அரசியல் சதியில் சிக்கிய சங்கீதா? பின்னணியில் இருக்கும் அரசியல் பிரபலம்.. விஜய்யின் மௌனம்..பிஸ்மி!

சென்னை: விஜய்யின் மனைவி கடந்த சில ஆண்டுளாக பொது நிகழ்ச்சிகளில் தென்படாததால் சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவின. ஆனால், குழந்தைகளின் கல்வி மற்றும் வெளிநாட்டுப் பணிகளுக்காக அங்கேயே தங்கியிருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து வலைபேச்சு பிஸ்மி, தமிழ்நாடு டைம்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், விஜய், சங்கீதா விஷயத்தை வெறும் விவாகரத்து விஷயமாக பார்க்க முடியாது. பொதுவாக விவாகரத்து விஷயத்தை ஊடகங்கள் பெரிதாக பேசக்கூடாது. ஒரு பத்திரிக்கையாளராக விஜய், சங்கீதா இருவரும் பிரிந்து விட்டார்கள் என்ற செய்தியை வெளியிடலாம் அது தான் ஊடகத்தின் கடமை. விவகாரத்துக்கு யார் காரணம், அவரா? இவரா? என புலனாய்வு செய்கிறேன் என்ற பெயரில் அவர்களை காயப்படுத்துவது சரியில்லை.

Vijay Sangeetha Suchitra

விவாகரத்து மனு: ஆனால், விஜய், சங்கீதா விவாகரத்து விஷயத்தை தனிப்பட்ட விஷயம் என்று நம்மால் கடந்து போக முடியவில்லை. விஜய், சங்கீதா இருவரும் சில ஆண்டுகளாக பிரிந்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, விஜயின் அரசியலையே காலி செய்ய வேண்டும் என சிலர் செய்த சதியாகத்தான் நான் இதை பார்க்கிறேன். சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தகவல் செய்த பேப்பர் எப்படி இணையத்தில் வெளியானது என்பது மிகப்பெரிய கேள்வி. இந்த கேள்விக்கு விடையை தேடினாலே இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெரிந்து விடும்.

அரசியல் சதி: சங்கீதா லண்டனை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு சென்னையில் எந்த உறவினரோ, நண்பரோ கிடையாது. அப்படி இருக்கும்போது அரசியல் ரீதியாக சங்கீதா பயன்படுத்தப்பட்டு இருக்கிறார். முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுடைய சகோதரி செல்வி, சங்கீதாவுடன் நட்பாக பழகி வருகிறார். முரசொலி செல்வம் இறந்த போது, சங்கீதா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இதைவைத்து பார்க்கும் போது, செல்வியுடன் சங்கீதா நெருக்கமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இதனால் சங்கீதாவை விஜய்யை வீழ்த்துவதற்காக திமுக பயன்படுத்தி விட்டது என்பது தெரிய வருகிறது.

அழிக்க நினைத்தார்கள்: இப்போது சங்கீதா செய்து இருப்பதை ஓராண்டுக்கு முன்பே செய்து இருந்தால் அது விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கும். பெண்கள் அனைவரும் விஜய் மீது கடுமையாக கோபமடைந்து இருப்பார்கள். அதே போல, தேர்தல் முடிந்து இரண்டு மூன்று மாதங்கள் கழித்து சங்கீதா வெளியிட்டு இருந்தால் அதுவும் விஜய்க்கு மிகப்பெரிய நெகட்டிவாக தான் மாறி இருக்கும். ஆனால், பல பெண்கள் இப்போது விஜய்க்கு ஆதரவாக தான் பேசி வருகிறார்கள். விஜய்யை அழிக்க வேண்டும் என இவர்கள் செய்த செயல் தற்போது விஜய்க்கு பிளஸ் ஆக அமைந்துவிட்டது. இப்படி பல விஷயம் நடந்து கொண்டு இருக்கும் போதும் விஜய் இதுகுறித்து வாய் திறக்காமல் இருக்கிறார். ஏன் என்றால், இந்த விஷயத்தை பொது இடத்தில் பேசவேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை, இதனால் அவர் நேரடியாக நீதிமன்றத்தில் தான் இதுபற்றி பேசுவார் என்று பிஸ்மி அந்த பேட்டியில் விரிவாக பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X