தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்..பொம்மி பிஏ.பிஎல் அவுரா பட்நாகர் பேட்டி!

சென்னை : குழந்தை நட்சத்திரமான அவுரா பட்நாகர், தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் 2011ம் ஆண்டு பிறந்தவர் அவுரா பட்நாகர்.

Bommi Fame Aurra Bhatnagar exclusive interview

அவுரா பட்நாகர் : தீப்தி மற்றும் விவேக் படோனியின் மகளான அவுரா பட்நாகர் , குழந்தையாக இருக்கும் போதே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அவுரா மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே பாரிஸ்டர் பாபு என்ற சீரியலில் நடித்து பிரபலமானார். பெங்காலி தொடரில், அவுரா போண்டினியாக நடித்திருந்தார்.

பொம்மி பிஏபில் : இந்த நெடுந்தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பொம்மி பிஏபில் என்ற பெயரில் ஒளிபரப்பானது. இந்த தொடரில் க்யூட்டாக நடித்த அவுராவை தமிழ் ரசிகர்கள் பொம்மி பொம்மி என அழைத்து வருகின்றனர். இந்நிலையில் பிலிமிபீட் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் அழகாக க்யூடாக பேசி உள்ளார்.

பேட்டி : அதில்,முதன் முதலில் கேமரா முன் நின்ற போது மிகவும் பயமாக இருந்தது. ஆனால், அம்மா கூடவே இருந்து எனக்கு தைரியத்தை கொடுத்தார்கள். அதனால் என்னால் சிறப்பாக நடிக்க முடிந்தது. நான் தற்போது 8வது படித்துக்கொண்டு இருப்பதால், நடிப்பு மற்றும் படிப்பு என இரண்டையும் சரியாக பராமரிப்பது சற்று சிரமமாக இருந்தாலும் சமாளித்து வருகிறேன்.

தமிழ் படத்தில் நடிப்பேன் : தென் தமிழகத்தில் எனக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள் அவர்கள் என்னை அன்போடு பொம்மி... பொம்மி என அழைப்பதைப் பார்க்கும் போதும் அவர்கள் என் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பார்க்கும் போதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று கூறிய அவுரா, தனது தமிழ் ரசிகர்களுக்காக க்யூட்டாக தமிழில் பேசினார்.

Bommi Fame Aurra Bhatnagar exclusive interview

அழகு குறிப்பு : மேலும்,தினமும் கேமிரா முன் நிற்பதால், எனக்கு முகம் கருமையாகிவிட்டது. இதனால், தினமும் சன் ஸ்கீம் மட்டும் பயன்படுத்தி வருகிறேன்.நீங்களும் தினமும் வெயிலில் சென்றால், சன் ஸ்கிரீன் பயன்படுத்துக்கள் என்று தனது ரசிகர்களுக்கு அழகு குறிப்புக்கான டிப்சும் கொடுத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X