மூன்று படத்திற்கு ஒப்பந்தம் செய்கிறார். அப்படி இருக்கும் போது அவர், அந்த நேரத்தில் என்ன மார்க்கெட்டில் சம்பளம் வாங்குகிறாரோ, அதைத்தானே கொடுத்திருக்க வேண்டும்? ஆனால், தனுஷ் அப்போது நடித்துக் கொண்டிருந்த படத்தை முடித்துவிட்டு வர இரண்டு வருடம் ஆகும் என்றும், அந்த நேரத்தில் என்னுடைய சம்பளம் ரூ.60 கோடியாக இருக்கும், அந்த சம்பளத்தை கொடுத்தால் நடிப்பதாக சொல்லி இருக்கிறார். உடனே ஐசரி கணேஷும் அதற்கென்ன தம்பி, கொடுத்துவிட்டால் போச்சு என மூன்று படத்திற்கும் சேர்த்து ரூ.180 கோடியை தனுஷிடம் கொடுத்துள்ளார்.

சினிமாவிற்கே நஷ்டம்: இப்படி பிசினஸில் கணக்கு பார்க்காமல் எமோஷனலாக அள்ளிக் கொடுக்கும் போது, இந்த ப்ராஜெக்ட் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்காது. ஐசரி கணேஷின் இத்தகைய செயல்களால் சினிமா துறைக்கே பெரிய நஷ்டம் என்றும் பிஸ்மி அந்த பேட்டியில் பேசியுள்ளார். பிஸ்மியின் இந்த அதிரடி பேட்டியைப் பார்த்த சினிமா வட்டாரத்தினர், பிசினஸ் என்று வந்துவிட்டால் சென்டிமென்ட் பார்க்கக் கூடாது என்ற பிஸ்மியின் கருத்து உண்மைதான் என்றும் பல தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு பணத்தை அள்ளி கொடுத்து சம்பளத்தை ஏற்றிவிடுவதால் சிறிய தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X