த்ரிஷா செய்தது பெரிய தப்பு.. விஜய் ஏன் கண்ட்ரோல் பண்ணல.. பிஸ்மி கேள்வி!

சென்னை: 27 வருட மணவாழ்க்கைக்கு பிறகு விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 2021ம் ஆண்டில் இருந்த இருவரும் பிரிந்து வாழ்கிறோம், நடிகையுடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதால் விவாகரத்து கேட்பதாக சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். சினிமா, வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்தில் இது பேசு பொருளாகி இருக்கும் நிலையில், வலைபேச்சு பிஸ்மி இதுகுறித்து தமிழ்நாடு டைம்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், சங்கீதா விவாகரத்து மனுவில் 2021 ஆம் ஆண்டில் இருந்தே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், உண்மை அது இல்லை 2017 ஆம் ஆண்டில் இருந்தே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இது யாருக்கும் தெரியாதபடி இசை வெளியீட்டு விழா, சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். 'மாஸ்டர்' படத்தின் இசைவெளியீட்டு விழாவிலும் இப்படித்தான் கலந்து கொண்டார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே இருவரும் பிரிந்து விட்டார்கள். சங்கீதாவின் மனுவில் கணவருக்கு நடிகையுடன் தொடர்பு இருந்தால், இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லி இருக்கிறார். ஆனால், உண்மையில் சங்கீதா, விஜய் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு பிரிந்த பிறகு தான், விஜய்க்கு அந்த நடிகையுடன் நட்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

Vijay Sangeetha Bismi
Photo Credit:

அமைதியாக இருக்கும் த்ரிஷா: இந்த விஷயத்தில் பலரும் த்ரிஷாவின் பெயரை குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டு வரும் போதும், த்ரிஷா கருத்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். ஆனால், நயினார் நாகேந்திரன் த்ரிஷாவையும் விஜய்யையும் இணைந்து பேசியதும் த்ரிஷா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ஆனால், இந்த விஷயத்தில் த்ரிஷா அமைதியாக இருக்க காரணம், சங்கீதா எந்த இடத்திலும் த்ரிஷாவின் பெயரை சொல்லவில்லை, தேவைப்பட்டால் நடிகையின் பெயரை எதிர்மனுதாராக சேர்ப்பேன் என்று தான் சொல்லி இருக்கிறார். அவர் பெயரை சொல்லவில்லை என்றாலும் அது த்ரிஷாவைத்தான் குறிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், சங்கீதா பெயரை குறிப்பிடாததால், த்ரிஷா எந்த பதிலும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார்.

த்ரிஷா செய்த தவறு: ஆனால், இந்த விஷயத்தில் த்ரிஷா செய்தது மிகப்பெரிய தவறு, அவர்கள் இருவருக்கும் என்ன ரிலேஷன்ஷிப் என்பதற்குள் நாம் போகவேண்டாம். விஜய்யுடன் இருக்கும் போட்டோவை போட்டால், என்ன பிரச்சனை வரும் என்று நன்றாக தெரிந்தும் த்ரிஷா செய்தது தவறு. ஏற்கனவே இருவர் பற்றி கிசுகிசு பரவி வரும் நேரத்தில், அனைவருக்கும் ஆதாரம் தரும்படி அவர் அந்த போட்டோவை பதிவிட்டு இருக்கக்கூடாது. அதே நேரம் விஜய்யும் த்ரிஷாவை கண்டித்து இருக்க வேண்டும். நீ என் தோழியாகவே இருந்தாலும், இப்படி போட்டோவை போட்டால் பிரச்சனை வரும், ஏற்கனவே என் குடும்பத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரும், வளர்த்த குழந்தைகள் இருக்கிறார்கள் என அவர் எடுத்து சொல்லி இதை தடுத்து, த்ரிஷாவை கண்ரோல் செய்து இருக்க வேண்டும், அதை விஜய் செய்ய தவறிவிட்டார். அதை விஜய் செய்து இருந்தால் விஜய், சங்கீதா இடையே பெரிய பிளவு வந்து இருக்காது என வலைப்பேச்சு பிஸ்மி அந்த பேட்டியில் பேசி உள்ளார். இவரின் இந்த பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X