ஜன நாயகன் லீக்.. விஜய் குற்றவாளியா? கூச்சமே இல்லாமல் நடந்த சதி.. பிஸ்மி ஆதங்கம்!

சென்னை: தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் லீக்காகி பெரும் புயலை கிளப்பி உள்ளது. அதை லீக் செய்தது யார் என தெரியாமல் அனைவரும் திண்டாடிக்கொண்டு இருக்கும் நிலையில், சிலர் இதை லீக் செய்ததே விஜய் தான் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்து வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி அளித்துள்ளார்.

அதில், ஜன நாயகன் படத்தில் லீக்கான வீடியோவை நான் பார்க்கவே இல்லை. எனக்கு என்று ஒரு 'எத்திக்ஸ்' இருக்கிறது. ஜன நாயகன் படத்தின் மீது எனக்கு பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால், அந்த திரைப்படத்தை தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என இருக்கிறேன். ஆனால், படம் பார்த்த பலரும் பிரிண்ட் சூப்பராக இருப்பதாகவும் தியேட்டரில் பார்ப்பது போல பிரண்ட் இருப்பதாகவும் கூறுகிறார்கள். படத்தில் 'எடிட்' என்கிற வாட்டர் மார்க் இருப்பதாக சொன்னார்கள். பெரும்பாலும் இது போன்ற திரைப்படங்கள் லீக் ஆவது தியேட்டரில் இருந்து தான் லீக் ஆகும். அதை வைத்து அது எந்த தியேட்டரில் இருந்து வெளியானது என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.

jana nayagan vijay Bismi
Photo Credit:

ஜன நாயகன் லீக்: ஆனால், ஜனநாயக படம் இன்னும் தியேட்டருக்கு வரவில்லை. சென்சார் சர்டிபிகேட் காகத்தான் அந்த படம் திரையிடப்பட்டது. அப்படி இருக்கும்போது, படம் எப்படி எங்கிருந்து கசிந்தது என்று தெரியவில்லை. எடிட் சூட்டில் இருந்து தான் கசிந்ததாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. ஜன நாயகன் திரைப்படத்தின் எடிட்டிங் மூன்று இடங்களில் நடைபெற்று இருக்கிறது ஒன்று தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில், மற்றொன்று விருகம்பாக்கத்தில் இருக்கும் எட்டி சூட்டில். அதன் பிறகு மற்றொரு இடத்தில் ஜன நாயகம் திரைப்படத்தின் எடிட்டிங் நடந்து இருக்கிறது.

கசிந்தது எங்கே: தற்போது கிடைத்து இருக்கும் முதல் கட்ட தகவலின் படி விருகம்பாக்கம் எடிட்சூட்டில் இருந்துதான் படத்தின் புட்டேஜ் கசிந்து இருப்பதாக தகவல்கள் வந்தன. அதே நேரம் அந்த எடிட் சூட்டில் அனைவரும் சென்று விட முடியாது. படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், எடிட்டர், எடிட்டரின் உதவி யாளர் என ஆறு பேருக்கு மட்டும் தான் அதற்குள் செல்ல முடியும். அதனால் அங்கிருந்து கசிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதை தயாரிப்பாளரும், இயக்குனரும் உறுதியாக நம்புகிறார்கள். ஆனால், க்ளாடில் இருந்து ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்கின்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

விஜய் தான் குற்றவாளியா: ஜன நாயகன் படத்தில் லீக் செய்ததற்கான காரணம் என்ன என்பது தான் இப்போது கேள்வியாக இருக்கிறது. அது ஜன நாயகன் திரைப்படத்தை மட்டும் அழிக்கும் நோக்கமா? அல்லது விஜயின் அரசியல் வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்பது நோக்கமா? என்பது தான் கேள்வியாக இருக்கிறது. ஆனால், சிலர் இந்த படத்தை லீக் செய்ததே விஜய் தான் என கூறி வருகிறார்கள். நன்றாக யோசித்துப் பார்த்தால் ஜன நாயகன் படத்தை விஜய் லீக் செய்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது. படம் தியேட்டருக்கு வரவேண்டும் பெரிய அளவில் வெற்றியடைய வேண்டும். நான் தான் கடைசி படத்திலும் வசூல் சக்கரவர்த்தி என்ற பேரோடு அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதான் விஜயின் நோக்கம். அப்படி இருக்கும்போது, அவர் எப்படி திருட்டுத்தனமாக இந்த திரைப்படத்தை வெளியிடுவார்?

அமைதி ஏன்: இதுகுறித்து கமல், ரஜினி உட்பட பெரிய ஜான்பவான்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட விஜய் இதுவரை வாய் திறக்காமல் இருக்கிறார். ஏற்கனவே ஜன நாயகன் படத்தை லீக் செய்ததே விஜய் தான் என பலவிதமான வதந்திகள் பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விஜய் எந்தவிதமான கருத்தையோ , அறிக்கையோ வெளியிடாமல் மௌனமாக இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதே புரியவில்லை என வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X