»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

நடிகை பாபிலோனா, நடிகர் கார்த்திக் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் அளித்த பேட்டிகள்தான் கோலிவுட்டில்இப்போது ஹாட் டாபிக்.

பேட்டி எண் 1: பாபிலோனா

கவர்ச்சி நடிகை பாபிலோனா அளித்துள்ள பேட்டியில்,

நான் ஒரு முறை நடிகர் ஒருவரால் கர்ப்பமானேன். பிறகு அந்த கருவைக் கலைத்து விட்டேன். ப்ளு பிலிமில்எல்லாம் நான் நடிக்க வில்லை. கிராபிக்ஸ் மூலம் நான் நடித்ததுபோல் மாற்றி விட்டார்கள். அப்படி நான்நடித்திருந்தால் ஷகீலாவை விடப் பிரபலமாகி இருந்திருப்பேன். பிச்சை எடுத்தாலும் எடுப்பேனே தவிரவிபச்சாரத்தில் ஈடுபட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

தன்னைக் கர்ப்பமாக்கிய சத்தியமயமான ஒரு நடிகரை மிரட்டி பாபிலோனா பணம் பறித்ததாக முன்புகிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பேட்டி எண் 2: கார்த்திக்

நவரச நடிகர் கார்த்திக் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில்,

படப்பிடிப்பிற்குத் தாமதமாக வருகிறேன் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை. சில நேரம் லேட்டாக வந்தாலும்,அன்றைய ஷெட்யூலை முடிக்காமல் போனதில்லை.

பிரச்சனைகள் இருந்த காலத்தில் போதை ஊசி போடும்பழக்கம் எனக்கு இருந்தது. இப்போது இல்லை.

கடன் பிரச்சனை காரணமாக ஒரு காலத்தில் அயோத்திக்குப்பம் வீரமணி என்னை மிரட்டியது உண்மைதான்.இப்போது பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நிம்மதியாக குடும்பத்துடன் இருக்கிறேன். எனக்கு இரண்டுமனைவிகள் இருப்பது உண்மையே என்று கூறியுள்ளார்.

பேட்டி எண் 3: ஹரி

இயக்குநர் ஹரி அளித்துள்ள பேட்டியில்,

நான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகளே. தன்னுடைய அடுத்தபடம் தொடர்பாக ரஜினி இதுவரை என்னை அழைத்துப் பேசவில்லை என்று கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil