நீலிக்கண்ணீர் வடித்த ஆர்.ஜே.பாலாஜி.. சண்டை போட்டு முழு சம்பளத்தை வாங்கிவிட்டார்.. பிஸ்மி!

சென்னை: நடிகர் சூர்யா, த்ரிஷா நடித்த கருப்பு திரைப்படம் மே 15ந் தேதி தியேட்டரில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. ஆனால், 'கருப்பு' படம் தியேட்டருக்கு வர தாமதமான போது, கதறி அழுது இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி பேசி இருந்தார். ஆனால், அவரின் நிஜ முகம் இதுதான் என பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி பேசி உள்ளார்.

யூடியூப் சேனலுக்கு அவர் அளித்து இருக்கும் பேட்டியில், கருப்பு திரைப்படம் வெளியாக தாமதமான போது கண்ணீரை வடித்து அழுவதைப்போல சீன் எல்லாம் போட்டார் ஆர்.ஜே.பாலாஜி. ஆனால் தயாரிப்பாளருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் இல்லை. ஜன நாயகம் திரைப்படத்திற்கு எச்வினோத்திற்கு 12 கோடி ரூபாய் சம்பளம். அவருக்கு கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் சம்பளத்தை இன்னும் தயாரிப்பு நிறுவனம் தரவில்லை பாக்கி வைத்திருக்கிறது. ஆனால், மனரீதியாக அவர் பாக்கி பணத்தை கேட்க வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்.

Karuppu RJ Balaji salary
Photo Credit:

பிஸ்மி பேட்டி: இத்தனைக்கும் கேவிஎம் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஜனநாயகம் படத்தால் பெரிய லாபம் இருக்கிறது. இருந்தாலும் படம் இணையத்தில் லீக் ஆகிவிட்டது, படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது, இந்த நேரத்தில் தயாரிப்பாளரின் கழுத்தில் கை வைக்க வேண்டாம் என எச்.வினோத் நினைக்கிறார். ஆனால், ஆர்.ஜே.பாலாஜி தயாரிப்பாளர் கஷ்டப்படுகிறார் என தெரிந்தும் என்னுடைய 12 கோடியில் ஒரு பைசா கூட பாக்கி இல்லாமல் எடுத்து வை என சண்டை போட்டு சம்பளத்தைவாங்கி இருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு வேறு யாரும் இல்லை, சூர்யாவின் அம்மாவுடைய தங்கை மகன்தான். எஸ்.ஆர்.பிரபு, பாலாஜியால் இவ்வளவு கஷ்டப்படுத்துவது சூர்யாவின் காதுக்கு செல்லுமா செல்லாதா? அப்படி இருக்கும் போது எப்படி ஆர்.ஜே.பாலாஜியோடு சூர்யா மீண்டும் இணைவார்.

Karuppu RJ Balaji salary
Photo Credit:

டார்ச்சரான இயக்குநர்: கருப்பு படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு, ப்ரோமோஷனில் ஆர்ஜே.பாலாஜி மனதிற்குள் கசப்பை வைத்துக்கொண்டு கலந்து கொண்டார். ஆர்.ஜே.பாலாஜியோடு சூர்யா மட்டுமல்ல வேறு எந்த பெரிய ஹீரோவும் இணைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனென்றால் எப்போதுமே ஒரு பெரிய நடிகர்கள் ஒரு இயக்குனரின் படத்தில் இணையும்போது அவரைப் பற்றி விசாரிப்பார்கள் அந்த இயக்குனர் வெற்றிப்படம் கொடுத்தாரா? தோல்வி படம் கொடுத்தாரா? என்றெல்லாம் முக்கியமில்லை. ஆனால், இந்த இயக்குனரால் பெரிய டார்ச்சர் என்ற தகவல் வெளியே வரும்போது தயாரிப்பாளரும் யோசிப்பார்கள், ஹீரோக்களும் யோசிப்பார்கள் இந்த ஆபத்து ஆர்.ஜேபாலாஜிக்கு இருக்கிறது என பிஸ்மி அந்த பேட்டையில் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X