5 வருடம் சூர்யா, ஜோதிகா கோமாவில் இருந்தார்களா? சிவகுமாருக்கு பதிலடி கொடுத்த பிரபலம்!

சென்னை : தமிழகசட்டமன்ற தேர்தல் கடந்த 23ந் தேதி நடைபெற்ற போது தி நகர் தொகுதியில் மனைவியுடன் வாக்களித்த சிவகுமார். செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவக்குமார், யார் ஆட்சிக்கு டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும். குடிமக்களை குடிகார மக்களாக்கிட்டாங்க என பேசி இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள பாஜக ஆதரவாளர் சுமதி மேகவர்ணம், சிவகுமார் இத்தனை நாள் கோமாவில் இருந்தாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தலில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும். குடிமக்களை குடிகார மக்கள் ஆக்கியது போதும். இந்த குடியால் கிட்டத்தட்ட 40% மக்கள் நாசமாகி கொண்டு இருக்கிறார்கள். மதுபான கடைகளை கலைஞர் தொடங்கியதில் இருந்தே நான் மதுவிற்கு எதிரானவன்.கடைகளை மூடுவார்களா என தெரியாது. ஆனால், செய்தால் மிகவும் சந்தோஷப்படுவேன் என்று பேசி இருந்தார்.

Shivakumar Suriya jyothika

சிவகுமார் கோமாவில் இருந்தாரா: இதுகுறித்து பேசிய பாஜக ஆதரவாளர் சுமதி மேகவர்ணம், இத்தனை நாளாக சிவகுமார் கோமாவில் இருந்தாரா? அவர் மகன், மருமகள் எல்லாம் எங்கே போனார்கள். இதே அதிமுக ஆட்சியில் அனைவரும் பொங்குனாங்க. இப்போ அதிமுக தான் ஆட்சிக்கு வரபோகிறது என்று தெரிந்துவிட்டதால், குடி மக்கள் எல்லாம் குடிகாரர்களாகி விட்டார்கள் என்று பேசி தொடங்கி இருக்கிறார். அனைவரும் நேத்துத்தான் குடிகாரர்களாகினார்களா? 5 வருடமாக அனைவரும் குடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். 24மணி நேரமும் டாஸ்மாக்கில் சாராயம் கிடைக்கிறது. திரும்பும் பக்கம் எல்லாம் கஞ்சா. கள்ளசாராயத்தில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் எப்போ சிவகுமார் எங்கே போனார்.

இனி பேச ஆரம்பித்துவிடுவார்கள்: இவர்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள், அதிமுக ஆட்சிக்கு வரப்போகிறது என்று தெரிந்துவிட்டதும் வெளியில் வந்து கூவுகிறார். இனிமேல் சூர்யா, ஜோதிகா, சித்தார்த் போன்றவர்கள் பேச ஆரம்பித்துவிடுவார்கள். இந்த 5 வருடம் எல்லாம் கோமாவில் இருந்தார்களா... இனி அதிமுக ஆட்சி வந்ததும் இந்த சாம்பிகள் எல்லாம் உயிர் பெற்று பேச ஆரம்பித்துவிடுவார்கள் என சுமதி மேகவர்ணம் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X