நன்றியை மறந்தாரா சிவகார்த்திகேயன்?.. எல்லாமே பக்கா பிளான்.. பிஸ்மி பகீர்!
சென்னை: பொங்கலை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படமும், சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதால் பெரிய போட்டி உருவாகியுள்ளது. தனக்கு
பெரிய அந்தஸ்தை கொடுத்த விஜய்க்கு எதிராக என்னை முன்னிறுத்தாதீர்கள் என்று சிவகார்த்திகேயன் ஏன் சொல்லவில்லை என வலைபேச்சு பிஸ்மி கேள்வி எழுப்பி உள்ளார்.
Tamilnadu Times யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அவர், சிவகார்த்திகேயன் திரைக்கு பின்னால் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார். இந்த உண்மை பல வருடத்திற்கு முன்பே எனக்கு தெரியும். ஆனால், மக்களுக்கு அது தெரியவில்லை. சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் மட்டும் நடிக்கவில்லை, பராசக்தி இசைவெளியீட்டு விழாவில் நன்றாக நடித்து இருக்கிறார். அண்ணன், தம்பி பொங்கல் என்று ஒரு மிகப்பெரிய பொய்யை சிவகார்த்திகேயன் இயல்பாக கூறி இருக்கிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், இவர் பூசணி தோட்டத்தையே சோற்றில் மறைக்கும் வேலையை பார்க்கிறார்.

சிவகார்த்திகேயனின் பேச்சு: பராசக்தி திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்தபோது இது குறித்து ஜெகதீஷ் மூலமாக விஜயிடம் கேட்டு அவர் அனுமதியின் பேரில் தான் ஜனவரி 10ந் தேதி படத்தை வெளியிட முடிவு செய்ததாக கூறியிருக்கிறார். இது உண்மையாக கூடஇருக்கலாம். ஆனால்,என்னுடைய கேள்வி என்னவென்றால், விஜய்யிடம் சென்று பராசக்தி படத்தை பொங்கலுக்கு வெளியிடலாமா என்று கேட்டால் அவர் வேண்டாம் என்று எப்படி சொல்வார். அவர் பெருந்தன்மையாக எந்த படம் வந்தாலும் பரவாயில்லை என்று தான் சொல்வார். சினிமா என்பது மிகப்பெரிய கடல், அதில் யார் வேண்டுமானாலும் மீன்பிடிக்கலாம். இப்படி ஒரு சர்ச்சை வரும் என்பதை தெரிந்து கொண்ட சிவகார்த்திகேயன், அந்த சர்ச்சை வந்தால், இப்படி சமாளித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு கன்டென்டை அவர் உருவாக்கி இருக்கிறார்.
நன்றியை மறந்தார்: முதலில் பராசக்தி படம் தான் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஜனநாயகன் அக்டோபரில் தான் வெளியாக இருந்தது. ஆனால், இப்போது பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்து இருக்கிறார்கள். பொதுவாக எந்த பெரிய நடிகர்களின் படங்கள் வந்தாலும், மற்ற நடிகர்கள் தங்களுடைய படங்களை வெளியிட மாட்டார்கள். ஏனென்றால் அந்த படங்கள் வசூலாகாது என்பதற்காக அப்படி செய்வார்கள். ஆனால், விஜயால் அங்கீகாரம் பெற்ற ஒருவர், அதாவது கோட் திரைப்படத்தில் விஜய் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்ததால் தான், அவருக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்து வந்தது. அப்படிப்பட்ட சிவகார்த்திகேயன். என் படத்தை விஜய்க்கு எதிராக முன்னிறுத்தாதீர்கள் என்று சொல்லி இருக்க வேண்டும்.
அவருக்கு தெரியாதா: பொங்கல் பண்டிகைக்கு நீண்ட விடுமுறை வரும், பண்டிகை என்பதற்காக இந்த தேதியில் படத்தை வெளியிடப்பட முடிவு செய்திருக்கலாம். ஆனால், என்னுடைய கேள்வி என்னவென்றால் முதலில் பராசக்தி படம் ஜனவரி 14-ம் தேதி தான் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின், எப்படி ஜனவரி 10ஆம் தேதிக்கு மாற்றினார்கள் என்பது தான் எனக்கு புரியவில்லை. சிவகார்த்திகேயன் இது அண்ணன், தம்பி பொங்கல் என்ற சொல்லலாம். 350 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டு ஒரு படத்தை எடுத்து இருக்கிறார்கள். பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஒரு படத்திற்கு ஒரு நாள் வசூல் போதுமா? அதோடு மட்டுமல்லாமல் நானும் விஜய்யும் நட்பாக தான் இருக்கிறோம் சில பேர் வன்மத்தை பரப்புகிறார்கள் என சொல்லி இருக்கிறார். அவர் என் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் மறைமுகமாக சிவகார்த்திகேயன் என்னை தான் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாமே பிளான்: எனக்கும் அவருக்கும் வேலி தகராறா, நான் ஒரு பத்திரிக்கையாளன், நல்லது செய்தால் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி அந்த செய்தியை மக்களிடம் சொல்வோம், தவறு செய்தால் அதையும் நாங்கள் சுட்டிக் காட்டுவோம் அப்படித்தான் சிவகார்த்திகேயனின் கடந்த கால தவறுகளை நாங்கள் மக்களிடம் கொண்டு சென்றோம். அதை புரிந்து கொள்ளாமல் வன்மத்தோடு தாக்கிறோம் என்று சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் வழி இல்லை. ஜனநாயகன் படத்தோடு மோதவேண்டும் என்று தயாரிப்பாளரை கட்டாயப்படுத்தியேதே சிவகார்த்திகேயன் தான் என்று பிஸ்மி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











